Home Uncategorized கோவக்காய் வாங்கினால் இப்படி ஒரு தடவை அவியல் செஞ்சு பாருங்க!

கோவக்காய் வாங்கினால் இப்படி ஒரு தடவை அவியல் செஞ்சு பாருங்க!

பெரும்பாலானவர் வீட்டுல கோவக்காய் வாங்க மாட்டாங்க ஆனா கோவக்காய் நம்ம எப்படி செஞ்சு சாப்பிட்டாலும் செம டேஸ்ட்டா இருக்கக்கூடிய ஒன்று. ஒரு சில வீட்ல இந்த கோவக்காய் வந்திருந்தாலும் அதை வச்சு பொரியல் ஃப்ரை அந்த மாதிரி தான் பண்ணி சாப்பிட்டு இருப்பாங்க ஆனா கோபக்காய் வச்சு அவியல் செஞ்சு சாப்பிட்டு இருக்கவே மாட்டாங்க.

-விளம்பரம்-

இன்னிக்கு நம்ம கோவக்காய் வச்சு அவியல் தான் எப்படி செய்யறதுன்னு பாக்க போறோம். இந்த அவியல் செய்தது ரொம்ப வே சிம்பிள் தான் நம்ம காய்கறி எல்லாம் வச்சு ஒரு அவியல் செய்வோம் இல்லையா அதே மாதிரி தான் இந்த அவியலும் நம்ம செய்யப் போறோம் ஆனா அதைவிட கொஞ்சம் டேஸ்ட் அருமையாவே இருக்கும். இந்த கோவக்காய் அவியல நம்ம கார குழம்புக்கு சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிட்டா டேஸ்ட் ரொம்பவே அருமையா இருக்கும்.

தேங்காய் எண்ணெயில் தாளிச்சு இந்த அவியல் நம்ம செய்ய போறதால வாசனையும் அட்டகாசமா இருக்கும். இந்த கோவக்காய் சாப்பிடுவது நீரிழிவு நோய் இருக்கிறவங்களுக்கு ரொம்பவே ஆரோக்கியமானதா இருக்கும். தினமும் என்ன பொறியல் செய்வது அப்படின்னு தெரியலனா ஒரு நாளைக்கு இந்த கோபக்காய் வாங்கி இந்த மாதிரி அவியல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். ரொம்ப ஆரோக்கியமான டேஸ்டான இந்த கோவக்காய் அவியல் எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.

Print
No ratings yet

கோவக்காய் அவியல் | Kovakkai Avial Recipe In Tamil

பெரும்பாலானவர் வீட்டுல கோவக்காய் வாங்க மாட்டாங்க ஆனா கோவக்காய் நம்ம எப்படி செஞ்சு சாப்பிட்டாலும் செம டேஸ்ட்டா இருக்கக்கூடிய ஒன்று. ஒரு சில வீட்ல இந்த கோவக்காய் வந்திருந்தாலும் அதை வச்சு பொரியல் ஃப்ரை அந்த மாதிரி தான் பண்ணி சாப்பிட்டு இருப்பாங்க ஆனா கோபக்காய் வச்சு அவியல் செஞ்சு சாப்பிட்டு இருக்கவே மாட்டாங்க. தினமும் என்ன பொறியல் செய்வது அப்படின்னு தெரியலனா ஒரு நாளைக்கு இந்த கோவக்காய் வாங்கி இந்த மாதிரி அவியல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Kovakkai avial
Yield: 4
Calories: 128kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ கோவக்காய்
  • 4 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 3 பச்சை மிளகாய்
  • 1/2 கப் புளிக்காத தயிர்
  • தேங்காய் எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • கருவேப்பிலை தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கோவக்காயை நன்கு கழுவி நீளவாக்கில் வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு நறுக்கிய கோவக்காயுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்
  • ஒருமிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் சீரகம் ,சிறிதளவு தயிர் பச்சை மிளகாய் அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கலந்து வைத்துள்ள கோவக்காயை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • கொஞ்சமாக தண்ணீர் தெளித்து கோவக்காயை வேக வைக்கவும். சிறிது நேரம் வெந்த பிறகு அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து கிளறாமல் மூடி வைத்து விடவும்
  • இரண்டு நிமிடங்கள் கழித்து நன்றாக கிளறி மீண்டும் சிறிதளவு தேங்காய் எண்ணெய் கறிவேப்பிலை மீதி இருக்கும் தயிர் அனைத்தும் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கினால் சுவையான கோவக்காய் அவியல் தயார்

Nutrition

Serving: 100g | Calories: 128kcal | Carbohydrates: 33.3g | Protein: 14g | Sodium: 135mg | Potassium: 194mg

இதையும் படியுங்கள் : இட்லி, தோசைக்கு ஒரு முறை இப்படி கோவக்காய் சட்னியை செய்து கொடுத்து அசத்துங்கள்! 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க!