காரைக்குடி நண்டு தண்ணீர் குழம்பு இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

அட்டகாசமான காரைக்குடி நண்டு தண்ணீர் குழம்பு எப்படி செய்வது என்று தான் பார்க்க போகிறோம் !!!!நண்டு மசாலா ஒரு அசைவ உணவு.அசைவ சாப்பாடு சொல்லவே வேண்டாம் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. அசைவத்திலும் பலவகை ரெசிபி உள்ளது கோழி, மீன், நண்டு இவற்றை வைத்து குழம்பு, வறுவல், போன்றவற்றை செய்து சாப்பிடுவார்கள்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : கமகமக்கும் கிராமத்து மசாலா மீன் குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி தான்!

- Advertisement -

நண்டு பொதுவாக அனைத்து நாட்களிலும் எளிதாக கிடைக்கும் ஒரு அசைவம் ஆகும். பொதுவாக நண்டு ரசம் நண்டு கிரேவி போன்றவற்றை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். இந்நிலையில் கரைக்குடி நண்டு தண்ணீர் குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.

Print
5 from 1 vote

காரைக்குடி நண்டு தண்ணீர் குழம்பு | Karaikudi Nandu kulambu Recipe in Tamil

அட்டகாசமான காரைக்குடி நண்டு தண்ணீர் குழம்பு எப்படி செய்வது என்று தான் பார்க்க போகிறோம். நண்டு மசாலா ஒரு அசைவ உணவு.அசைவ சாப்பாடு சொல்லவே வேண்டாம் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. அசைவத்திலும் பலவகை ரெசிபி உள்ளது கோழி, மீன், நண்டு இவற்றை வைத்து குழம்பு, வறுவல், போன்றவற்றை செய்து சாப்பிடுவார்கள். பொதுவாக நண்டு ரசம் நண்டு கிரேவி போன்றவற்றை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.
Prep Time15 minutes
Active Time20 minutes
Total Time35 minutes
Course: LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: Nandu, நண்டு
Yield: 5 People

Equipment

  • 1 குழம்பு பாத்திரம்
  • 1 கரண்டி
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1/ கிலோ நண்டு
  • 20 சின்ன வெங்காயம்
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 2 பட்டை
  • 8 பல் பூண்டு
  • 1/ கப் தேங்காய் துருவல்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 தக்காளி
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1/ டீஸ்பூன் வெந்தயம்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • எண்ணெய் தேவைக்கேற்ப
  • உப்பு தேவைக்கேற்ப

செய்முறை

  • நண்டை கழுவி சுத்தம் செய்து, உப்பு போட்டு பத்து நிமிடம் வேகவைத்துக் கொள்ளவும்.
  • சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பூண்டை தோல் உரித்து தட்டி வைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலுடன் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் வெங்காயம், கத்தாpக்காய், தக்காளி ஆகியவற்றை ஒரு கடாயில் போட்டு 2 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும்.
  • பிறகு அதனுடன் மிளகாய் தூள், தேங்காய் விழுது, உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
  • காய்கறிகள் வெந்ததும் நண்டை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
  • பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சோம்பு, பட்டை, சீரகம், வெந்தயம், பூண்டு போட்டு சிவக்க வதக்கி குழம்பில் சேர்க்கவும்.
  • பின்னர் கொத்தமல்லித் தழையை சேர்த்து பறிமாறவும்.

Nutrition

Serving: 100g | Protein: 18g | Fat: 0.7g | Saturated Fat: 0.2g | Cholesterol: 97mg | Sodium: 395mg | Vitamin C: 5mg | Calcium: 9mg | Iron: 2mg