காரசாரமாக கடப்பா பூண்டு பொடி இப்படி செய்தால் இட்லி, தோசை, சாதம் எது கூட வேண்டுமானாலும் சாப்பிடலாம்!

- Advertisement -

இட்லி, தோசை, சாதத்துக்கு ஏத்த மாதிரி ரொம்பவே சுவையா காரசாரமா ஒரு பூண்டு பொடி செய்ய இருக்கோம். இந்த பூண்டு பொடிய கடப்பா ஸ்டைல்ல செய்ய போறோம். இந்த பூண்டு பொடி ரொம்பவே நல்ல டேஸ்ட்டா காரமா இருக்க போகுது. பொதுவாக ஆந்திர மாநிலங்கள்ல ரொம்பவே பேமஸ்னா அதுக்கு காரசாரமான உணவுகளுக்கு தான்.

-விளம்பரம்-

அப்படியே காரசாரமான உணவுகளுக்கு ஃபேமஸான ஆந்திரா மாநிலத்திலிருந்து சுவையான நிறைய உணவுகள் இருக்கு. அதுல இப்போ நம்ம கடப்பா ஸ்டைலில் பூண்டு பொடி செய்ய போறோம். இந்த பூண்டு பொடிய இட்லி , தோசை, பொடி இட்லி, பொடி தோசை, கல் தோசை, சாதம் எல்லாத்துக்கும் சேர்த்து சாப்பிடும்போது ரொம்பவே சுவையா இருக்கும். அப்படி எல்லா உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுற மாதிரியான இந்த பூண்டு பொடி உடலுக்கு அவ்ளோ நன்மை கொடுக்கப்போவது. பூண்டு சேர்த்திருக்க அதனால இது வாயு பிரச்சனைகளை குறைப்பதற்கு பயன்படுத்தப்படும்.

- Advertisement -

இந்த பூண்டு பொடி சின்னவங்களில் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே சாப்பிடலாம். ஆனால் குழந்தைகளுக்கு கொடுக்கும்போது காரத்துக்கு  நீங்க மிளகாய் குறைவா சேர்த்து பொடி பண்ணிக்கணும். அப்பதான் குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. அதிக அளவு காரத்தை சின்ன வயசுலயே பழக்காம நார்மலா கொஞ்சம் கொஞ்சமா காரத்தோட அளவுகள் அதிகப்படுத்தி பழக்கப்படுத்தனும் குழந்தைகளுக்கு. அதனால முதல்ல மிளகாய் மட்டும் குழந்தைகளுக்கு கொடுக்க போறீங்கன்னா கம்மி பண்ணிக்கோங்க . இந்த சுவையான காரசாரமான பூண்டு பொடி எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க.

Print
5 from 1 vote

கடப்பா பூண்டு பொடி | Kadappa Poondu Podi Recipe In Tamil

பூண்டு பொடி சின்னவங்களில் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே சாப்பிடலாம். ஆனால் குழந்தைகளுக்கு கொடுக்கும்போது காரத்துக்கு  நீங்க மிளகாய் குறைவா சேர்த்து பொடி பண்ணிக்கணும். அப்பதான் குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. அதிக அளவு காரத்தை சின்ன வயசுலயே பழக்காம நார்மலா கொஞ்சம் கொஞ்சமா காரத்தோட அளவுகள் அதிகப்படுத்தி பழக்கப்படுத்தனும் குழந்தைகளுக்கு. அதனால முதல்ல மிளகாய் மட்டும் குழந்தைகளுக்கு கொடுக்க போறீங்கன்னா கம்மி பண்ணிக்கோங்க . இந்த சுவையான காரசாரமான பூண்டு பொடி எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க.
Prep Time5 minutes
Active Time3 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: andhra
Keyword: Kadappa Poondu Podi
Yield: 4
Calories: 213kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 12 காய்ந்தமிளகாய்
  • 20 பல் பூண்டு
  • 1 கப் உளுந்து
  • 1 கப் கடலைப்பருப்பு
  • 1 ஸ்பூன் தனியா விதைகள்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் மிளகு
  • 1/4 கப் கொப்பரை தேங்காய் துருவல்
  • 1/2 ஸ்பூன் பெருங்காயதூள்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் தோலோடு உள்ள பூண்டை எடுத்து இஞ்சிக்கல்லில் நசுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி நசுக்கி வைத்துள்ள பூண்டை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பூண்டுநன்றாக வறுபட்டால் தான் இந்த பொடியை ஒரு மாதம் வரைக்கும் வைத்து பயன்படுத்தி கொள்ளலாம். பூண்டை நன்றாக வறுத்தெடுத்து ஆற வைத்து கொள்ளவேண்டும்.
     
  •  பிறகு அதே கடாயில் உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  •  பிறகு அதில் தனியா விதைகள், சீரகம், மிளகு சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து ஆற வைத்துக் கொள்ளவேண்டும். பின்பு அதில் துருவிய கொப்பரை தேங்காய் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  •  பிறகு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாயை நன்றாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.  வறுத்தெடுத்த பொருட்கள் முழுவது ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய் முதலில் சேர்த்து அரைக்க வேண்டும்.
  •  அப்பொழுது மிளகாய் ஒன்று இரண்டாகத்தான் அரைந்திருக்கும். பிறகு அதில் பூண்டைத் தவிர மற்ற வறுத்த பொருட்களை எல்லாம் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  •  பிறகு அதில் வறுத்து வைத்துள்ள பூண்டு, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக பொடித்து எடுத்து வைத்துக் கொண்டால் இட்லி, தோசை, சாதத்தோடு சாப்பிடுவதற்கு சூப்பரான கடப்பா ஸ்டைல் பூண்டு பொடி தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 213kcal | Carbohydrates: 34.48g | Fat: 13g | Cholesterol: 1mg | Sodium: 120mg | Potassium: 19.22mg | Fiber: 8.7g