Home ஜூஸ் சுவையான நுங்கு இளநீர் ஜூஸ் இப்படி ஒரு முறை செஞ்சி பாருங்க! யாரும் வேண்டாம்னே சொல்ல...

சுவையான நுங்கு இளநீர் ஜூஸ் இப்படி ஒரு முறை செஞ்சி பாருங்க! யாரும் வேண்டாம்னே சொல்ல மாட்டாங்க!

உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய நுங்கையும் இளநீரையும் ருசித்து இருப்போம் ஆனால் அவற்றை வைத்து அருமையான ஆரோக்கியமான ஜூஸ் செய்தால் எப்படி இருக்கும்.. இளநீரும் நுங்கும் உடலை நீர்ச்சத்து குறையாமல் வைத்து கொள்ளும்.  உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது அதிகமான உடல் சூடு இருக்கிறவர்கள் இளநீரில் வெந்தயத்தை ஊறவைத்து குடித்தால் உடல் சூடு  குறைந்துவிடும்.

-விளம்பரம்-

இளநீரில் நிறைய நுண்ணூட்டச்சத்துகள் இருக்கின்றன. குறிப்பாக பொட்டாசியம், மக்னீசியம், நீர்ச்சத்து மற்றும் குளிர்ச்சித்தன்மை அதிக அளவில் காணப்படுகின்றன.அந்த மாதிரி நுங்கு உடலிற்கு ரொம்ப குளிர்ச்சியை தரக்கூடியது. நுங்கில் இருந்து தான் பதநீர், கள் தயாரிக்கிரார்கள். கோடைக்காலத்தில் ஏற்படும் வெப்பம் சார்ந்த நோய்களான வயிற்றுக்கழிச்சல், வயிற்று வலி, சூட்டினால் ஏற்படும் செரிமான உபாதைகளுக்கு நுங்கு நல்ல மருந்து. நுங்கு துவர்ப்புத்தன்மை உடையது.அதன் தோலுடன் சாப்பிட்டால் வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.

இந்த இளநீரையும் நுங்கையும் வச்சு எப்படி டேஸ்டியான ஒரு ஜூஸ் செய்து உடம்போட சூட்டை குறைப்பதற்கு ஆரோக்கியத்துக்கும் குளிர்ச்சி தரத்துக்கும் உடம்பை நீர் சத்து குறையாமல் பாதுகாப்பதற்கும் குடிக்க போறோம் அப்படினு பார்க்கலாம்.

Print
No ratings yet

நுங்கு இளநீர் ஜூஸ் | Ice Apple Tender Coconut Juice In Tamil

இளநீரில் நிறைய நுண்ணூட்டச்சத்துகள் இருக்கின்றன. குறிப்பாக பொட்டாசியம், மக்னீசியம், நீர்ச்சத்து மற்றும் குளிர்ச்சித்தன்மை அதிக அளவில் காணப்படுகின்றன.அந்த மாதிரி நுங்கு உடலிற்கு ரொம்ப குளிர்ச்சியை தரக்கூடியது. நுங்கில் இருந்து தான் பதநீர், கள் தயாரிக்கிரார்கள். கோடைக்காலத்தில் ஏற்படும் வெப்பம் சார்ந்த நோய்களான வயிற்றுக்கழிச்சல், வயிற்று வலி, சூட்டினால் ஏற்படும் செரிமான உபாதைகளுக்கு நுங்கு நல்ல மருந்து. நுங்கு துவர்ப்புத்தன்மை உடையது.அதன் தோலுடன் சாப்பிட்டால் வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Drinks
Cuisine: tamil nadu
Keyword: Ice Apple Tender Coconut Juice
Yield: 4
Calories: 206kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 இளநீர் வழுக்கை  தேங்காயோடு
  • 1 பனங்காய் நொங்கு
  • 1 டீஸ்பூன் கற்கண்டு

செய்முறை

  • மிக்ஸி ஜாரில் நுங்கின் சதை பகுதியை சேர்க்க வேண்டும்.
     
  • பின் இளநீரை ஊற்ற வேண்டும்
  • இளம் வழுக்கை தேங்காயை நறுக்கி சேர்க்கவும்.
  • இவைகளுடன் கற்கண்டை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து ஜூஸ் டம்ளரில் ஊற்ற வேண்டும்.
  • பிறகுஇந்த ஜூஸில் நுங்கு மற்றும் இளநீர் வழுக்கை தேங்காயை பொடியாக நறுக்கி சேர்த்தால் சுவையான உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய நுங்கு இளநீர் ஜூஸ் தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 206kcal | Carbohydrates: 20.4g | Cholesterol: 13.3mg | Sodium: 49.7mg | Potassium: 173.9mg | Vitamin A: 246IU | Calcium: 295.1mg | Iron: 0.2mg