- Advertisement -
கடலை பருப்பு பணியாரம் இது போன்று ஒரு முறை செய்து குழந்தைகளுக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கும் கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. அதுமட்டும் அல்லாமல் மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும்.
-விளம்பரம்-
எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
- Advertisement -
கடலைப்பருப்பு பணியாரம் | Kadalai Paruppu Pniyaram Recipe In Tamil
கடலை பருப்பு பணியாரம் இது போன்று ஒரு முறை செய்து குழந்தைகளுக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கும் கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. அதுமட்டும் அல்லாமல் மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும்.எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Yield: 4 people
Equipment
- கடாய்
தேவையான பொருட்கள்
- 2 கப் மைதா மாவு
- 2 கப் கடலை பருப்பு
- 1½ கப் பொடித்த வெல்லம்
- 1 தேக்கரண்டி சர்க்கரை
- 2 டீஸ்பூன் ஏலக்காய் பொடி
- ½ கப் தேங்காய் துருவல்
- 1 டீஸ்பூன் நெய்
- ½ டீஸ்பூன் உப்பு
- எண்ணெய் பொறிக்க தேவையான அளவு
செய்முறை
- முதலில் குக்கரில் கடலை பருப்பை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தில் மைதா மாவு மற்றும் சர்க்கரை, உப்பு , சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி சற்று தளர்வாக பிசைந்துகொள்ளவும்.
- அத்துடன் நெய் சேர்த்து கலந்து வைக்கவும்.
- பின்பு வேக வைத்த கடலை பருப்புடன் தேங்காய் துருவல், பொடித்த வெல்லம், ஏலக்காய் பொடி, சேர்த்து பிடையவும்.
- பிசைந்த பருப்பு கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
- அடுத்து ஒரு வாணலில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்த உருண்டைகளை மைதா மாவு கலவையில் தேய்த்தெடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
- இப்பொழுது கடலைப்பருப்பு பணியாரம் தயார்.