ஒரு சிலருக்கு கறியை விட மீன் மற்றும் கருவாட்டின் மீது அதிக விருப்பம் இருக்கும். இப்படி கருவாட்டு பிரியர்களுக்கு மாசிக்கருவாடு சம்பல் என்றால் சொல்லவே வேண்டாம், நாவில் இருந்து எச்சில் ஊற ஆரம்பித்து விடும். மாசிக்கருவாடு என்பது சுத்தம் செய்யப்பட்ட சூறை மீனை உப்பு நீரில் வேகவைத்து மண்ணில் புதைத்து வைத்து செய்யப்படுவது. . தமிழகத்தில், தூத்துக்குடி பகுதியிலும் கீழத்தஞ்சை மக்களிடமும் இந்த சம்பலுக்குச் செல்வாக்கு இருக்கிறது. சென்னையிலும் கிடைக்கிறது. விலை கொஞ்சம் அதிகம், ஆனால் அதன் ருசியை அறிந்தவர்கள் விலையைப் பற்றிக் கவலை படுவதில்லை.
கடல் உணவுகளிலேயே எளிமையாக செய்யக்கூடியது. ஐந்து நிமிடத்தில் செய்து விடலாம். இது இட்லி தோசை, ஆகியவற்றுக்கு அசத்தலான காம்போவாக சூடான சோறு இருக்கும். வைத்திருப்பார்கள்.இதன் சுவை அபாரமாக இருக்கும். அந்த அளவிற்கு சுவையாக இருக்க கூடிய இந்த மாசிக்கருவாடு சுத்தம் செய்வது முதல் ருசியாக சம்பல் வைப்பது வரை எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
மாசிக்கருவாடு சம்பல் | Maasi Dry Fish Recipe In Tamil
Equipment
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 100 கிராம் மாசி கருவாடு
- 1/4 மூடி தேங்காய்
- 2 காய்ந்த மிளகாய்
- 4 சின்ன வெங்காயம்
- உப்பு சிறிதளவு
செய்முறை
- கடையில் வாங்கி வந்த மாசியை, சிறு உரல், அல்லது சுத்தியலால் தட்டி சின்னச் சின்ன துண்டுகளாக உடைத்துக் கொள்ளுங்கள்.
- அவற்றை மிக்சியில் போட்டு இரண்டு சுற்று ஓடலிருங்கள். எந்தக் காரணம் கொண்டும் தண்ணீர் சேர்த்து விடாதீர்கள்.
- இப்போது அதனுடன் தேங்காய் சேர்த்து மேலும் இரண்டு சுற்று,அப்புறம் சுட்ட மிளகாய் சேர்த்து இரண்டு சுற்று.
- கடைசியாக சின்ன வெங்காயம் கால் ஸ்பூன் உப்புச் சேர்த்து இரண்டு சுற்றுச் சுற்றினால் மாசி சம்பல் ரெடி.