கோடையில் உடல் வெப்பத்தை குறைக்க, வயிற்றில் புண் தீர்க்க மணத்தக்காளி கீரை சூப் அனைவர்க்கும் செய்து தாருங்கள்! வீட்டில் உள்ள அனைவரும் பாராட்டுவார்கள்!

- Advertisement -

வயிற்றில் புண் வந்து விட்டால் ஒருவர் வாழ்வில் அனைத்து பிரச்சினைகளும் வந்துவிடும். அல்சர் , வாய்புண் இவைகள் மிகவும் பெரிய தொல்லையாக கருதப்படும். உணவு சாப்பிட்ட சிரமப் பட வேண்டும். எதை சாப்பிட்டாலும் எரிச்சல் சேர்த்து வந்துவிடும் உடலில் ஆரோக்கியத்திற்கு அத்தனை துன்பங்களையும் இந்த வாய் புண் , அல்சர் பிரச்சனை கொடுக்கும். நீர் அருந்தினால் கூட வாயில் எரிச்சல் என அனைத்தும் இந்த பிரச்சினையால் வரும். இப்படி இந்த வாய் புண் பிரச்சனை இருந்து விடுவதற்கு மிகவும் எளிமையான ஒரு மூலிகையில் சூப் செய்து சாப்பிட இருக்கிறோம்.

-விளம்பரம்-

இந்த மூலிகை நம் வீட்டுக்கு அருகிலேயே கிடைக்கும் ஒரு மூலிகை கிராமப்புறங்களில் என்றால் வீட்டு தோட்டங்களில் கிடைக்கும் இதுவே நகர்ப்புறங்கள் என்றால் கீரை கடைகளில் வாங்கிவிடலாம். அப்படி என்ன மூலிகை பற்றி சொல்கிறேன் என்று யோசிக்கிறீர்களா ?அதுதான் மணி மணியான மணத்தக்காளி கீரை. இந்த மணத்தக்காளி கீரைக்கு அநேக நன்மைகள் உண்டு இந்த மணத்தக்காளி குணப்படுத்தும் மிக மிக முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் வாய் முதல் வயிறில் உள்ள புண்களுக்கு தீர்வு கொடுக்கும். தொண்டை புண் எரிச்சல் வயிற்றில் வலி போன்றவற்றை குறைக்கும். ஜீரணத்தை தூண்டும். இந்த மணத்தக்காளி கீரையை வெறும் வயிற்றில் அப்படியே சாப்பிட்டாலே செரிமான மண்டலத்தில் உள்ள பிரச்சினைகள் நீங்கிவிடும்.

- Advertisement -

இப்படிப்பட்ட மணத்தக்காளி நாம் , மணத்தக்காளி கீரை கூட்டு , சாம்பார் செய்து சாப்பிட்டு இருப்போம். இப்பொழுது நாம் மணத்தக்காளி கீரை சூப் செய்து சாப்பிட இருக்கிறோம். இந்த மணத்தக்காளி கீரை சூப்பை செய்து உண்டு வாய் புண், தொண்டை புண், அல்சர், உடல் சூடு இவற்றில் இருந்தும் விடுதலை பெறுவது எப்படி என்று பார்ப்போம். இந்த மணத்தக்காளி சூப் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Print
5 from 1 vote

மணத்தக்காளி கீரை சூப் | Manathakkali soup recipe in tamil

மணி மணியான மணத்தக்காளி கீரை. இந்த மணத்தக்காளி கீரைக்கு அநேக நன்மைகள் உண்டு இந்த மணத்தக்காளி  குணப்படுத்தும் மிக மிக முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் வாய் முதல் வயிறில் உள்ள புண்களுக்கு தீர்வு கொடுக்கும். தொண்டை புண் எரிச்சல் வயிற்றில் வலி போன்றவற்றை குறைக்கும். ஜீரணத்தை தூண்டும். இந்த மணத்தக்காளி கீரையை வெறும் வயிற்றில் அப்படியே சாப்பிட்டாலே செரிமான மண்டலத்தில் உள்ள  பிரச்சினைகள் நீங்கிவிடும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Soup
Cuisine: tamilnadu
Keyword: Banana Stem Soup, Barley Soup, Chicken Parli Soup, Crab Pepper Soup
Yield: 7 People
Calories: 150kcal
Cost: 50

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 1 கப் மணத்தக்காளி கீரை
  • 1/4 ஸ்பூன் மிளகு                           
  • 1 ஸ்பூன் சீரகம் 
  • 4 பல் பூண்டு                          
  • 1  வெங்காயம்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்  
  • 1 ஸ்பூன் சோள மாவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் மிளகு, சீரகம் வறுத்து வைத்து கொள்ளவேண்டும்.
  • பின் ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த மிளகு , சீரகம் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.
  • ஒரு கடாயில்  எண்ணெய்  ஊற்றி அதில்  பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து  நன்றாக வதக்க வேண்டும்.
  • பிறகு மணத்தக்காளி கீரையை சேர்த்து வதக்கி துண்டு துண்டாக நறுக்கி   சேர்க்கவும்.
  • பின் பொடித்து வைத்துள்ள மிளகு, சீரகம்  பொடிகளை சேர்த்து  உப்பு போட்டு கிளறி விடவும்.
  • பிறகு தண்ணீர் தேவையான அளவு ஊற்றி கொதிக்கவிட வேண்டும்.
  • நன்கு கொதித்து வந்ததும் சோளமாவை நீர் விட்டு கட்டியில்லாமல் கரைத்து கொதிக்கும் சூப்பில் கலந்து கிளறி விடவும்.
  • இப்போது சூப் கெட்டியாக ஆரம்பிக்கும் போது ருசி பார்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கினால் சூடான  ஆரோக்கியமிக்க மணத்தக்காளி கீரை சூப் தயார்.

Nutrition

Calories: 150kcal | Carbohydrates: 9g | Protein: 15g | Fat: 8g