மங்களூர் ஸ்பெஷல் வாழைப்பள பன் செய்து வெள்ளை குருமாவுடன் சேர்த்து சாப்பிடும் போது சுவை அருமையாக இருக்கும்!

- Advertisement -

நம்ம வாழைப்பழத்தை வைத்து நிறைய விதமான டிஷ் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். வாழைப்பழம் சியம், கோதுமை அப்பம் பல வெரைட்டிகளில் வாழைப்பழங்களை பயன்படுத்தி சாப்பிட்டிருப்போம். வாழைப்பழத்தில் கேக் ,மில்க் ஷேக் அப்படின்னு விதவிதமா செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் இன்னைக்கு நம்ம வாழைப்பழத்துல மங்களூர்ல ரொம்ப ஸ்பெஷலான ஒரு டிஸ் பண்ண போறோம்.  

-விளம்பரம்-

அதுதான் பனானா பன் இல்லை பூரி அப்படின்னு சொல்லலாம். அவ்வளவு சூப்பரா இருக்கும் வாழைப்பழத்தில் செய்யக்கூடிய இந்த பூரி ரொம்பவே சுவையாவும் இருக்கும். இது வெறும் வாயில கூட அப்படியே சாப்பிடலாம் எந்த ஒரு சைட் டிஷ்ஷும் இல்லாமல். இவ்வளவு சுவையான பன்னை ரொம்பவே ஈசியா வீட்டுல செய்யலாம். நீங்க நார்மலா மாவு சப்பாத்திக்கோ இல்ல பூரிக்கோ பிசையும் போது அது கூட இது சேர்த்து நீங்க செஞ்சீங்கன்னா சூப்பரான சுவையாக இருக்கும்.

- Advertisement -

ரொம்ப ரொம்ப சாப்டாவும் இருக்கும் இந்த பனானா பன் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். குழந்தைகளெல்லாம் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க இந்த பனானா பன்னை. இந்த சுவையான வாழைப்பழத்தில் பண்ணக்கூடிய இந்த பன் எல்லாருக்கும் ரொம்ப விருப்பமானது மட்டும் இல்லாமல் இது ரொம்ப ருசியாகவும் இருக்கும்.

இந்த பனானா ஓட ருசி ரொம்பவே நல்லா இருக்கும். இந்த பனானா பன்னை கோதுமை மாவு இல்லனா மைதா மாவுடன் சேர்த்து கலந்து வாழைப்பழத்தை செய்யும் பொழுது அதோட சுவையும் ரொம்பவே நல்லா இருக்கும். இந்த பூரி ரொம்பவே சுவையானது மட்டும் இல்லாம நல்லா ஆரோக்கியமானதாகவும் இருக்கும். சரி வாங்க இந்த மங்களூர் ஸ்பெஷல் பனானா பன் எப்படி செய்வது என்று தெரிஞ்சிக்கலாம்.

Print
No ratings yet

மங்களூர் பனானா பன் | Mangalore Banana Bun In Tamil

ரொம்ப ரொம்ப சாப்டாவும் இருக்கும் இந்த பனானா பன் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். குழந்தைகளெல்லாம் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க இந்த பனானா பன்னை. இந்த சுவையான வாழைப்பழத்தில் பண்ணக்கூடியஇந்த பன் எல்லாருக்கும் ரொம்ப விருப்பமானது மட்டும் இல்லாமல் இது ரொம்ப ருசியாகவும் இருக்கும். இந்த பூரி ரொம்பவே சுவையானது மட்டும் இல்லாம நல்லா ஆரோக்கியமானதாகவும் இருக்கும். சரி வாங்க இந்த மங்களூர் ஸ்பெஷல் பனானா பன் எப்படி செய்வதுஎன்று தெரிஞ்சிக்கலாம்.
Prep Time5 minutes
Active Time8 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: Mangalore Banana Bun
Yield: 4
Calories: 245kcal

Equipment

  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 வாழைப்பழம்
  • 1 கப் மைதா மாவு அல்லது கோதுமை மாவு
  • 1 ஸ்பூன் சீனி
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தில் வாழைப்பழத்தை தோலை உரித்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.
     
  • பிறகு அதில் சர்க்கரையை சேர்த்து நன்றாக மசித்துக்கொள்ள வேண்டும். பின் மைதா மாவு அல்லது கோதுமை மாவு ஏதாவது ஒன்றை கலந்து கொள்ள வேண்டும்.
  • வாழைப்பழத்தோடு மாவு நன்றாக கலக்குமாறு பிசைய வேண்டும் சிறிதாக தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
  •  நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து பிறகுமேலே சிறிதளவு எண்ணெய் சேர்த்து ஒரு பத்து நிமிடம் வைக்க வேண்டும் .
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து பூரிகளை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய வைக்க வேண்டும்.
  • இப்பொழுது பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பூரிகளாக திரட்டி காய்ந்துள்ள எண்ணியில் போட்டு இருபுறம் பொரித்து எடுத்தால் சுவையான மங்களூர் ஸ்டைல் பனானா பன் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 245kcal | Carbohydrates: 32g | Protein: 3g | Sodium: 213mg | Potassium: 23.2mg | Calcium: 23.34mg

இதையும் படியுங்கள் : மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு வாழைக்காய் கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

-விளம்பரம்-