கருவாடு என்றால் அனைவருக்கும் பிடிக்கும் இந்த கருவாட்டு குழம்பு ஓட வாசனைக்கு எக்ஸ்ட்ராவா ரெண்டு தட்டு சாப்பாடு உள்ள போகும். அப்படி இருக்கிற பட்சத்தில் இந்த கருவாடு வைத்து வெறும் வறுவல் குழம்பு மட்டும் பண்ணாம மாசி கருவாடு வச்சு சம்பல் எப்படி பண்றது அப்படிங்கறது பார்க்க இருக்கோம். இந்த மாசி கருவாடு இருக்குறதுலயே ரொம்ப ருசியான ஒரு கருவாடு. அப்படி இந்த சுவையான மாசி கருவாடை வைத்து ஒரு சம்பல் ரொம்பவே டேஸ்டியா சுலபமாக பண்ண போறோம்.
இந்த கருவாடு கடைகளில் கிடைக்கும் அநீ வாங்கி வந்துட்டு எப்ப எல்லாம் நம்ம சாதத்துக்கு எதுவும் சைடு டிஷ் இல்ல அப்படின்னு ஃபீல் பண்றமோ அந்த மாதிரி நேரத்தில் இந்த மாசி சம்பல் ரொம்பவே சுலபமா செய்து சாப்பிட்டு கொள்ளலாம். நமக்கு நல்ல ஒரு சைடிஷ் இல்ல வெறும் சாதம் மட்டும் இருக்கு அப்படிங்கற பீலிங் எல்லாமே வரவே வராது இந்த சம்பலோட சேர்த்து சாப்பிடும்போது அது வெறும் தயிர் சாதமாக இருந்தாலும் சரி ரசம் சாதமாக இருந்தாலும் சரி அந்த சாப்பாடு அவ்வளவு ருசியா அருமையாகவும் இருக்கும்.
இந்த மாசி கருவாட்டு சம்பல செய்து நம்ம ஒரு பாக்ஸ்ல போட்டு எடுத்து வச்சுக்கிட்டா ஒரு வாரம் வரைக்கும் கூட கெட்டுப் போகாது. ரொம்பவே நல்லா இருக்கும். டேஸ்ட் மாறாம அப்படியேவே இருக்கும். நீங்க அதுக்கு கொஞ்சம் அதிகமா எண்ணெய் சேர்த்து நல்ல பண்ணி எடுத்து வச்சுட்டீங்களா அது ரொம்பவே உங்களுக்கு கெட்டுப் போகாம ரொம்ப நாட்களுக்கு வரும்.இந்த சுவையான மாசி கருவாடு கர்ப்பிணிகள் இருந்து தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் வரைக்கும் எல்லாருமே சாப்பிடலாம்.
அதனால குழந்தைக்கான சக்தி தான் அதிகமாக கிடைக்கும். கருவாடு சாப்பிடுவதால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கிற அம்மாக்களுக்கு பால் சுரப்பு அதிகமாகும் அப்படின்னு சொல்லுவாங்க. இதுக்கு வந்து திருக்கை கருவாடு வந்து அதிகமா கொடுக்க சொல்லி சொல்லுவாங்க. நம்ம சுவையான சம்பல் இப்போ இந்த மாசி கருவாடுல எப்படி பண்ணலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
மாசி சம்பல் | Maasi Sambal Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 14 கப் மாசி தூள்
- 5 மிளகாய் வற்றல்
- 2 பெரிய வெங்காயம்
- 1 கப் தேங்காய்த் துருவல்
- உப்பு தேவையான அளவு
தாளிக்க
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் உளுந்து
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை
- முதலில்ஒரு மிக்ஸி ஜாரில் மாசித் தூளுடன், மிளகாய் வற்றல் மற்றும் தேவையான உப்புக் கலந்து, மிக்ஸியில் பொடிசெய்து கொள்ளவும். மாசிக் கருவாட்டில் ஏற்கனவே உப்பு இருக்கும் என்பதால் சிறிதளவு உப்பு சேர்த்தால் போதும்.
- அரைத்த பொடியுடன், தேங்காய் பூ சேர்த்து சிலவினாடிகள் அரைத்துவிட்டு, அத்துடன் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கொரகொரப்பாக அரைத்தால் போதும்.
- சிறிது கூடத் தண்ணீர் சேர்க்கக்கூடாது. வெங்காயம் சேர்த்து அரைத்தபின் துவையல் பதத்தில் இருக்கும். அதை வேறு பாத்திரத்தில் மாற்றி விட வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு, அதில்கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
- கடுகு வெடித்த பின், அதில் அரைத்து வைத்த மாசிக்கலவையைச் சேர்க்கவும் மிதமான தீயில் வைத்து, துவையல் பதத்தில் இருக்கும் மாசிக் கலவை உதிரியாக ஆகும் வரை பொரிக்கவும்.
- மிகவும் சுவையான இந்த மாசி சம்பல், தயிர் சாதம், ரசம் சாதத்துடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.