Home ஸ்வீட்ஸ் நாவில் எச்சில் ஊற வைக்கும் தித்திக்கும் மாம்பழம் அல்வா!!!

நாவில் எச்சில் ஊற வைக்கும் தித்திக்கும் மாம்பழம் அல்வா!!!

மாம்பழத்துல அல்வாவா அப்படின்னு எல்லாரும் ஆச்சரியத்தோட பார்ப்பீங்க. ஆனா மாம்பழத்துல செய்ற இந்த அல்வா ரொம்பவே டேஸ்டா இருக்கும். பொதுவா மாங்காய் அப்படின்னு சொன்னாலே நம்ம எல்லாருக்கும் நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு நம்மளுக்கு மாங்கா ஒரு ஃபேவரிட் ஆனா ஐட்டமா இருக்கும் இந்த மாங்காய் வச்சு நம்ம எக்கச்சக்கமான நம்மளுக்கு புடிச்சமான உணவுகள் செய்யலாம்.

-விளம்பரம்-

எடுத்துக்காட்டா மாங்காயில் சட்னி மாங்காய் சாதம் மாங்காய் ஊறுகாய் மாங்காய் வடு மாங்காய் தோசை அப்படின்னு மாங்காய் வச்சு நிறைய உணவுகள் செய்யலாம் அது எல்லாமே நமக்கு ரொம்பவே பிடித்தமானதாக இருக்கும். அதே மாதிரி மாம்பழம் வெச்சும் நம்ம நிறைய உணவுகள் செய்யலாம் மாம்பழ மில்க் ஷேக் மாம்பழத்துல ஜூஸ் , மாம்பழத்துல ஐஸ்கிரீம் அப்படின்னு அவளுக்கு புடிச்சமானதா மாம்பழத்தில் செஞ்சு சாப்பிடலாம்.

அதே மாதிரி நம்ம மாம்பழம் வச்சு அல்வாவும் செய்யலாம் டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். பொதுவான அல்வானாலே கோதுமை மாவு கேரட் பிரட் இது வச்சு தான் செய்வோம் ஆனா கொஞ்சம் வித்தியாசமா இன்னைக்கு நம்ம மாம்பழத்துல அல்வா செய்ய போறோம். ஒரு சிலருக்கு மாம்பழம் ரொம்பவே பிடிக்கும் ஆனால் அதை சாப்பிடுவது கொஞ்சம் கஷ்டமா நினைப்பாங்க. அவங்களுக்காகவே நீங்க இந்த மாம்பழ அல்வா செஞ்சு கொடுக்கலாம் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. வாங்க எல்லாரும் விரும்பி சாப்பிடக்கூடிய அல்வா ல மாம்பழம் வச்சு சூப்பரான மாம்பழ அல்வா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

Print
5 from 1 vote

மாம்பழ அல்வா | Mango Halwa Recipe In Tamil

நம்ம மாம்பழம் வச்சு அல்வாவும் செய்யலாம் டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். பொதுவான அல்வானாலே கோதுமை மாவு கேரட் பிரட் இது வச்சு தான் செய்வோம் ஆனா கொஞ்சம் வித்தியாசமா இன்னைக்கு நம்ம மாம்பழத்துல அல்வா செய்ய போறோம். ஒரு சிலருக்கு மாம்பழம் ரொம்பவே பிடிக்கும் ஆனால் அதை சாப்பிடுவது கொஞ்சம் கஷ்டமா நினைப்பாங்க. அவங்களுக்காகவே நீங்க இந்த மாம்பழ அல்வா செஞ்சு கொடுக்கலாம் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. வாங்க எல்லாரும் விரும்பி சாப்பிடக்கூடிய அல்வா மாம்பழம் வச்சு சூப்பரான மாம்பழ அல்வா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: deserts
Cuisine: tamil nadu
Keyword: mango halwa
Yield: 4
Calories: 60kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 3 மாம்பழம்
  • 1 கப் சர்க்கரை
  • 1/2 கப் நெய்
  • 1 டேபிள் ஸ்பூன் சோள மாவு
  • 10 பாதாம்
  • 10 முந்திரி
  • 1/4 டீஸ்பூன் ஏலக்காய் தூள்

செய்முறை

  • முதலில் மாம்பழத்திலிருந்து கொட்டையை தனியாக எடுத்துவிட்டு மாம்பழத்தை சிறியதாக வெட்டி மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • நல்ல ஒரு கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு நெய் ஊற்றி பாதாம் மற்றும் முந்திரியை சிறிது சிறிதாக வெட்டி அதில் சேர்த்த நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு அதே பாத்திரத்தில் நெய் ஊற்றி அரைத்து வைத்துள்ள மாம்பழ விழுதை சேர்த்து நன்றாக கிளறவும். சோள மாவு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து அந்த மாம்பழ கலவையில் ஊற்றவும்.
  • ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் அந்த மாம்பழ கலவையை நன்றாக கிளறி கொண்டே இருக்க வேண்டும். இடையிடையே சிறிதளவு நெய் ஊற்றி கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
  • இப்பொழுது சர்க்கரையை சேர்த்து நன்றாக கரைந்த உடன் மறுபடியும் நினைவு ஊற்றி கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். இப்பொழுது வறுத்து வைத்துள்ள முந்திரி பாதாமை ஒரு தட்டில் நெய் தடவி அதை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • நாம் ஊற்றிய நெய் எல்லாம் பிரிந்து மாம்பழ கலவையின் ஓரங்களில் வந்தால் மாம்பழ அல்வா தயார்.
  • இப்பொழுது அதனை நெய் தடவி வைத்துள்ள தட்டில் ஊற்றி ஒரு மணி நேரத்திற்கு பிறகு தேவையான வடிவத்தில் வெட்டி எடுத்தால் சுவையான மாம்பழ அல்வா தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 60kcal | Carbohydrates: 17g | Protein: 10g | Fat: 0.9g | Saturated Fat: 1g | Sodium: 21mg | Fiber: 7g | Sugar: 0.02g

இதையும் படியுங்கள் : இட்லி, தோசை, சூடான சாதத்திற்கு ஏற்ற மாங்காய் தொக்கு, ஒருமுறை செஞ்சு வச்சுக்கிட்டா 6 மாதம் ஆனாலும் கெட்டுப் போகாது!