ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நாம் வீட்டில் நீண்ட நாட்கள் கெடாத ஊறுகாய் ஒன்று ஏதாவது எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். நாம் உணவுகள் சாப்பிடும் பொழுது பொரியல் கூட்டு எதுவும் இல்லாத சமயத்தில் அந்த ஊறுகாயை சைடிஷ் ஆக எடுத்துக் கொள்வோம். ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் ஊறுகாய் இருப்பதை அரிதான ஒன்றாக மாறி வருகிறது. அந்த வகையில் இன்று நாம் மாங்காய் ஊறுகாய் பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.
இதையும் படியுங்கள் : இனிப்பு, புளிப்பு மற்றும் கார சுவையுடன் கூடிய மாங்காய் பச்சடி செய்வது எப்படி ?
இதில் குறிப்பிட்டுள்ள பொருட்களின் அளவில் இதுபோன்று நீங்கள் மாங்காய் ஊறுகாய் செய்தால் கண்டிப்பாக ஆறு மாதங்களுக்கு கெடாமல் இருக்கும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் மேலும் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்த சுவையில் இருக்கும். அதனால் இன்று மாங்காய் ஊறுகாய் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் நாம் இந்த சமையல் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.
மாங்காய் ஊறுகாய் | Mangai Pickle Recipe in Tamil
Equipment
- 1 கடாய்
- 1 இட்லி பாத்திரம்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1 மாங்காய் பெரியது
வறுத்து பொடி அரைக்க
- 1 tbsp கடுகு
- ½ tbsp வெந்தயம்
ஊறுகாய் மசாலா செய்ய
- 1 குழி கரண்டி நல்லலெண்ணெய்
- ½ tbsp கடுகு உளுந்த பருப்பு
- ½ tbsp மஞ்சள் தூள்
- 2 tbsp மிளகாய் தூள்
- ¼ tbsp பெருங்காயத்தூள்
- 1 tbsp உப்பு
செய்முறை
- முதலில் ஒரு மாங்காய் எடுத்து நன்கு கழிவு சுத்தப்படுத்திக் கொண்டு பின் மாங்காயின் கொட்டை நீக்கி விட்டு பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். அதன் பின் ஒரு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.
- பின் தண்ணீர் சூடானதும் இட்லி தட்டை உள்ளே வைத்து அதன் மேல் நாம் பொடியாக நறுக்கிய மாங்காயை சேர்த்து ஒரு நான்கு நிமிடம் அவித்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் நான்கு நிமிடம் கழித்து அவித்த மாங்காயை ஒரு பெரிய பவுளில் சேர்த்து நன்றாக குளிர வைத்துக் கொள்ளுங்கள்.
- பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் கடுகு மற்றும் அரை டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து எண்ணெய் இல்லாமல் வறுத்துக் கொள்ளுங்கள். கடுகு நன்கு பொரித்து தெரித்தும் இரண்டையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக்கிக் கொள்ளுங்கள்.
- பின் மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து ஒரு குழி கரண்டி அளவிற்கு நல்லெண்ணெய் சேர்த்து தீயை மிதமாக ஏரிய விடவும். பின் எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதனுடன் அரை டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு, இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள், இரண்டு டீஸ்பூன் மிளகாய் தூள், கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள்.
- நான் எண்ணெயில் செய்த மசாலா கலவையை அவித்த மாங்காயுடன் சேர்த்து அதனுடன் ஒரு டீஸ்பூன் அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளரி விடுங்கள். அவ்வளவுதான் சுவையான மாங்காய் ஊறுகாய் தயார் இப்படி செய்தால் ஆறு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாது.