இன்னைக்கு என்ன குழம்பு வைக்கிறது பொரியல் பண்றது பத்தி யோசிச்சிட்டு இருக்கீங்களா? இன்னைக்கு என்ன குழம்பு வைக்கிறது என்ன சைடிஷ் பண்றது என்ன சமையல் பண்றது அப்படிங்கறது உங்க மைண்ட்ல ஓடிட்டு இருக்கா ? இல்ல இன்னைக்கு வேற ஏதாவது வெரைட்டி ரைஸ் பண்ணலாம் அப்படின்னு உங்களுக்கு தோனிட்டு இருக்கா? எப்பவுமே மதியம் லஞ்சுக்கு என்ன செய்யணும் அப்படிங்கற எண்ணம் மட்டும் உங்க மனசுல இருந்துட்டே இருக்கா? அப்போ நீங்க ரொம்பவே ஈஸியா குழம்புக்கு பதிலா இந்த கேரளா ஸ்டைலில் ஒரு சம்மந்தி செய்து வெறும் சாதத்துக்கு கூடயும் ஒரு அப்பளம் வைத்து சாப்பிட்டீங்கன்னா அவ்வளவு ருசியா இருக்கும் அவ்வளவு வேலையும் கம்மியா இருக்கும்.
இந்த மாதிரி சுவையான சம்மந்தி வச்சு சாப்பிடும்போது சாப்பாடு எக்ஸ்ட்ரா சாப்பிடற மாதிரி இருக்கும். இந்த சம்மந்தியை சாதத்துக்கு கூட போட்டு கலந்து அப்பளம் இல்லன்னா வத்தலோட சேர்த்து சாப்பிடும்போது அதோட ருசியே தனி ருசி தான். சம்மந்தி சம்மந்தி அப்படின்னு சொல்றாங்க இது என்னடா அப்படின்னு கேக்குறீங்களா கேரள ஸ்டைல்ல துவையல் அப்படின்னு நீங்க வச்சுக்கலாம். துவையல் தான் வந்து அவங்க சம்மந்தினு சொல்லுவாங்க. ஆனா இது ரொம்பவே வித்தியாசமான டேஸ்டான ஒரு சம்மந்தி. இந்த சம்மந்திய சாதத்துக்கு தான் நிறைய சேர்த்து சாப்பிடுவாங்க அதாவது சாதத்துடைய கலந்து சாப்பிடுவாங்க. இந்த ருசியான சுவையான கேரள சம்மந்திய ரொம்பவே ஈஸியா குறைந்த நேரத்துல ரொம்ப ரொம்ப சுலபமா செய்திடலாம் லஞ்சுக்கு செய்யனும் அப்படின்ற பிரச்சனையும் குறைஞ்சிரும்.
வீட்டில் நிறைய பேர் இல்ல நீங்க மட்டும் தான் இருக்கீங்க உங்களுக்காக சமைக்கணுமா அப்படின்னு யோசிக்கிறீங்களா? ரொம்ப சிம்பிள் இந்த சம்மந்தியை செய்து சாதத்தோடு சேர்த்து சாப்பிட்டீங்கன்னா வேலை ஈஸியா முடிஞ்சிரும் சுவையும் அபாரமா இருக்கும். எப்போதுமே உணவுகள்ள கேரளாவுல சம்மந்திகள் இருக்கும். அதுவும் ஓனம் டைம்ல வைக்கப்படுற அந்த விருந்துகள்ல சம்மந்திக்கு ஒரு முக்கிய இடம் இருக்கு அப்படின்னு சொல்லலாம். அந்த அளவுக்கு இந்த சம்மத்தியோட ருசிக்கு எல்லாருமே அடிமையா இருக்காங்க.இந்த சம்மந்தி எல்லாருக்குமே ரொம்பவே புடிச்ச ஒரு உணவாகவும் இருக்கிறது. இப்படி ரொம்பவே சுவையா இருக்குற இந்த சம்மந்திய வீட்டில சட்டுனு செய்து மதிய உணவு ஈஸியா சாப்பிட்டு முடிச்சிடலாம். எதுக்காக நிறைய குழம்பு பொரியல் அப்படின்னு வச்சுட்டு ரொம்ப டைம் எடுக்குது ரொம்ப டயர்டா இருக்கு சிம்பிளா ஏதாவது ஒன்னு செய்து சாப்பிடணும் அப்படின்னா இந்த கேரளா ஸ்டைல் சம்மந்தி செய்து சாப்பிட்டீங்கன்னா போதும் ஈஸியா வேலை முடியும் ரொம்பவே ருசியாவும் இருக்கும் . நிறைய சாப்பிட்டு இருக்கணும் அப்படிங்கிற ஒரு எண்ணமும் வரும். சரி வாங்க எப்படி இந்த சுவையான கேரள சம்மந்தி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.
கேரளா சம்மந்தி | Kerala Samanthi Recipe in Tamil
Equipment
- 1 மிக்ஸி
- 1 கடாய்
- 1 கரண்டி
தேவையான பொருட்கள்
- 1 காய்ந்த மிளகாய்
- 20 சின்ன வெங்காயம்
- திராட்சை அளவு புளி
- 1 துண்டு இஞ்சி
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 ஸ்பூன் தனி மிளகாய் தூள்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 கப் தேங்காய் துருவல்
- தேவையான அளவு தேங்காய் எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
செய்முறை
- முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு அதே கடாயில் மீதம் இருக்கும் எண்ணெயில் காய்ந்த மிளகாய், புளி சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கி வைத்துள்ள பொருட்கள் ஆறிய பிறகு அவற்றை சேர்த்து அதில் இஞ்சி , கறிவேப்பிலை , சீரகம் சேர்த்துக்கொள்ள வேண்டும் .
- பிறகு அதில் மிளகாய் தூள், தேங்காய் துருவல், தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்.
- பின் அதனோடு தேங்காய் எண்ணெய் சிறிதளவு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்து கொண்டால் சுவையான கேரள ஸ்டைல் சம்மந்தி தயார்.
- இப்படி அரைத்து எடுத்து வைத்துள்ள கேரளா ஸ்டைல் சம்மந்தியை சாதத்தோடு கலந்து அப்பளம், வத்தல் வைத்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.