ஜவ்வரிசி புட்டு இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடிய வகையில் இருக்கும்.
-விளம்பரம்-
இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்ள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
ஜவ்வரிசி புட்டு | Javarisi Puttu Recipe In Tamil
ஜவ்வரிசி புட்டு இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடிய வகையில் இருக்கும்.இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்ள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Yield: 4 people
Equipment
- கடாய்
தேவையான பொருட்கள்
- 200 கிராம் நைலான் ஜவ்வரிசி
- ½ கப் பச்சரிசி மாவு
- 1 மூடி தேங்காய்
- 100 கிராம் சீனி
- 3 ஏலக்காய்
- ¼ டீஸ்பூன் உப்பு
செய்முறை
- முதலில் பச்சரிசியில் தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி தண்ணீரை வடித்து விட்டு வெயிலில் உலர்த்தவும். பின்னர் அதை மிஸினில் கொடுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- அடுத்து அரைத்த மாவை வெறும் வாணலியில் போட்டு வறுத்து நிறம் மாறுவதற்கு முன் எடுத்து விடவும். இது ஒரு வருடம் வரை வீணாகாமல் இருக்கும்.
- தேங்காயை துருவிக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி முதல் நாள் இரவே ஊற வைத்து விடவும்.
- இல்லை உடனே செய்ய வேண்டும் என்றால் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து அதில் ஜவ்வரிசியை போட்டு அரை மணிநேரம் ஊற வைத்து செய்யவும்.
- மறுநாள் ஊற வைத்த ஜவ்வரிசியை எடுத்து தண்ணீரை வடித்து விட்டு, ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். பிறகு ஜவ்வரிசியுடன் உப்பு, தயாரித்து வைத்திருக்கும் அரிசி மாவு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
- ஒரே அளவிலான 5 சிறிய கிண்ணங்கள் அல்லது சிறிய டம்ளர்களை எடுத்துக் கொள்ளவும்.
- அடுத்து ஒரு கிண்ணத்தில் நெய் தடவி முதலில் தேங்காய் துருவலை கால் பகுதி அளவு வைத்துக் கொள்ளவும்.
- பிறகு அதில் கலந்து வைத்திருக்கும் ஜவ்வரிசியை முக்கால் பகுதி வைத்து அதன் மேலே மீண்டும் கால் பகுதி தேங்காய் துருவலை வைக்கவும்.
- இதே போல 5 கிண்ணங்களிலும் ஜவ்வரிசி கலவை மற்றும் தேங்காயை வைத்துக் நிரப்பவும். இட்லி பானையில் 2 கப் தண்ணீர் ஊற்றி சூடுப்படுத்தவும்.
- அதில் இட்லி தட்டை வைத்து ஜவ்வரிசி, தேங்காய் கலவை நிரப்பிய கிண்ணங்களை வைக்கவும். இட்லி பானையை மூடி வைத்து 8 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின்னர் வெந்த ஜவ்வரிசி புட்டை எடுத்து ஒரு தட்டில் கவிழ்த்து அதனுடன் மீதமுள்ள தேங்காய் துருவல், சீனி மற்றும் பொடி செய்து வைத்திருக்கும் ஏலக்காய் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
- தேவைப்பட்டால் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறலாம்.