Home ஆன்மிகம் மகா சிவராத்திரி இன்று கோவிலுக்கு போக முடியவில்லையா ?வீட்டிலே எப்படி வழிபட வேண்டும் தெரியுமா?

மகா சிவராத்திரி இன்று கோவிலுக்கு போக முடியவில்லையா ?வீட்டிலே எப்படி வழிபட வேண்டும் தெரியுமா?

ஒவ்வொரு வருடமும் மாதம் மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தியை சிவராத்திரி ஆக கொண்டாடி வருகிறோம். ஒவ்வொரு சிவராத்திரி என்றும் மனம் உருகி சிவபெருமானை வழிபட்டால் நான் கேட்ட வரங்கள் அனைத்தும் கிடைக்கும். அதிலும் மாசி மாதம் வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தியை நாம் மகா சிவராத்திரி ஆக கொண்டாடி வருகிறோம். அந்த நாள் என்று இரவு முழுவதும் கண்வழித்து ஒரு வில்வ இலையாவது வைத்து சிவபெருமானை வழிபட்டு வந்தால் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது. இந்த மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரி ஆனது மிகவும் சக்தி வாய்ந்த சிவராத்திரி ஆகும்.

-விளம்பரம்-

மகா சிவராத்திரி என்று சிவபெருமானுக்கு மொத்தம் நான்கு கால பூஜைகள் நடைபெறும். அதில் முதல் காலம் ‌ பிரம்ம தேவரை வழிபட வேண்டிய காலமாகவும், இரண்டாம் காலம் மகாவிஷ்ணுவை வழிபட வேண்டிய காலமாகவும், மூன்றாம் காலம் அம்பிகையை வழிபட வேண்டிய காலமாகவும், நான்காம் காலம் தேவர்கள் ரிஷிகள் மற்றும் அனைத்து ஜீவராசிகளையும் வழிபட்டு சிவபெருமானின் அருளை முழுவதுமாக பெறக்கூடிய காலமாகவும் உள்ளது. மாசி மாதத்தில் வரக்கூடிய இந்த மகா சிவராத்திரி என்று முழு மனதோடு சிவபெருமானை வழிபட்டால் நாம் வேண்டியது எல்லாம் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது.

மகா சிவராத்திரி அன்று வீட்டில் வழிபாடு செய்யும் முறை

மகா சிவராத்திரி அன்று கோவில்களில் நான்கு கால பூஜைகள் நடைபெறும் விரதம் இருப்பவர்கள் கோவிலுக்கு சென்று அந்த நான்கு கால பூஜைகளிலும் கலந்து கொண்டால் மிகவும் சிறப்பானது. ஒருவேளை உங்களால் பூஜைகளில் கலந்து கொள்ள முடியவில்லை என்றால் அந்த நான்கு கால பூஜைகளின் அபிஷேகத்திற்கு தேவைப்படும் பன்னீர் இளநீர் தேன் தயிர் சந்தனம் பால் திருநீறு என ஏதாவது ஒரு பொருளையும் அல்லது அனைத்து பொருட்களையும் கோவிலுக்கு வாங்கி கொடுக்கலாம். உங்கள் வீட்டில் பூஜை நீங்களே செய்து கொண்டால் வீட்டில் உள்ள சிவலிங்கத்திற்கு உங்களால் முடிந்த பொருட்களை வாங்கி அபிஷேகம் செய்து வீட்டில் ஏதாவது ஒரு நெய்வேதியம் வைத்து சிவபெருமானை வழிபடலாம். நெய்வேதியம் செய்ய முடியவில்லை என்றால் பழங்களை வீதியமாக படைத்து சிவபெருமானை வணங்கலாம் இரவு முழுவதும் கண்விழித்து சிவபுராணம் திருவாசகம் போன்றவற்றை படித்து வழிபாடு செய்யலாம்.

மகா சிவராத்திரி அன்று விரதத்தை நிறைவு செய்யும் விதம்

மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண்விழித்து சாப்பிடாமல் விரதம் இருப்பவர்கள் மறுநாள் காலை 6 மணிக்கு முன்பாக நடக்கும் நான்காம் கால பூஜையை முடித்துவிட்டு கோவிலில் பிரசாதம் கொடுத்தால் அதனை வாங்கி சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம். நீங்கள் வீட்டில் விரதம் இருந்தாலும் காலை 6 மணிக்கு வீட்டில் ஏதாவது செய்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம். மறுநாள் முழுவதும் தூங்காமல் கண் வைத்து மாலை நேரத்தில் விளக்கு ஏற்றி வழிபட்டு சிவபெருமானை வணங்க வேண்டும். இரவு நேரத்தில் மிகவும் எளிமையான ஏதாவது ஒரு உணவை சாப்பிட்டுவிட்டு நீங்கள் தூங்கச் சென்று விடலாம்.

சிவபெருமானை வழிபட வேண்டிய நேரம்

மகா சிவராத்திரி அன்று கண்வெழுத்து விரதம் இருக்க முடியாதவர்கள் மூன்றாவது கால பூஜை என்பது மட்டும் கண்விழித்த சிவபெருமானை வழிபாடு செய்யலாம். இரவு 11.45 மணியில் இருந்து 12.30 வரை தூங்காமல் கண்வழித்து மூன்றாவது கால பூஜையின் போது சிவபெருமானை வழிபாடு செய்யலாம். இந்த காலமானது அம்பிகை சிவபெருமானை வழிபட்ட காலம் எனவே இந்த காலத்திற்கு லிங்கோத்பவ காலம் என்று பெயர். எனவே இந்த நேரத்தில் சிவபெருமானை வழிபாடு செய்தால் கேட்டு வரங்களை சிவபெருமான் நமக்கு தருவார்.

-விளம்பரம்-

மகா சிவராத்திரி அன்று செய்ய வேண்டிய சில விஷயங்கள்

உங்கள் வீட்டில் உள்ள ருத்ராட்சம் மற்றும் சாளக்கிராமம் போன்றவைகளின் சக்தியை புதுப்பிக்க அவற்றிற்கு அபிஷேகம் செய்து அவற்றை கையில் வைத்து சிவாய நமஹ என்று மந்திரத்தை சொல்லலாம். நீங்கள் முதல்முறையாக ருத்ராட்சத்தை அணிய போகிறீர்கள் என்றால் அதனை சிவபெருமானின் படத்திற்கு முன்பாக வைத்து மூன்றாவது கால பூஜை என்பது சிவபெருமானை வழிபட்டு அந்த ருத்ராட்சத்தை நீங்கள் மனதார பக்தியோடு அணிந்து கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் ஏற்கனவே கழுத்தில் ருத்ராட்சம் அணிந்திருந்தால் அதனை கழற்றி நன்கு சுத்தம் செய்து சுவாமி படத்திற்கு முன்பாக வைத்து பூஜை செய்து அதற்கு பிறகு உங்கள் கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும். இந்த மகா சிவராத்திரி அன்று மூன்றாம் கால பூஜையின் போது சிவன் மற்றும் அம்பிகையின் சக்தி இந்த உலகம் முழுவதும் பல மடங்கு அதிகரித்து இருக்கும் நேரம் என்பதால் இந்த மூன்றாம் கால பூஜையின் போது சிவபெருமானை வழிபடுவது நமக்கு பலவிதமான நன்மைகளை தரும்.