கடலை மாவை கரைச்சு அதுல இருந்து பூந்தி செஞ்சு லட்டு செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனா ஜவ்வரிசியை வைத்து லட்டு செஞ்சு சாப்பிட்டு இருக்க மாட்டோம். கடலை மாவை கரைக்காமல் பூந்தி செய்யாமல் ஈஸியா ஜவ்வரிசியை ஊற வைத்து செம்ம டேஸ்ட்டா ஒரு லட்டு செய்ய முடியும். இந்த ஜவ்வரிசி லட்டு சாப்பிடுவதற்கு மோதிச்சூர் லட்டு மாதிரியே இருக்கும். பொதுவா எல்லாருக்கும் பெரிய பூந்தி லட்ட விட இந்த மோதிச்சூர் லட்டு ரொம்பவே பிடிக்கும்.
ஆனா உங்களால கடலைமாவு கரைச்சு அதுல இந்த லட்டு செய்ய முடியல அப்படின்னா ஈஸியா ஜவ்வரிசி வச்சு நீங்க சூப்பரா இந்த லட்டு செஞ்சு சாப்பிடலாம். தீபாவளிக்கு எல்லார் வீட்டிலும் பலகாரங்கள் செய்வோம் அப்படி செய்யும் போது இந்த ஜவ்வரிசி லட்டும் சேர்த்து செஞ்சு பாருங்க கண்டிப்பா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க.
உங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட இந்த சுவையான ஜவ்வரிசி லட்டும் செஞ்சு கொடுங்க கண்டிப்பா சாப்பிட்டு உங்களை பாராட்டிட்டு தான் போவாங்க. சின்ன குழந்தைகள் ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கக் கூடிய ஜவ்வரிசி லட்டு எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்
ஜவ்வரிசி லட்டு | Javvarisi Laddu Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
Ingredients
- 1 கப் ஜவ்வரிசி
- 3/4 கப் சர்க்கரை
- 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
- 10 முந்திரிபருப்பு
- 2 டீஸ்பூன் நெய்
- 1/4 டீஸ்பூன் கேசரி பவுடர்
Instructions
- முதலில் ஜவ்வரிசியை 12 மணி நேரம் நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும்
- ஒரு கடாயில் நெய் ஊற்றி ஊற வைத்துள்ள ஜவ்வரிசியை சேர்த்து நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும்
- பிறகு அதில் சர்க்கரை கேசரி பவுடர் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- அனைத்தும் நன்றாக சேர்ந்து கடாயில் ஒட்டாதவாறு வரும்வரை நன்றாக கிளற வேண்டும்
- ஏலக்காய் தூள் முந்திரி பருப்பு சேர்த்து அல்வா பதத்திற்கு வந்த உடன் இறக்கி சிறு உருண்டைகளாகபிடித்து வைத்தால் சுவையான ஜவ்வரிசி லட்டு தயார்