இந்த மூன்று ராசிகாரர்களை கண்ணை மூடி கொண்டு தைரியமாக காதலிக்கலாம்!
இந்த காலத்தில் ஒரு உண்மையான காதல் கிடைப்பதற்கு பலரும் தவம் செய்திருக்க வேண்டும் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு காதல் என்ற வார்த்தையை பொய் வார்த்தையாக மாறிவிட்டது யார் உண்மையாக காதலிக்கிறார் யார் பொய்யாக காதலிக்கிறார் என்றும் தெரியாத வண்ணம் நடந்து கொள்கிறார்கள். இதன் காரண
இந்த காலத்தில் ஒரு உண்மையான காதல் கிடைப்பதற்கு பலரும் தவம் செய்திருக்க வேண்டும் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு காதல் என்ற வார்த்தையை பொய் வார்த்தையாக மாறிவிட்டது யார் உண்மையாக காதலிக்கிறார் யார் பொய்யாக காதலிக்கிறார் என்றும் தெரியாத வண்ணம் நடந்து கொள்கிறார்கள். இதன் காரணமாகவே நிறைய பேருக்கு காதலின் மேல் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது ஆனால் இன்று நாம் பார்க்க போகிற இந்த மூன்று ராசிக்காரர்களை நீங்கள் காதலிக்கிறீர்கள் என்றால் அவர்களை என்றுமே விட்டுவிடாதீர்கள் கெட்டியாக பிடிந்து கொள்ளுங்கள். அது எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நம் தெளிவாக காணலாம் வாருங்கள்.
ரிஷப ராசி
ரிஷப ராசிக்காரர்கள் பிறப்பிலேயே நேர்மையாக நடந்து கொள்ள விரும்புபவர்கள். உண்மையின் பாதையில் செல்ல விரும்பக்கூடிய குணம் படைத்தவர்கள் அதேபோல் தான் தங்கள் காதல் விஷயத்திலும் ஒருவர் மீது ஒரு முறை காதல் வயப்பட்டு விட்டார்கள் என்றால் கடைசிவரை நிலை மாறாது உண்மையாக ஒருவரை காதலிப்பார்கள். அவர்கள் தங்கள் காதலிப்பவர் மீது வைத்திருக்கும் அன்பு இல்லையற்றதாக இருக்கும் அதே சமயத்தில் ஆழமானதாகவும் இருக்கும். அவர்கள் காதலில் எந்த அளவு நிலையாக இருப்பார்கள் என்றால் எவ்வளவு கஷ்டமான சங்கடமான சூழ்நிலைகள் வந்தாலும் தங்கள் காதலை என்றுமே விட்டுக் கொடுக்காமல் நிலையாக இருப்பவர்கள்.
கடக ராசி
கடக ராசிக்காரர்களும் அவர்கள் காதலிக்கும் நபருக்கு என்றும் உண்மையாக நடந்து கொள்வார்கள். இவர்கள் இந்த மீத ராசிக்காரர்கள் போல் தன் காதலிக்கும் நபருடன் குடும்பமாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட மாட்டார்கள் அதற்கு மாறாக தன் காதலிக்கும் நபருடன் காதலில் இருக்கும் போது குடும்பமாக வாழ நினைப்பார்கள். ஏன் தன் காதலிக்கும் நபரின் குடும்பத்தையும் தான் குடும்பமாக எண்ணி பாதுகாப்ப நினைப்பார்கள் அதற்காக எதையும் செய்வார்கள். எக்காரணம் கொண்டு கடக ராசிக்காரர்கள் காதலில் துரோகம் செய்ய விரும்ப மாட்டார்கள். இவர்கள் எந்த அளவுக்கு உண்மையாக ஒருவரை காதலிக்கிறாரோ அதே அளவு உண்மையான காதலை தாங்கள் காதலிக்கும் நபரிடம் இருந்தும் கிடைக்க வேண்டும் எதிர்பார்ப்பார்கள்.
தனுசு ராசி
தனுசு ராசிக்காரர்கள் பிறக்கும் போது அவர்களின் வாழ்க்கையில் சாகச குணம் இயற்கையாக இருக்கக்கூடியது. அதற்காக இந்த எல்லைக்கு வேண்டும் என்றாலும் செல்வார்கள் அதிலும் காதல் என்ற ஒன்று வந்துவிட்டால் அவர்கள் ஒருவரை காதலிப்பதில் இருந்து யாராலேயும் தடுக்க முடியாது. இவர்கள் காதல் எப்படி இருக்கும் என்றால் அவர்கள் காதலிப்பவரின் இதயம் இவர்கள் இதயம் பேசிக்கொண்டு இருக்கும் போது இவர்களை யாராலும் தடுக்க முடியாது. அந்த அளவிற்கு இவர்களின் காதல் அழகாகவும், அழுத்தமாகவும், ஆழமாகவும் இருக்கும். இவர்ள் காதலுக்காக எப்பேர்பட்ட முடிவுகளையும் சாதாரணமாக எடுத்து விடுவார்கள் ஒரு போதும் அதற்கு தயங்க மாட்டார்கள்.
பெரும்பாலான காதலர்கள் பிரிவதற்கு காதலில் நடக்கும் சண்டை சச்சரவுகளை மறக்காமல் மனதில் வைத்துக்கொண்டு நேரம் கிடைக்கும் பொழுது அதை சொல்லிக் காட்டி விடுவார்கள் ஆனால் தனுசு ராசிக்காரர்கள் எவ்வளவுதான் காதலில் சண்டையிட்டு கொண்டாலும் அதற்கு கோபப்படாமல் மாறாக அன்பே திருப்பிக் கொடுப்பார்கள் அந்த அளவிற்கு இவர்களின் காதல் மகத்துவமானதாக இருக்கும்