பொதுவாக மீன் குழம்பு என்றாலே அனைவருக்கும் நாக்கில் எச்சில் ஊரும். அதிலும் கேரளா ஸ்டைலில் மீன் குழம்பு செய்தால் சொல்லவே வேண்டாம். அவ்வளவு சுவையாக இருக்கும். ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு ருசி இருக்கும். அதேபோல் கேரளாவில் மத்தி மீன் மிகவும் பிரபலம். மண் சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி மணக்க மணக்க மீன் குழம்பு வைத்து அதை கிட்டத்தட்ட 1 வாரத்திற்கு வைத்து சாப்பிடுவார்கள். அந்த வகையில் இந்த பதிவில் கேரளா ஸ்பெஷல் மீன் குழம்பு செய்வதற்கான செய்முறையை தெரிந்துக் கொள்ளலாம்.
கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளாவின் உணவு வகைகளுக்குத் தனி வரலாறு உண்டு. அதிலும் கேரளா மாநிலத்தின் வட்டார உணவுகள் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. நெய் சோறு, புட்டு, கடலைக் கறி, செம்மீன், மீன் பொளிச்சது, அடைப் பிரதமன், மலபார் மீன் குழம்பு, மீன் கறி, அப்பம் போன்ற ஏராளமான கேரளா உணவுகள் உலகம் முழுவதும் அறியப்படும் பிரபல உணவுகளாக இருந்து வருகின்றன.
கேரளாவில் கடற்கரை அதிகம் இருப்பதால் மீன் உணவுகள் அவர்களின் பிரதான உணவு பட்டியலில் இடம் பிடிக்கின்றன. இந்த பதிவில் கேரளா ஸ்டைல் மீன் குழம்பு வைப்பது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம். கேரளாவில் உள்ள மக்கள் அதிகம் விரும்பி உட்கொள்ளும் அசைவ உணவுகளில் மீன் தவிர்க்க முடியாத ஒன்று. அதனால் தான் மீன்களில் பலவிதமான உணவு வகைகளை அவர்கள் சமைத்து உண்பார்கள். கேரளா ஸ்டைலில் குடம்புளி மீன் குழம்பை எப்படி செய்வது என்று தெரிந்துக்கொள்வோம்.
கேரளா குடம்புளி மீன் குழம்பு | kerala kudampuli fish kulambu recipe in tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 மண் சட்டி
தேவையான பொருட்கள்
- 1/2 கி மீன்
- 1 கப் சின்ன வெங்காயம்
- தேங்காய் எண்ணெய் தேவையான அளவு
- 2 பச்சை மிளகாய்
- 1 டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி பூண்டு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 2 தக்காளி
- 1 துண்டு தேங்காய்
- 1 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 டீஸ்பூன் மல்லி தூள்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 4 துண்டு குடம்புளி
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் தேங்காய் மற்றும் தக்காளியை நறுக்கி மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு மண் சட்டியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் செய்யவும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பின் பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- இதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
- அதன்பிறகு குடம்புளியை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- ஊற வைத்த புளியை மட்டும் தண்ணீர் இல்லாமல் வதங்கி இருக்கும் வெங்காயத்தில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- நாம் அரைத்து வைத்துள்ள விழுதை மண் சட்டியில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விடவும்.
- இப்பொழுது மீன் துண்டுகளை சேர்த்து மூடி போட்டு சிறு தீயில் வேக வைக்கவும். இறுதியாக கருவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
- அவ்வளவுதான் சுவையான கேரள முறையில் குடம்புளி சேர்த்த மீன் குழம்பு தயார்.