Home அசைவம் காரசாரமான ருசியில் கேரளா தட்டுக்கடை சிக்கன் ஃப்ரை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

காரசாரமான ருசியில் கேரளா தட்டுக்கடை சிக்கன் ஃப்ரை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

சிக்கனை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதனை எப்படி செய்து கொடுத்தாலும் அல்லது மூன்று வேலையும் செய்து கொடுத்தாலும் வேணாம் என்று சொல்லாமல் விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் விரும்பி சாப்பிடும் சிக்கனை ஒரே மாதிரி செய்து கொடுக்காமல் கொஞ்சம் வித்தியாசமாக செய்து கொடுத்தால் ருசியாகவும் இருக்கும். அதனால் இந்த பதிவில் கேரளா ஸ்டைல் தட்டுக்கடை சிக்கன் ஃப்ரை செய்து சாப்பிடலாம். தமிழகத்தை அடுத்து கேரளா ஸ்டைல் உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும். குறிப்பாக கேரளா ஸ்டைல் அசைவ உணவுகள் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். நீங்கள் கேரளா ரெசிபிக்களை விரும்பி சாப்பிடுபவரா? அதுவும் சிக்கன் ரெசிபிக்களை விரும்பி சாப்பிடுவீர்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் கேரளா ஸ்டைல் தட்டுக்கடை சிக்கன் ஃப்ரை செய்து சாப்பிடுங்கள்.

-விளம்பரம்-

இந்த சிக்கன் சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இந்த கேரளா தட்டுக்கடை சிக்கன் ஃப்ரை ரெசிபி, நாம் விறல் சப்பி உண்ணக்கூடிய அளவிற்கு மிக அருமையாக இருக்கும். இந்த ஸ்பெஷலான சிக்கன் ஃப்ரை மசாலா பொருட்களை கொண்டு தயாரிக்க கூடிய ஒரு சுவையான சிக்கன் ரெசிபி. உண்மையான தென்னிந்திய மசாலாவை வெளிப்படுத்தும் அளவிற்கு இந்த சிக்கன் ஃப்ரை சுவையாக இருக்கும். இரவு விருந்திற்கோ அல்லது மதிய சாப்பாட்டிற்கோ இந்த ரெசிபியை நீங்கள் வீட்டில் எளிதாக செய்யலாம். இந்த ரெசிபியை நீங்கள் சாதம் அல்லது ரொட்டி உடன் சேர்த்து சாப்பிடலாம். இந்த சுவையான தட்டுக்கடை சிக்கன் ஃப்ரை செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Print
No ratings yet

கேரளா தட்டுக்கடை சிக்கன் ஃப்ரை| Kerala Chicken Fry Recipe In Tamil

சிக்கனை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதனை எப்படி செய்து கொடுத்தாலும் அல்லது மூன்று வேலையும் செய்து கொடுத்தாலும் வேணாம் என்று சொல்லாமல் விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் விரும்பி சாப்பிடும் சிக்கனை ஒரே மாதிரி செய்து கொடுக்காமல் கொஞ்சம் வித்தியாசமாக செய்து கொடுத்தால் ருசியாகவும் இருக்கும். அதனால் இந்த பதிவில் கேரளா ஸ்டைல் தட்டுக்கடை சிக்கன் ஃப்ரை செய்து சாப்பிடலாம். தமிழகத்தை அடுத்து கேரளா ஸ்டைல் உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும். குறிப்பாக கேரளா ஸ்டைல் அசைவ உணவுகள் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். நீங்கள் கேரளா ரெசிபிக்களை விரும்பி சாப்பிடுபவரா? அதுவும் சிக்கன் ரெசிபிக்களை விரும்பி சாப்பிடுவீர்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் கேரளா ஸ்டைல் தட்டுக்கடை சிக்கன் ஃப்ரை செய்து சாப்பிடுங்கள்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: dinner
Cuisine: Indian
Keyword: Kerala Chicken Fry
Yield: 3 People
Calories: 99kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1/2 கி சிக்கன்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 2 கிராம்பு
  • 1 பட்டை
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 கொத்து கறிவேப்பில்லை
  • 3 பச்சை மிளகாய்
  • 5 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 1/2 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ்
  • உப்பு தேவையான அளவு
  • தேங்காய் எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் மிளகு, பட்டை, கிராம்பு சேர்த்து வறுக்கவும். அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் இவை நன்கு ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, எலுமிச்சை சாறு, சோயா சாஸ், உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சிக்கனில் சேர்த்து நன்கு கலந்து வைத்து 15 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்க்காமல் சிக்கனை போட்டு மூடி வைத்து 3/4 பாகம் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். சிக்கனில் இருந்து வரும் தண்ணீரிலேயே இது வேக வேண்டும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் வேகவைத்த சிக்கனை சேர்த்து பொரித்து எடுக்கவும். இதனுடன் கறிவேப்பிலை சேர்த்து பொரித்து எடுக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான தட்டுக்கடை சிக்கன் ஃப்ரை தயார். இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம்.

Nutrition

Serving: 550g | Calories: 99kcal | Carbohydrates: 9.1g | Protein: 9.4g | Fat: 2.79g | Sodium: 88mg | Potassium: 95mg | Fiber: 2.7g | Vitamin A: 29IU | Vitamin C: 606mg | Calcium: 24mg | Iron: 6.1mg

இதனையும் படியுங்கள் : கேரளா குடம்புளி மீன் குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!!