நமது பாரம்பரியமான மற்றும் நெல்லை ஃபேமஸ் கருப்பட்டி பணியாரம் இப்படி சுலபமாக வீட்டிலயே செய்து பாருங்கள்!

- Advertisement -

பணியாரத்தில் பல்வேறு வகைகள் உள்ளது நெய் பனியாரம் கார பணியாரம் இனிப்பு பணியாரம் காய்கறி பணியாரம் என நிறைய பணியாரங்கள் நாம் சாப்பிட்டு இருப்போம். ஆனால் கிராமங்களில் அடிக்கடி செய்யக்கூடிய பாரம்பரியமான முறைகள் செய்யக்கூடிய கருப்பட்டி பணியாரம் தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம். பொதுவாக பெண் குழந்தைகள் கருப்பட்டியை சேர்த்துக் கொள்வது அவர்களது கர்ப்பப்பைக்கு மிகவும் ஆரோக்கியமானது.

-விளம்பரம்-

பெண் குழந்தைகள் மட்டுமில்லாமல் அனைவருமே கருப்பட்டியை சேர்த்துக் கொள்ளலாம் அது மற்ற சர்க்கரைகளை விட உடம்பிற்கு மிகவும் ஆரோக்கியமானது. பணியாரம் என்றால் நிறைய குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். பொதுவாக பணியாரத்தை காலை உணவாக அல்லது ஸ்னாக்ஸ் ஆக நாம் சாப்பிடுவது வழக்கம். அதேபோல் நாம் அரிசியை ஊற வைத்த அரைத்து மிகவும் பாரம்பரியமான முறையில் கருப்பட்டி சேர்த்து செய்யப் போகும் இந்த பணியாரம் மிகவும் சுவையானதாகவும் இருக்கும் அதே சமயத்தில் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

- Advertisement -

குழந்தைகளுக்கு இப்பொழுது நிறைய புதுவிதமான ஸ்னாக்ஸ் பிடித்திருக்கும் ஆனால் அவையெல்லாம் அவர்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்க கூடியது எனவே எப்பொழுதுமே குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியமான சத்தான உணவுகளை கொடுக்க வேண்டும் அந்த வகையில் கருப்பட்டி பணியாரம் அனைவருக்கும் ஆரோக்கியமானதாக இருக்கும்

அதே நேரத்தில் குழந்தைகளின் விருப்பப்படி அவர்களது சுவைக்கு ஏற்ப நாம் செய்து கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த கருப்பட்டி பணியாரம் எல்லா ஊர்களிலும் செய்தாலும் திருநெல்வேலியில் மிகவும் ஃபேமஸான ஒரு உணவு. வாங்க திருநெல்வேலி பேமஸ் கருப்பட்டி பணியாரம் பாரம்பரியமான முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
5 from 1 vote

கருப்பட்டி பணியாரம் | Karupatti Paniyaram Recipe In Tamil

குழந்தைகளுக்கு இப்பொழுது நிறைய புதுவிதமான ஸ்னாக்ஸ் பிடித்திருக்கும் ஆனால் அவையெல்லாம் அவர்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்க கூடியது எனவே எப்பொழுதுமே குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியமான சத்தான உணவுகளை கொடுக்க வேண்டும் அந்த வகையில் கருப்பட்டி பணியாரம் அனைவருக்கும் ஆரோக்கியமானதாக இருக்கும். இந்த கருப்பட்டி பணியாரம் எல்லா ஊர்களிலும் செய்தாலும் திருநெல்வேலியில் மிகவும் ஃபேமஸான ஒரு உணவு. வாங்க திருநெல்வேலி பேமஸ் கருப்பட்டி பணியாரம் பாரம்பரியமான முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Karupatti paniyaram
Yield: 4
Calories: 200kcal

Equipment

  • 1 பணியார கல்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பச்சரிசி
  • 1/2 கப் துருவிய கருப்பட்டி
  • 1 வாழைப்பழம்
  • 1 சிட்டிகை உப்பு
  • நெய் அல்லது எண்ணெய்

செய்முறை

  • முதலில் பச்சரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • அரைத்து வைத்த மாவுடன் வாழைப்பழத்தை நன்கு மசித்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  •  
    துருவிய கருப்பட்டியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து ஆற வைத்து வடிகட்டி அந்த மாவுடன் சேர்த்துக் கொள்ளவும்.
  • ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது பணியார சட்டியில் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து கலந்து வைத்துள்ள மாவில் இருந்து பணியாரமாக ஊற்றி இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை சுட்டு எடுத்தால் சுவையான கருப்பட்டி பணியாரம் தயார்.நெல்லை ஃபேமஸ் ஆரோக்கியமான பாரம்பரியமான கருப்பட்டி பணியாரம்!!!

Nutrition

Serving: 100g | Calories: 200kcal | Carbohydrates: 67g | Protein: 13g | Fat: 0.1g | Sodium: 13mg | Potassium: 274mg | Fiber: 6g