மாங்காய் ஊறுகாய் சட்டுனு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

- Advertisement -

இந்த மாங்காய் சீசன் வரும் போதே மாங்காயில் நமக்கு என்னென்ன ரெசிபிஸ் பிடிக்குமோ அதெல்லாம் செஞ்சு சாப்பிட்டுக்கணும் மாங்காய் சீசன் இல்லாத நேரத்துல மாங்காயோட விலை ரொம்பவே அதிகமா இருக்கும் அதனால எப்பவுமே இந்த மாங்காய் சீசன்லையே நமக்கு புடிச்ச மாங்காய் பச்சடி மாம்பழம் மாம்பழ குல்பி மாங்காய் சாம்பார் மாங்காய் சாதம் மாங்காய் சட்னி அப்படின்னு எல்லாம் செஞ்சு சாப்பிட்டுக்கலாம்.

-விளம்பரம்-

மாங்காய் வைத்து செய்யக்கூடியதிலேயே ரொம்ப ரொம்ப புடிச்சது அப்படின்னா அது மாங்காய் ஊறுகாய் தான். இந்த மாங்காய் ஊறுகாய் செஞ்சு அது கூட தயிர் சாதம் வைத்து சாப்பிட்டால் டேஸ்ட் ரொம்பவே அல்டிமேட் ஆயிருக்கும் அப்படின்னு சொல்லலாம் அந்த அளவுக்கு இந்த மாங்காய் ஊறுகாய் கூட டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும்.

- Advertisement -

ஆனா ஒருவேளை உங்களுக்கு சட்டுனு ஏதாவது தயிர் சாதத்துக்கு இல்ல மற்ற கலவை சாதங்களுக்கு சைட் டிஷ் செய்யணும் அப்படின்னா வீட்ல மாங்காய் இருந்தா போதும்.சட்டுனு மாங்காய் ஊறுகாய் செஞ்சுடலாம். இந்த மாங்காய் ஊறுகாய் ரொம்பவே டேஸ்டா சூப்பரா இருக்கும் இப்ப வாங்க இந்த மாங்காய் ஊறுகாய் சிம்பிளா வீட்டிலேயே ருசியா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
5 from 1 vote

மாங்காய் ஊறுகாய் | Mango Pickle Recipe In Tamil

மாங்காய் வைத்து செய்யக்கூடியதிலேயே ரொம்ப ரொம்ப புடிச்சது அப்படின்னா அது மாங்காய் ஊறுகாய்தான். இந்த மாங்காய் ஊறுகாய் செஞ்சு அது கூட தயிர் சாதம் வைத்து சாப்பிட்டால் டேஸ்ட்ரொம்பவே அல்டிமேட் ஆயிருக்கும் அப்படின்னு சொல்லலாம் அந்த அளவுக்கு இந்த மாங்காய் ஊறுகாய்கூட டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும். சட்டுனு மாங்காய் ஊறுகாய் செஞ்சுடலாம். இந்த மாங்காய்ஊறுகாய் ரொம்பவே டேஸ்டா சூப்பரா இருக்கும்
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: mango pickle
Yield: 4
Calories: 60kcal

தேவையான பொருட்கள்

  • 2 மாங்காய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் வெந்தயம்
  • 4 பல் பூண்டு
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • கருவேப்பிலை சிறிதளவு
  • 1 டீ ஸ்பூன் கடுகு உளுந்தம்பருப்பு

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் மாங்காயை பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும் அதில் தனி மிளகாய் தூள் பெருங்காயத்தூள்உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்
  • ஒரு கடாயில் கடுகு மற்றும் வெந்தயம் சேர்த்து நன்றாக வறுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து வைத்துக்கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் தாராளமாக ஊற்றி கடுகு உளுந்த பருப்பு கருவேப்பிலை பூண்டு காய்ந்த மிளகாய் சேர்த்துசூடான இந்த தாளிப்பை மாங்காயில் சேர்த்து கிளறினால் சுவையான மாங்காய் ஊறுகாய் தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 60kcal | Carbohydrates: 17g | Protein: 10g | Sodium: 209mg | Potassium: 362mg | Calcium: 12mg

இதையும் படியுங்கள் : நாவில் எச்சில் ஊற வைக்கும் தித்திக்கும் மாம்பழம் அல்வா!!!