Home காலை உணவு காலை டிபனுக்கு சுவையான கவுனி அரிசி இடியாப்பம் ஒரு முறை இது போன்று செஞ்சி பாருங்கள்!

காலை டிபனுக்கு சுவையான கவுனி அரிசி இடியாப்பம் ஒரு முறை இது போன்று செஞ்சி பாருங்கள்!

கருப்பு கவுனி அரிசி மிக நல்லது. ஆனால் அதை எப்படி சமைப்பது, குழந்தைகளை எப்படி சாப்பிட வைப்பது என்ற குழப்பம் உங்களிடம் இருந்தால் உங்களுக்கு இந்த சமையல் பதிவு உதவும். பாரம்பரிய உணவு தானியம் என்றால் அரிசி தான். வெள்ளை அரிசிதான் உடலுக்கு கெடுதல் என்கிறார்கள். ஆனால் கருப்பு கவுனி அரிசியில் புரதம் அதிகம் இருப்பதால் அதை குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்களின் மெட்டபாலிசம் வளர்ச்சிக்கு உதவும். தற்போது வெள்ளை அரிசி மோகத்திலிருந்து பாரம்பரிய அரிசி வகைகளுக்கு மாறி இருக்கிறோம். அதில் கருப்பு கவுனியும் ஒன்று. இந்த அரிசியை சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

-விளம்பரம்-

பாரம்பரியமான அரிசி ரகங்களை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் மூலம் நோயற்ற வாழ்வு வாழலாம். இந்த கருப்பு கவுனி அரிசியை சாப்பிட குழந்தைகள் மறுத்தால் அவர்களுக்கு பிடித்தமான வகையில் சத்தானதாக சுவைபட செய்து கொடுக்கலாம். கருப்பு கவுனியில் சுவைபட செய்யும் இடியாப்பம் எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம். நீங்கள் காலை உணவாக மாதம் முழுவதும் இட்லி, தோசை மற்றும் சாதம் போன்ற உணவு வகைகளை சமைப்பதற்கு பதிலாக வாரத்தில் ஒரு நாள் காலையில் இடியாப்பம், ஆப்பம் போன்ற உணவுகளை தயார் செய்து சாப்பிடலாம். ஆவியில் அவிக்க வைத்து செய்யப்படும் உணவுகள் உடல் நலனுக்கு என்றுமே ஆரோக்கியமானது. தமிழர்களின் ஒரு பாரம்பரிய காலை உணவு வகைதான் இந்த இடியாப்பம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. 10 நிமிடத்தில் இடியாப்பத்தை வீட்டிலேயே செய்யும் முறை குறித்து இந்த பதிவில் காணலாம்.

Print
No ratings yet

கவுனி அரிசி இடியாப்பம் | Kavuni Arisi Idiyappam Recipe In Tamil

கருப்பு கவுனி அரிசி மிக நல்லது. ஆனால் அதை எப்படி சமைப்பது, குழந்தைகளை எப்படி சாப்பிட வைப்பது என்ற குழப்பம் உங்களிடம் இருந்தால் உங்களுக்கு இந்த சமையல் பதிவு உதவும். பாரம்பரிய உணவு தானியம் என்றால் அரிசி தான். வெள்ளை அரிசிதான் உடலுக்கு கெடுதல் என்கிறார்கள். ஆனால் கருப்பு கவுனி அரிசியில் புரதம் அதிகம் இருப்பதால் அதை குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்களின் மெட்டபாலிசம் வளர்ச்சிக்கு உதவும். தற்போது வெள்ளை அரிசி மோகத்திலிருந்து பாரம்பரிய அரிசி வகைகளுக்கு மாறி இருக்கிறோம். அதில் கருப்பு கவுனியும் ஒன்று. கருப்பு கவுனியில் சுவைபட செய்யும் இடியாப்பம் எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம். நீங்கள் காலை உணவாக மாதம் முழுவதும் இட்லி, தோசை மற்றும் சாதம் போன்ற உணவு வகைகளை சமைப்பதற்கு பதிலாக வாரத்தில் ஒரு நாள் காலையில் இடியாப்பம், ஆப்பம் போன்ற உணவுகளை தயார் செய்து சாப்பிடலாம். ஆவியில் அவிக்க வைத்து செய்யப்படும் உணவுகள் உடல் நலனுக்கு என்றுமே ஆரோக்கியமானது.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: Breakfast
Cuisine: Indian
Keyword: Kavuni Arisi Idiyappam
Yield: 3 People
Calories: 150kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 இட்லி பாத்திரம்
  • 1 இடியாம்பம் பிழியும் இயந்திரம்

தேவையான பொருட்கள்

  • 1/2 கி கவுனி அரிசி
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்

செய்முறை

  • முதலில் கவுனி அரிசியை நன்கு கழுவி ஒரு துணியில் ஒரு நாள்‌ முழுவதும் வெயிலில் உலர வைத்து கொள்ளவும்.
  • பிறகு இந்த அரிசியை வெளியில் கொடுத்தோ அல்லது வீட்டிலேயே நன்றாக அரைத்து கொள்ளவும்.
  • பின்‌ உங்களுக்கு தேவையான அளவு மாவு எடுத்து அதனுடன் தேவையான அளவு உப்பு, எண்ணெய், ஏலக்காய் தூள் மற்றும் தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.
  • அதன்பிறகு அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி‌ பாத்திரத்தை மூடி வைத்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
  • பின் பிசைந்து வைத்திருக்கும் இடியாப்ப மாவை சிறிதளவு எடுத்து இடியாப்ப உலக்கில் வைத்து இட்லி தட்டில் பிழிந்து, இட்லி பாத்திரத்தில் மூடி வைத்து 10 நிமிடங்கள் வேக வைத்து கொள்ளவும்.
  • இடியாப்பம் வெந்ததும்‌ அதை ஒரு தட்டில் வைத்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான கவுனி‌ அரிசி இடியாப்பம் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 150kcal | Carbohydrates: 80g | Protein: 8g | Fat: 3g | Saturated Fat: 1g | Sodium: 380mg | Fiber: 5.4g | Vitamin C: 50mg | Calcium: 30mg | Iron: 8.9mg

இதனையும் படியுங்கள் : கருப்பு கவுனி அரிசி கார பொங்கல் ஒருமுறை இப்படி செய்து பாருங்க! காலை டிபனுக்கு பக்காவாக இருக்கும்!