மாங்காய் சட்னி எப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

- Advertisement -

இப்போ இந்த சம்மர்ல எப்படி வெயில் நம்மள வாட்டி எடுக்குதோ அதே மாதிரி நம்மள ரொம்ப குஷியா வச்சுக்கிறது இந்த சீசன்ல கிடைக்கக்கூடிய மாங்காய் தான். இந்த மாங்காய் மாம்பழம் இதெல்லாம் வைத்து இந்த சம்மர்லையே நமக்கு ரொம்பவும் பிடிச்ச மாதிரியான மாங்காய் மாம்பழ ரெசிபிஸ் செஞ்சு சாப்பிடணும் மற்ற நேரங்களில் நமக்கு பெருசா எதுவும் கிடைக்காது. அதனால இந்த சீசன்லையே மாங்காய் வைத்து செய்யக்கூடிய மாங்காய் பச்சடி மாங்காய் ஊறுகாய் மாங்காய் சாதம்ன்னு எல்லாமே செஞ்சு சாப்பிட்டு ருசிச்சுக்கணும்.

-விளம்பரம்-

அந்த வகையில இன்னைக்கு நம்ம காரசாரமா புளிப்பா மாங்காய் சட்னி தான் செய்ய போறோம். நம்ம மாங்காய் வச்சு சட்னி செஞ்சு சாப்பிட்டு இருக்கவே மாட்டோம். ஆனா இந்த மாங்காய் சீசன்ல வித்தியாசமான சுவைல புளிப்பும் காரமும் சேர்ந்து சூப்பரான டேஸ்ட் இருக்கக்கூடிய அந்த மாங்காய் சட்னியா செஞ்சு சாப்பிட்டு பாருங்க இட்லி தோசை தயிர் சாதம் பழைய கஞ்சி சுடு கஞ்சி அப்படின்னு எல்லாத்துக்குமே பெர்ஃபெக்ட்டான ஒரு காம்பினேஷனா இந்த மாங்காய் சட்னி இருக்கும்.

- Advertisement -

மாங்காய் சாப்பிட உங்களுக்கு பிடிக்குமா அப்ப கண்டிப்பா இந்த மாங்காய் சட்னியும் ரொம்ப பிடிக்கும். உங்க குழந்தைகளுக்கும் கூட இந்த மங்கை சட்னி செஞ்சு கொடுங்க ரெண்டு இட்லி சேர்த்தே சாப்பிடுவாங்க. அந்த அளவுக்கு இந்த மாங்காய் சட்னி சூப்பர் டேஸ்டா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான மாங்காய் சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
No ratings yet

மாங்காய் சட்னி | Mango chutney Recipe In Tamil

இன்னைக்கு நம்ம காரசாரமா புளிப்பா மாங்காய் சட்னி தான்செய்ய போறோம். நம்ம மாங்காய் வச்சு சட்னி செஞ்சு சாப்பிட்டு இருக்கவே மாட்டோம். ஆனாஇந்த மாங்காய் சீசன்ல வித்தியாசமான சுவைல புளிப்பும் காரமும் சேர்ந்து சூப்பரான டேஸ்ட்இருக்கக்கூடிய அந்த மாங்காய் சட்னியா செஞ்சு சாப்பிட்டு பாருங்க இட்லி தோசை தயிர் சாதம்பழைய கஞ்சி சுடு கஞ்சி அப்படின்னு எல்லாத்துக்குமே பெர்ஃபெக்ட்டான ஒரு காம்பினேஷனாஇந்த மாங்காய் சட்னி இருக்கும். மாங்காய் சாப்பிட உங்களுக்கு பிடிக்குமா அப்ப கண்டிப்பாஇந்த மாங்காய் சட்னியும் ரொம்ப பிடிக்கும்.
Prep Time5 minutes
Active Time5 minutes
Total Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: mango chutney
Yield: 4
Calories: 60kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 மாங்காய்
  • 7 சின்ன வெங்காயம்
  • 3 பல் பூண்டு
  • 4 காய்ந்த மிளகாய்
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • 2 கொத்து கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு

செய்முறை

  • ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு மாங்காயை சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
  •  
    அதனுடன் சின்னவெங்காயம் பூண்டு காய்ந்த மிளகாய் கருவேப்பிலை கொத்தமல்லி இலைகள் உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  • அரைத்த சட்னியில் ஒரு கடாயில்  தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகுஉளுந்தம் பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்து சேர்த்தால் சுவையான மாங்காய் சட்னி தயார்

Nutrition

Serving: 500g | Calories: 60kcal | Carbohydrates: 17g | Protein: 10g | Sodium: 209mg | Potassium: 362mg