சப்பாத்திக்கு சைடிஷாக காரசாரமாக ருசியான வெண்டைக்காய் சப்ஜி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

வெண்டைக்காய் கார குழம்பு கேள்விப்பட்டிருப்போம் அது என்ன வெண்டைக்காய் சார்ஜ் அப்படின்னு யோசிக்கிறீங்களா இந்த வெண்டைக்காய் சப்ஜியும் வெண்டைக்காய் கார குழம்பு மாதிரி தான் இருக்கும் ஆனா கொஞ்சம் கெட்டியா ரொம்பவே டேஸ்ட்டா சப்ஜி செஞ்சு சப்பாத்திக்கு சைடிசா இதை சாப்பிடலாம். வட இந்தியால பொதுவா இந்த வெண்டைக்காய் சப்ஜி செய்வாங்க. ஒரு சப்பாத்தி நம்ம எக்ஸ்ட்ராவே சேர்த்து சாப்பிடலாம் அந்த அளவுக்கு ரொம்பவே டேஸ்டா இருக்கக்கூடியது தான் இந்த வெண்டைக்காய் சப்ஜி.

-விளம்பரம்-

நல்லா காரசாரமா இந்த வெண்டைக்காய் சப்ஜி செஞ்சா குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் ரொம்பவே பிடிக்கும். அதுக்காக குழந்தைகளுக்கு ரொம்ப நம்ம காரமா கொடுக்கக் கூடாது ரொம்ப சின்ன குழந்தைகளுக்கு கொஞ்சம் காரம் கம்மியா தான் செஞ்சு கொடுக்கணும். வெண்டைக்காய நம்ம வெட்டி வச்சா போதும் சட்டுனு இந்த சப்ஜியை செஞ்சு முடிச்சிடலாம். இந்த வெண்டைக்காய் சப்ஜியை பல சாப்பிட்டிருக்கலாம் ஆனா அது ரொம்பவே டேஸ்டான முறையில் எப்படி செய்வது என்று தெரியாமல் இருக்கலாம்.

- Advertisement -

அதனால இப்ப நம்ம ரொம்ப டேஸ்டா இருக்கக்கூடிய ஒரு வெண்டைக்காய் சப்ஜி பார்க்க போறோம். இந்த சப்ஜியை சப்பாத்திக்கு மட்டும்தான் நம்ம தொட்டு சாப்பிடலாமா அப்படின்னு கேட்டா அது தான் இல்ல இத நம்ம குஸ்கா புலாவ் இட்லி தோசை பூரிங்க இது எல்லாத்துக்கும் வைத்து சாப்பிடலாம் வெறும் சாதத்தில் கூட சேர்த்து சாப்பிடலாம் இதோட டேஸ்ட் ரொம்பவே சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த வெண்டைக்காய் சரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

வெண்டைக்காய் சப்ஜி | Ladies Finger Sabji Recipe In Tamil

நல்லா காரசாரமா இந்த வெண்டைக்காய் சப்ஜி செஞ்சா குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் ரொம்பவே பிடிக்கும். அதுக்காக குழந்தைகளுக்கு ரொம்ப நம்ம காரமா கொடுக்கக் கூடாது ரொம்ப சின்ன குழந்தைகளுக்கு கொஞ்சம் காரம் கம்மியா தான் செஞ்சு கொடுக்கணும். வெண்டைக்காய நம்ம வெட்டி வச்சா போதும் சட்டுனு இந்த சப்ஜியை செஞ்சு முடிச்சிடலாம். இந்த வெண்டைக்காய் சப்ஜியை பல சாப்பிட்டிருக்கலாம் ஆனா அதுரொம்பவே டேஸ்டான முறையில் எப்படி செய்வது என்று தெரியாமல் இருக்கலாம். இப்ப வாங்க இந்த வெண்டைக்காய் சப்ஜி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamilnadu
Keyword: Ladies Finger Sabji
Yield: 4
Calories: 192kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ வெண்டைக்காய்
  • 2 பெரிய வெங்காயம்
  • 3 தக்காளி
  • புளி எலுமிச்சை பழ அளவு
  • 2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் மல்லி தூள்
  • 1/2 டேபிள் ஸ்பூன் சீரகத் தூள்
  • 1/4 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா
  • 1/4 கப் புளிக்காத தயிர் அல்லது பிரஷ் கிரீம்
  • 1/2 டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி
  • 2 டேபிள் ஸ்பூன் பட்டர்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் வெண்டைக்காயை நீள நீளமாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெண்டைக்காயை அதில் போட்டு அதனுடைய வழவழப்பு தன்மை போகும் வரையில் நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி அதில் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • பிறகு அதனுடன் மிளகாய் தூள் மல்லித்தூள் சீரகத்தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா அனைத்தும் சேர்த்து நன்றாக வதக்கவும். இதனுடன் சிறிய எலுமிச்சை பழ அளவு புளியை கரைத்து சேர்த்துக் கொள்ளவும் 10 நிமிடங்கள் மசாலா வாசனை போகும் வரை நன்றாக வேக வைக்க வேண்டும்.
  • பிறகு வதக்கி வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து மறுபடியும் ஒரு பத்து நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். வெண்டைக்காய் நன்றாக வெந்தவுடன் பிரஸ் கிரீம் அல்லது புளிப்பில்லாத தயிர் சேர்த்து நன்றாக கிளறவும்.
  • அனைத்தும் சேர்த்து நன்றாக வெந்தவுடன் கஸ்தூரி மேதியை போட்டு இறக்கினால் சுவையான சப்பாத்திக்கு வைத்து சாப்பிடக்கூடிய வெண்டைக்காய் சப்ஜி தயார்.
  • இந்த வெண்டைக்காய் சப்ஜி தொக்கு பதத்தில் இருந்தால் தான் மிகவும் சுவையாக இருக்கும் எனவே அதிகமாக தண்ணீர் சேர்க்கக்கூடாது.

Nutrition

Serving: 300g | Calories: 192kcal | Carbohydrates: 18g | Protein: 39g | Cholesterol: 1mg | Sodium: 26mg | Potassium: 378mg | Iron: 1mg

இதையும் படியுங்கள் : சாதத்துடன் சாப்பிட ருசியான வெண்டைக்காய் முந்திரி பொரியல் இப்படி செய்து பாருங்கள்!  ஒரு சட்டி சோறும் காலியாகும்!