இட்லி , தோசை , சப்பாத்தி கூட சாப்பிட ருசியான குமரகம் முட்டை கிரேவி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு எந்த மாதிரி செய்தாலும் வெரைட்டியா எப்பவுமே ஒரே சட்னி ஒரே மாதிரியான குருமா செய்து போர் அடிக்குதா ? அப்போ இந்த முட்டை கிரேவிய செஞ்சி அசத்துங்க எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இந்த முட்டை கிரேவி தேங்காய் பால் பயன்படுத்தி செய்ய போறோம். இந்த ருசியான தேங்காய்ப்பால் முட்டை கிரேவிய ரொம்ப ஈஸியா செய்திடலாம். இதுக்கு நம்ம ரொம்ப கஷ்டப்படணும்னு அவசியமே கிடையாது. ரொம்ப ரொம்ப ஈஸியா இந்த முட்டை கிரேவிய நாம பண்ணிடலாம்.

-விளம்பரம்-

இந்த முட்டை கிரேவியை வெறும் பூரி, சப்பாத்தி, இட்லி, தோசைக்கு மட்டும் இல்லாமல் சாதத்துக்கு கூடயும் சேர்த்து சாப்பிட அவ்வளவு அருமையா இருக்கும். இது ஒரு தேங்காய் பால் முட்டை கிரேவி அப்படிங்கிறதுனால உடலுக்கும் ரொம்பவே நல்ல சத்தை கொடுக்கக்கூடியது. அது மட்டும் இல்லாமல் தேங்காய் பால் அப்படிங்கிறதுனால இது உடலுக்கு குளிர்ச்சியும் கொடுக்கக்கூடியது. இதில் இருக்கிற நல்ல கொழுப்புகள் உடலுக்கு ரொம்பவே நன்மையா பயக்கக் கூடியது.

- Advertisement -

இந்த சுவையான முட்டை கிரேவி ரொம்பவே அருமையா இருக்கும். எப்போதும் சாப்பிடுறத விட இந்த முட்டை கிரேவியை வைத்து கொடுக்கும் போது இன்னும் எக்ஸ்ட்ராவே சாப்பிடுவார்கள். தேங்காய் பால் ஓட சுவை இதுல ரொம்பவே அதிகமா இருக்கும். ரொம்ப சுவையான ஆரோக்கியமிக்க இந்த குமரகம் முட்டை கிரேவி எப்படி செய்வது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Print
3 from 2 votes

குமரகம் முட்டை கிரேவி | Kumaragam egg masala in Tamil

இந்த முட்டை கிரேவியை வெறும் பூரி, சப்பாத்தி, இட்லி, தோசைக்கு மட்டும் இல்லாமல் சாதத்துக்கு கூடயும் சேர்த்து சாப்பிட அவ்வளவு அருமையா இருக்கும். இது ஒரு தேங்காய் பால் முட்டை கிரேவி அப்படிங்கிறதுனால உடலுக்கும் ரொம்பவே நல்ல சத்தை கொடுக்கக்கூடியது. அது மட்டும் இல்லாமல் தேங்காய் பால் அப்படிங்கிறதுனால இது உடலுக்கு குளிர்ச்சியும் கொடுக்கக்கூடியது. இதில் இருக்கிற நல்ல கொழுப்புகள் உடலுக்கு ரொம்பவே நன்மையா பயக்கக் கூடியது.
Prep Time20 minutes
Active Time20 minutes
Total Time40 minutes
Course: Gravy
Cuisine: Kerala
Keyword: Egg, egg gravy
Yield: 4 People
Calories: 97kcal
Cost: 50

Equipment

 • 1 வானெலி
 • 1 கரண்டி
 • 1 மிக்ஸி
 • 3 பவுள்

தேவையான பொருட்கள்

 • 4 முட்டை
 • 1  வெங்காயம்
 • 1 துண்டு இஞ்சி                          
 • 4 பல் பூண்டு                          
 • 2 பச்சை மிளகாய்
 • 1 தக்காளி
 • 14 ஸ்பூன் மஞ்சள் தூள்
 • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
 • 1 12 ஸ்பூன் மல்லி தூள்
 • 12 ஸ்பூன் சீரகத் தூள்
 • 1 ஸ்பூன் கறிமசாலா தூள்
 • 2 கப் தேங்காய் பால்

செய்முறை

 • முதலில் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் தக்காளி இவற்றை நன்றாக பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
 • பிறகு தேங்காயிலிருந்து இரண்டு கப் தேங்காய் பால் எடுக்க வேண்டும்.முதலில் எடுக்கும் கெட்டி தேங்காய் பால் தனியாகும் இரண்டாவது முறை அரைத்தெடுக்கும் தேங்காய் பாலை தனியாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.
 • முட்டையை வேகவைத்து இரண்டாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
 • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ஒன்று இரண்டாக உடைத்த காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
 • பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கவும்.பின்பு இதில் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு அவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
 • பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி பழத்தை சேர்த்து நன்றாக வதக்கி விடவும்.அதில்  மஞ்சள் தூள், மிளகாய் தூள், கறி மசாலா தூள், தனியா தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
 • பின்பு இதில் சீரகத்தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.இப்போது இதில் இரண்டாவதாக எடுத்து வைத்துள்ள தேங்காய் பால் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு மூடி போட்டு கொதிக்க வைக்கவும்.
 • கிரேவி ஒரு கொதி வந்த பிறகு வேகவைத்து இரண்டாக நறுக்கி வைத்துள்ள முட்டைகளை அந்த கிரேவியில் சேர்த்து கரண்டி போடாமல் லேசாக பாத்திரத்தை மட்டும் ஆட்டி கலந்து விட்டு மூடி போட்டு வேக விடவும்.
 • முட்டை கிரேவி நன்றாக கெட்டியான பதித்திற்க்கு வந்த பிறகு அதில் முதல் முதலில் எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலை சேர்த்து நன்றாக கலந்து விட்டு ஒரு கொதி வந்ததும் நறுக்கிய கொத்தமல்லி தழைகளை சேர்த்து இறக்கி பரிமாறினால் சூடான குமரகம் முட்டை கிரேவி தயார்.

Nutrition

Calories: 97kcal | Carbohydrates: 12g | Fat: 4g | Saturated Fat: 2g | Sodium: 134mg | Potassium: 238mg | Fiber: 4g | Calcium: 58mg