ஒரே மாதிரி பிரியாணி புலாவ் சாப்பிட்டு போர் அடிக்குதா! ஒரு முறை கீமா ரைஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

நம்ம வீட்ல ஒரே மாதிரி பிரியாணி, புலாவ், தக்காளி சாதம் செய்வோம். ஆனால் அது எல்லாமே கொஞ்சம் போர் அடிக்கிற மாதிரி இருக்கு. புதுசா ஏதாவது ரெசிபி ட்ரை பண்ணலாமா. அப்படின்னு யோசிப்பவர்களுக்கு இந்த குறிப்பு உதவியாக இருக்கும். கொஞ்சம் வித்தியாசமாக தான் இந்த ரெசிபி இருக்கும். ஆனால், இதன் ருசி அருமையாக இருக்கும்.

-விளம்பரம்-

கீமா ரைஸ் வீட்டில் செய்தல் உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும்.மட்டன் மற்றும் கொழுப்புகள் நமது உடலின் வெப்பத்தை குறைத்துக் குளிர்ச்சியை ஏற்படுத்துவதுடன், நுரையீரல் மற்றும் இடுப்புப் பகுதிக்கு நல்ல வலிமையைத் தருகிறது. ஆட்டு இறைச்சியானது, நமது சிறுநீரக சுரப்பியை வலிமை அடையச் செய்து, ஆண் குறியின் வலிமையை மேம்படுத்துகிறது.

- Advertisement -

புலாவ்,பிரியாணி, பிரியர்கள் இந்த மாதிரி கீமா போட்டு ரைஸ் செஞ்சு பாருங்க அடிக்கடி செய்வீங்க!  விதவிதமான ரைஸ் வகைகளில் அதிகமான மசாலாக்கள் சேர்க்காமல் செய்யப்படுவதால் பலரும் விரும்பி சாப்பிடுவது உண்டு.  அசைவ பிரியர்களுக்கு பிடித்தமான சுவையான இந்த கீமா ரைஸ் ரொம்பவே பிடித்து போய்விடும். சூப்பரான டேஸ்டியான ரொம்பவும் சுலபமாக வீட்டிலேயே எப்படி சுவையான கீமா ரைஸ் தயாரிப்பது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்

Print
No ratings yet

மட்டன் கீமா ரைஸ் | Mutton Keema Rice Recipe In Tamil

கீமா ரைஸ்வீட்டில் செய்தல் உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும்.மட்டன் மற்றும் கொழுப்புகள் நமதுஉடலின் வெப்பத்தை குறைத்துக் குளிர்ச்சியை ஏற்படுத்துவதுடன், நுரையீரல் மற்றும் இடுப்புப்பகுதிக்கு நல்ல வலிமையைத் தருகிறது. **ஆட்டு இறைச்சியானது, நமது சிறுநீரக சுரப்பியைவலிமை அடையச் செய்து, ஆண் குறியின் வலிமையை மேம்படுத்துகிறது . புலாவ் ,பிரியாணி, பிரியர்கள்இந்த மாதிரி கீமா போட்டு ரைஸ் செஞ்சு பாருங்க அடிக்கடி செய்வீங்க!  விதவிதமான ரைஸ் வகைகளில் அதிகமான மசாலாக்கள் சேர்க்காமல்செய்யப்படுவதால் பலரும் விரும்பி சாப்பிடுவது உண்டு.  அசைவ பிரியர்களுக்கு பிடித்தமான சுவையான இந்த கீமாரைஸ் ரொம்பவே பிடித்து போய்விடும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamilnadu
Keyword: Mutton Keema Rice
Yield: 4
Calories: 902kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ பாஸ்மதி அரிசி
  • 100 கிராம் மட்டன் கீமா
  • 1 பட்டை
  • 1 கிராம்பு
  • 1 ஏலம்
  • 1 லவங்கம்
  • 1/2 கப் நறுக்கிய கேரட்
  • 1/2 கப் உருளைக்கிழங்கு
  • 1 வெங்காயம்
  • 1 வெங்காயத் தண்டு
  • 1 தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • 2 மேசைக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது
  • 1 கப் தயிர்
  • 1 மேசைக்கரண்டி கரம் மசாலா தூள்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1/2 மூடி எலுமிச்சை
  • 2 மேசைக்கரண்டி எண்ணெய்
  • 2 மேசைக்கரண்டி நெய்
  • 2 தேக்கரண்டி உப்பு

செய்முறை

  • தேவையானவற்றை எடுத்து வைக்கவும். வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும்.
  • ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி பட்டை கிராம்பு, ஏலம், ரம்பை இலை, லவங்கம், நறுக்கிய வெங்காயம், வெங்காயத் தண்டு போட்டு வதக்கவும்.
  • பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுது மட்டன் ஸ்டாக் போட்டு வதக்கவும்.
  • தக்காளி,மட்டன் கீமா, தூள் வகைகளை எல்லாம் போட்டு கிளறி விடவும்.அதன் பிறகு தயிர், எலுமிச்சை சாறு, மல்லி தழை, உப்பு சேர்த்து வேக விடவும்.
     
  • பின் அரிசியை கழுவி கீமா குருமாலில் போட்டு ஒன்றிற்கு ஒன்றரை மடங்கு தண்ணீர் விட்டு 2 விசில் வேக விடவும்.
  • சுவையான கீமா ரைஸ் தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 902kcal | Carbohydrates: 56g | Protein: 4.6g | Cholesterol: 7.8mg | Sodium: 1092mg | Potassium: 782mg | Calcium: 34mg