இந்தியர்களின் உணவு பழக்கங்களில் பிரியாணி தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறது. உணவு பிரியர்கள் மட்டுமின்றி இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவாக இருக்கிறது. தென்னிந்தியாவில் பிரியாணிக்கு என்று ஒரு தனி கூட்டம் உண்டு என்றால் அது மிகை அல்ல.
இதனையும் படியுங்கள் : ருசியான அகத்திப்பூ பிரியாணி ஒரு முறையாவது இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!
பிரியாணிகளில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, ஃபிஷ் பிரியாணி, இறால் பிரியாணி, மஷ்ரூம் பிரியாணி, மற்றும் பன்னீர் பிரியாணி மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது வெஜிடபிள் பிரியாணி. மிகவும் சுவைமிக்க ஹெல்தியான பாலக் கீரை மற்றும் பன்னீர், முந்திரி மாதுளை சேர்த்து தெலுங்கானா மாநிலத்தின் செய்யும் பிரபலமான க்ரீன் வெஜிடபிள் பிரியாணி.
ஹைதிராபாத் கிரீன் வெஜ் பிரியாணி | Hyderabadi Green Veg Biryani
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 குக்கர்
- 1 மிக்ஸி
- 1 கரண்டி
தேவையான பொருட்கள்
- 1 கப் வேகவைத்த பாசுமதி
- 1 கட்டு பாலக்
- 1 உருளைக்கிழங்கு
- 2 பெரிய
- 1/4 கப் குடைமிளகாய்
- 1/4 கப் காளப்ளவர்
- 1/4 கப் பச்சை பட்டாணி
- 1/2 கப் பீன்ஸ்
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 டீஸ்பூன் கரம்
- 6 பச்சை மிளகாய்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1/4 டீஸ்பூன் மிளகு
- 1 துண்டு பட்டை, அண்ணாச்சி பூ
- 4 கிராம்பு
- 2 பிரிஞ்சி இலை
- 1/2 கப் பன்னீர்
- 1/4 கப் முந்திரி
- 2 டேபிள் ஸ்பூன் மாதுளை
- 2 டேபிள் ஸ்பூன் நெய்
- உப்பு தேவையானஅளவு
- எண்ணெய் தேவையானஅளவு
செய்முறை
- முதலில் காய்களை தனியாக வேக விட்டு எடுத்துக்கவும்.
- பாலக் கீரையை நன்றாக கழுவி காம்பு எடுத்து விட்டு அத்துடன் 1/2 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து 5 நிமிடம் வேக விட்டு ஆற விட்டு தண்ணி வடிகட்டி எடுத்த கீரையுடன் 4 பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸி ஜாரில் விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் குக்கர் அல்லது கடாய் வைத்து நெய் அல்லது எண்ணெய் ஊற்றி பிரிஞ்சி இலை, பட்டை, அண்ணாச்சி பூ, கிராம்பு, சீரகம் சேர்த்து வறுத்த பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- அத்துடன் வெங்காயம், 2 கீறின பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கிய பிறகு அரைத்து வைத்திருக்கும் பாலக் பச்சை மிளகாய் விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
- அத்துடன் தேவையான உப்பு, மற்றும் கரம் மசாலா சேர்த்து வதக்கின பிறகு குடைமிளகாய் மற்றும் வேக வைத்த காய்கறிகள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- நன்கு வதங்கிய பிறகு உதிரியாக வடித்து ஆற விட்ட பாசுமதி சாதம் சேர்த்து மெதுவாக அரிசி உடைந்து போகாமல் கலந்து கிளறி விடவும்.
- கடைசியாக பன்னீர், முந்திரி, மாதுளை சேர்த்து கலந்தால் க்ரீன் வெஜிடபிள் பிரியாணி தயார்.
- அழகுக்காக மேல் கொஞ்சம் பன்னீர், முந்திரி, மாதுளை முத்துக்கள் தூவி விட்டால் அட்டாகாசமான அருமையான ருசியுடன் கூடிய ஹைதிராபாத் க்ரீன் பிரியாணி சுவைக்க தயார்.