கந்த சஷ்டி விரதம் இந்த மாதம் எப்போது துவங்குகிறது? விரதம் எப்படி இருப்பது ? விரதத்தின் பலன்கள் என்ன?

- Advertisement -

சஷ்டி விரதம் என்பது மாதம்தோறும் வந்தாலும் ஐப்பசி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் ஆறு நாட்கள் பெரும் கந்தசஷ்டி விழாவாக கொண்டாடப்படுகின்றது. இந்த கந்த சஷ்டி விழாவில் முருகப் பெருமான் சூரபத்மனை வதம் செய்து தெய்வானையை திருக்கல்யாணம் செய்வதோடு இந்த விரதம் முடிவடைகின்றது. இந்த சஷ்டி விரதத்தில் ஆறு நாட்களும் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டு நாம் வேண்டியவற்றையெல்லாம் பெற்றுக்கொள்ளலாம். இந்த கந்த சஷ்டி விரதத்திற்கு பிரபலமான படைவீடாக திருச்செந்தூர் விளங்குகின்றது. இந்த திருச்செந்தூரில் இருந்து தான் சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்து ஜெயந்தி நாதராக அருள் புரிகிறார். திரளான பக்தர்கள் திருச்செந்தூர் சென்ற அங்கேயே 6 நாட்கள் தங்கி விரதம் இருந்து சூரசம்ஹாரத்தை பார்த்து திருச்செந்தூர் கடலில் நீராடி அடுத்த நாள் முருகப்பெருமானின் திருக்கல்யாணத்தை கண்டு களித்து பின் வீடு திரும்புவார்கள். இப்படி இந்த கந்த சஷ்டி விழாவை முறையாக எப்படி விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

-விளம்பரம்-

கந்த சஷ்டி விரத நாட்கள்

இந்த வருடம் கந்தசஷ்டி நவம்பர் 13 தேதி துவங்கி நவம்பர் 19 தேதி அன்று முடிவடைகிறது.

- Advertisement -
  1. நவம்பர் 13 தேதி திங்கள்கிழமை அன்று கந்த சஷ்டி விழா துவங்குகிறது.
  2. நவம்பர் 14 தேதி  (செவ்வாய் கிழமை  முதல் நவம்பர் 17 தேதி வரை)  2 முதல் 5 ஆம் நாள் வரை முருக பெருமான் வேல் வாங்குதல், சூரபத்மனிடம் தூது அனுப்புதல் போர் துவங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நாடக வடிவில் நடைபெறும். சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் பார்வதிதேவியிடம் இருந்து வேல் வாங்கி அதன் சக்தி தாளாமல் முருக பெருமானுக்கு வியர்வை ஏற்படும் விழா சிறப்பாக நடைபெறும்.

3.  நவம்பர்  18ஆம் தேதி ஆறாம் நாள் சனிக்கிழமை  அன்று சூரசம்ஹாரம் நடைபெறும்.

  1. நவம்பர்  19 ஆம் தேதி  ஏழாம்நாள் ஞாயிறு அன்று திருக்கல்யாணம் நடைபெறும்.

பக்தர்கள் இந்த கந்த சஷ்டி நாளில் கோவிலிலோ அல்லது இல்லத்திலோ பூஜைகளை செய்யலாம். இந்த கந்த சஷ்டி விழா நிகழ்ச்சிகள் மாலை 6 மணிக்கு துவங்கும்.

கந்த சஷ்டிவிரத முறை

-விளம்பரம்-

இந்த கந்த சஷ்டி விரதமுறையை அவரவர் தங்களால் முடிந்தது மாதிரியாக விரதங்களை மேற்கொள்வார்கள்.

  1. சிலர் ஆறு நாட்களும் வெறும் நீர் மட்டும் மருந்தே சூரசம்காரம் முடிந்த பிறகு குளித்துவிட்டு கோவிலில் கொடுக்கும் பிரசாதத்தை உண்டு விரதத்தை முடிப்பார்கள்.

2.சிலர் சஷ்டி அன்று மட்டுமே விரதம் இருந்து சூரசம்ஹாரம் முடித்த பிறகு விரதத்தை முடித்துக் கொள்வார்கள்.

3.சிலர் ஆறு நாட்கள் பால் மட்டுமே அருந்தி விரதம் இருப்பார்கள்.

-விளம்பரம்-
  1. சிலர் இளநீர் மட்டுமே அருந்தி விரதம் இருப்பார்கள்.
  2. இன்னும் சிலர் கடுமையான விரதமாக வெறும் மிளகை மட்டும் உணவாக எடுத்துக் கொண்டு விரதம் இருப்பார்கள். இப்படி விரதம் இருந்தவர்கள் விரதத்தை முடிப்பதற்கு திருக்கல்யாணத்தன்று நடைபெறும் திருக்கல்யாண விருந்தோடு விரதத்தை முடித்துக் கொள்வார்கள்.

கந்தசஷ்டி விரத பலன்கள்

  1. தீய குணங்களான ஆணவம், கன்மம், மாயை, குரோதம், காமம் பேராசை போண்றவற்றை விடுத்து நல்ல எண்ணங்களை பெறுவதற்காக இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது.
  2. இந்த விரதம் இருப்பதன் மூலமாக நம்மில் உள்ள குறைகள் எல்லாம் விலகி நன்மைகள் சேருவதற்கும். நீங்கள் நினைக்கும் அனைத்து செல்வங்களும் உங்களை வந்து சேரவும். அது மட்டுமல்லாது முருகப்பெருமான் சூரபத்மனை அளித்து வெற்றி கொண்ட நாளாக இருப்பதால் இந்த நாளில் விரதம் இருந்து இறைவனை வேண்டிக் கொள்வதால் உங்கள் வாழ்விலும் அனைத்து வெற்றிகளும் வந்து உங்களை சேரும்.
  3. சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்பது பழமொழி ஆனால் இதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால் சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பையாகிய கருப்பையில் குழந்தை பேறு வரும் என்பதுதான். ஆகையால் இந்த சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு நிச்சயமாக குழந்தை பேறு கிடைக்கும். குழந்தை செல்வத்தை வழங்குவதில் மிகவும் முக்கியமான விரதமாக இந்த கந்த சஷ்டி விரதம் கருதப்படுகிறது. இந்த கந்த சஷ்டி விரதத்தை மேற்கொண்டால் உங்களுக்கு 16 வகையான செல்வங்களையும் முருகப் பெருமான் நிச்சயமாக அருள்வார்.

கந்தசஷ்டி விரதத்தின் போது செய்ய வேண்டியவை

இந்த கந்த சஷ்டி விரதத்தில் அன்று முருகப்பெருமானின் கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும். உங்களுக்கு தெரிந்த முருகப் பெருமானின் மந்திரங்களை சொல்லியும் வேண்டுதல்களை செய்து கொள்ளலாம் .

குழந்தை பேரு வேண்டுபவர்கள் கூற வேண்டிய திருப்புகழ் பாடல்

செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
     திருமாது கெர்ப்ப …… முடலூறித்

தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
     திரமாய ளித்த …… பொருளாகி

மகவாவி னுச்சி விழியாந நத்தில்
     மலைநேர்பு யத்தி …… லுறவாடி

மடிமீத டுத்து விளையாடி நித்த
     மணிவாயின் முத்தி …… தரவேணும்

முகமாய மிட்ட குறமாதி னுக்கு
     முலைமேல ணைக்க …… வருநீதா

முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
    மொழியேயு ரைத்த …… குருநாதா

தகையாதெ னக்கு னடிகாண வைத்த
     தனியேர கத்தின் …… முருகோனே

தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
     சமர்வேலெ டுத்த …… பெருமாளே.

இந்த பாடலை கந்த சஷ்டி விரதத்தில் பாராயணம் செய்து முருகபெருமானின் அருளால் குழந்தை செல்வத்தை பெற்று கொள்ளுங்கள். முழு நம்பிக்கையோடு விரதம் இருந்து பாடலை பாராயணம் செய்து அனைத்து செல்வங்களையும் பெற்று கொள்ளுங்கள்.