சுட சுட சோறுடன் சாப்பிட ருசியான எலுமிச்சைபழத் தொக்கு இப்படி செய்து பாருங்க!

elumichai thokku
- Advertisement -

எலுமிச்சைப்பழ தொக்கு இது போன்று ஒரு முறை செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

-விளம்பரம்-

வ்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -
elumichai palathokku
Print
No ratings yet

எலுமிச்சைப்பழ தொக்கு | Lemon Thokku Recipe In Tamil

எலுமிச்சைப்பழ தொக்கு இது போன்று ஒரு முறை செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
வ்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Prep Time10 days 5 minutes
Active Time5 minutes
Total Time11 days 11 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: lemon thokku, எலுமிச்சைப்பழ தொக்கு
Yield: 4 people

Equipment

  • கடாய்

தேவையான பொருட்கள்

  • 25 பழுத்த இழுஇச்சைப்பழம்
  • 200 கிராம் வர மிளகாய் பொடித்து கொள்ளவும்
  • 200 கிராம் நல்லெண்ணெய்
  • 5 கிராம் பெருங்காயம்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் வெந்தயத்தூள்
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் எலுமிச்சம் பழங்களை நான்காக நறுக்கி அதில் உள்ள விதைகளை நீக்கி விட்டு ஒரு வாயகன்ற பாட்டிலில் போட்டு உப்பு சேர்த்து குலுக்கி வெள்ளைத்துணியால் பாட்டிலின் வாயை மூடி 10 தினங்களுக்கு கட்டி வைக்கவும்.
  • பின்பு 10 நாட்கள் கழித்து பார்த்தால் பழம் உப்பு சேர்ந்து பதமாக இருக்கும்.
  • அடுத்து வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளிக்கவும்.
  • அதனுடன் வெந்தயத் தூள், மஞ்சள் தூள், பெருங்காயம், பொடித்த மிளகாய் வற்றல் போட்டு வதக்கி அதில் உப்பில் ஊறி பதமாக இருக்கும் எலுமிச்சம் பழங்களையும் போட்டு மத்தால் நன்கு மசித்து கிளறவும்.
  • தொக்கு சட்டியில் ஒட்டாமல் திரண்டு வந்ததும் கீழே இறக்கி ஆற வைத்து பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.