காரசாரமாக இட்லி மஞ்சூரியன் 10 நிமிஷத்தில் செஞ்சி அசத்தி பாருங்க! உங்க வீட்ல 1 இட்லி கூட இனிமே வீணாகாது!

- Advertisement -

சைனீஸ் ரெசிபியான மஞ்சூரியன் எல்லா இடங்களிலும் மிகவும் ஃபேமஸ். பொதுவாக சைனீஸ் ரெஸ்டாரண்டில் கிடைக்கும் இந்த மஞ்சூரியன் ரெசிபி இப்பொழுது அனைத்து இடங்களிலுமே கிடைக்கும். என் வீட்டிலேயே கூட இந்த மஞ்சூரியன் ரெசிபிகளை நாம் மிகவும் சுவையாக செய்து சாப்பிடலாம். சிக்கன் மஞ்சூரியன் ,கோபி மஞ்சூரியன் ,காளான் மஞ்சூரியன், எக் மஞ்சூரியன் என பலவகையான மஞ்சூரியன் ரெசிப்பிகள் உள்ளன.

-விளம்பரம்-

இது அனைத்தையும் நம்மால் சைடு டிஷ் ஆக மட்டுமே வைத்து சாப்பிட முடியும். ஆனால் மெயின் டிஷ் ஆக சாப்பிட குடிக்க ஒரு சூப்பரான மஞ்சூரியனான இட்லி மஞ்சூரியனை பற்றி தான் இன்று நாம் பார்க்க போகிறோம். எப்பொழுதும் ஒரே மாதிரியாக இட்லி தோசை என்ன சாப்பிட்ட சலித்து போனவர்கள் அந்த இட்லியை வைத்து சூப்பரான ஒரு மஞ்சூரியன் செய்து கொடுங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -

குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்களும் கூட இந்த மஞ்சூரியனை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இதனை மெயின்டாக நீங்கள் சாப்பிட்டாலும் வயிற்றுக்கு போதுமானதாக இருக்கும். இல்லையெனில் மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் ஆக இந்த இட்லி மன்சூரியனை செய்து சில நேரங்களில் காலையில் வைத்த இட்லி மாலை வரையிலும் மீதி இருக்கும். அந்த இட்லிகளை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள் இட்லி மஞ்சூரியனாக செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இப்ப வாங்க இந்த இட்லி மஞ்சூரியனை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

இட்லி மஞ்சூரியன் | Idly Manchurian Recipe In Tamil

குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்களும் கூட இந்த மஞ்சூரியனை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.இதனை மெயின்டாக நீங்கள் சாப்பிட்டாலும் வயிற்றுக்கு போதுமானதாக இருக்கும். இல்லையெனில்மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் ஆக இந்த இட்லி மன்சூரியனை செய்து சில நேரங்களில்காலையில் வைத்த இட்லி மாலை வரையிலும் மீதி இருக்கும். அந்த இட்லிகளை அப்படியே சாப்பிடபிடிக்காதவர்கள் இட்லி மஞ்சூரியனாக செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.இப்ப வாங்க இந்த இட்லி மஞ்சூரியனை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Idly Manchurian
Yield: 4
Calories: 91kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 8 இட்லி
  • 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
  • 2 டேபிள் ஸ்பூன் கார்ன்பிளவர் மாவு
  • 2 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 டீஸ்பூன் துருவிய இஞ்சி
  • 1/4 டீஸ்பூன் துருவிய பூண்டு
  • 2 பச்சை மிளகாய்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் இட்லிகளை தேவையான வடிவத்தில் வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.கடலை மாவு மற்றும் கார்ன்பிளார் மாவுடன் இட்லிகளை கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி துருவி துருவிய பூண்டு சேர்த்து கிளறவும்.
  • மிளகாய் தூள் மற்றும் சீரகுத்தூளை அடுப்பை மிதமாக வைத்துக்கொண்டு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
  • பின்னர் கலந்து வைத்துள்ள இட்லிகளை அதனுடன் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவேண்டும்.
  • ஒரு ஐந்து நிமிடங்கள் அடுப்பில் மிதமான தீயில் வைத்து கிளறினால் இட்லி மஞ்சுரியன் தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 91kcal | Carbohydrates: 19g | Protein: 7.6g | Fiber: 4g