இட்லி, தோசைக்கு தொட்டுக்க கடப்பா கார‌ சட்னி! இனி அருமையான சட்னி ரெசிபி இப்படி கூட செய்யலாம்!

- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலும் பெண்களும் வேலைக்கு செல்லும் சூழ்நிலையில் இருக்கிறார்கள். அப்படி செல்லும் நேரங்களில் எந்த ஒரு சமையலும் சீக்கிரத்தில் செய்து முடித்து கிளம்பத் தான் பார்ப்பார்கள். அப்படி விரைவாக செய்யக்கூடிய உணவுகளில் எப்போதும் இட்லி முதலிடம் வகிக்கிறது.

-விளம்பரம்-

இந்த இட்லி விரைவில் செய்ய மட்டுமல்லாமல் சுவையிலும் சரி, ஆரோக்கியத்திலும் சரி முதலிடம் தான். இந்த இட்லிக்கு பொதுவாக தக்காளி சட்னி,சாம்பார்,புதினா சட்னி, இஞ்சி சட்னி என்று பல விதமான சட்னிகளை செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். சட்னிகளின் வரிசையில் இன்று நாம் சூப்பரான ,காரசாரமான கடப்பா சட்னியை வீட்டில் செய்து சாப்பிட்டால் அதன் ருசிக்கு தட்டில் எத்தனை இட்லி வைத்து கொடுத்தாலும் அனைத்தும் காலி ஆகி விடும்.

- Advertisement -

இட்லிக்கு எப்பொழுதும் ஒரே மாதிரி சட்னி செய்து போரடித்தால், கடப்பா சட்னி இப்படி வித்தியாசம் முறையில் செய்து பாருங்கள், ருசி அட்டகாசமாக இருக்கும். அவசரமான வேளைகளில் செய்யக் கூடிய ஒரு சுவையான அதே நேரத்தில் நல்ல காரசாரமான ஒரு சட்னியை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Print
2.67 from 3 votes

கடப்பா கார சட்னி | Kadappa Kaara chutney Recipe In Tamil

விரைவாக செய்யக்கூடிய உணவுகளில் எப்போதும் இட்லி முதலிடம் வகிக்கிறது. இந்த இட்லி விரைவில் செய்ய மட்டுமல்லாமல் சுவையிலும் சரி, ஆரோக்கியத்திலும் சரி முதலிடம் தான். இந்த இட்லிக்கு பொதுவாக தக்காளி சட்னி,சாம்பார்,புதினா சட்னி, இஞ்சி சட்னி என்று பல விதமான சட்னிகளைசெய்து சாப்பிட்டு இருப்பீர்கள். சட்னிகளின் வரிசையில் இன்று நாம் சூப்பரான ,காரசாரமான கடப்பா சட்னியை வீட்டில் செய்து சாப்பிட்டால் அதன் ருசிக்கு தட்டில் எத்தனை இட்லி வைத்து கொடுத்தாலும் அனைத்தும் காலி ஆகி விடும். இட்லிக்கு எப்பொழுதும் ஒரே மாதிரி சட்னி செய்து போரடித்தால், கடப்பா சட்னி இப்படி வித்தியாசம் முறையில் செய்து பாருங்கள், ருசி அட்டகாசமாக இருக்கும். அவசரமான வேளைகளில் செய்யக் கூடிய ஒரு சுவையான அதே நேரத்தில் நல்ல காரசாரமான ஒரு சட்னியை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time5 minutes
Course: chutney
Cuisine: tamil nadu
Keyword: Kadappa Kaara Chutney
Yield: 4
Calories: 40kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 2 பெரிய வெங்காயம்
  • 2 மீடியம் சைஸ் தக்காளி
  • 4 பெரிய பல் பூண்டு
  • புளி நெல்லிக்காய் அளவு
  • கல் உப்பு ருசிக்கு
  • 5 சி. மிளகாய்
  • 3 காஷ்மீரி மிளகாய்

தாளிக்க

  • 2 சிவப்பு மிளகாய்
  • 3/4 டீ ஸ்பூன் கடுகு
  • 1 ஆர்க்கு கறிவேப்பிலை
  • 3 1/2 டேபிள்ஸ்பூன் ந.எண்ணெய்

செய்முறை

  • மிக்ஸி ஜாரில், பூண்டு, புளி, காஷ்மீரி மிளகாய், சிவப்பு மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
     
  • வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும். அரைத்த விழுதை பௌலுக்கு மாற்றி கொள்ளவும். தக்காளியை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
     
  • அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில், நல்லெண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, மிளகாய், கறிவேப்பிலை, தாளித்ததும், அரைத்த வெங்காய விழுதை சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும்.
  • வதக்கினதும்,தக்காளி விழுதை சேர்த்து நன்கு வதக்கி, மேலே காய்ச்சாத நல்லெண்ணெய், கறிவேப்பிலையை போட்டு, அடுப்பை அணைத்து விடவும்.
  • பிறகு நன்கு கலந்து பௌலுக்கு மாற்றவும். இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான கடப்பா காரச் சட்னி தயார்.

Nutrition

Serving: 4g | Calories: 40kcal | Carbohydrates: 9g | Protein: 1.9g | Fat: 0.4g | Potassium: 322mg | Fiber: 1.5g