இட்லி, தோசை, சூடான சாதத்திற்கு ஏற்ற மாங்காய் தொக்கு, ஒருமுறை செஞ்சு வச்சுக்கிட்டா 6 மாதம் ஆனாலும் கெட்டுப் போகாது!

- Advertisement -

மாங்காய்யில் சாம்பார், சாதம் போன்ற மற்ற உணவுகளும் செய்யப்படுகிறது. வடுமாங்காய் ஊறுகாய்,  அரிந்த மாங்காய் ஊறுகாய், சீவிய மாங்காய் ஊறுகாய்,  விதவிதமான மாங்காய்களை பயன்படுத்தி வெவ்வேறு விதமான மாங்காய் செய்யலாம். வீடுகளில் செய்யப்படும் மாங்காய் தொக்குஉடனடியாக செய்யப்படுவது. இதனை வெயிலில் காயவைப்பது அல்லது ஊற வைப்பது போன்றவற்றை செய்வதில்லை. 

-விளம்பரம்-

செய்த உடனேயே அடுத்த அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்தில் பரிமாறப்படும்.  கல்யாண பந்தியில் பரிமாறப்படும் அதே சுவையில் மாங்காய் ஊறுகாயை வீட்டிலேயே செய்யலாம். இந்த தொக்கு , தயிர் சாதம் தவிர சாம்பார் சாதம், ரசம் சாதம், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

 மாங்காய் தொக்கு இப்படி ஒருமுறை நாம் செய்து வைத்துக் கொண்டால் ஆறு மாதம் வரை ருசிக்க ருசிக்க சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு சட்டினி இல்லாத சமயங்களில் இந்த தொக்கை கொஞ்சம் வைத்து சாப்பிட்டால், அவ்வளவு அருமையாக இருக்கும். அது மட்டுமல்லாமல் சூடான சாதத்துடன் அப்படியே பிசைந்து சாப்பிட்டு விடலாம்! சுவை மிகுந்த இந்த மாங்காய் தொக்கு எளிதாக எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் பார்க்க இருக்கிறோம்.

Print
2 from 1 vote

மாங்காய் தொக்கு | Mango Thokku Recipe In Tamil

மாங்காய் தொக்கு இப்படி ஒருமுறைநாம் செய்து வைத்துக் கொண்டால் ஆறு மாதம் வரை ருசிக்க ருசிக்க சாப்பிடலாம். இட்லி,தோசைக்கு சட்டினி இல்லாத சமயங்களில் இந்த தொக்கை கொஞ்சம் வைத்து சாப்பிட்டால், அவ்வளவுஅருமையாக இருக்கும். உடனேயே அடுத்த அரை மணி நேரம் அல்லது ஒரு மணிநேரத்தில் பரிமாறப்படும்.  கல்யாண பந்தியில்பரிமாறப்படும் அதே சுவையில் மாங்காய் ஊறுகாயை வீட்டிலேயே செய்யலாம். இந்த தொக்கு ,தயிர் சாதம் தவிர சாம்பார் சாதம், ரசம் சாதம், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். வாருங்கள்இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: tamil nadu
Keyword: mango thokku
Yield: 4
Calories: 493kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 மாங்காய்
  • 2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் வெந்தயம்
  • 100 மில்லி நல்லெண்ணெய்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 3 டேபிள்ஸ்பூன் மிளகாய்த் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் வெல்லத் தூள்
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயத் தூள்

செய்முறை

  • முதலில் இரண்டு பெரிய மாங்காய் எடுத்துக் கொள்ளுங்கள்.நீங்கள் தேர்ந்தெடுக்கும் மாங்காய் நல்ல புளிப்பு சுவையுள்ள நீட்டு மாங்காயாக இருந்தால்நன்றாக இருக்கும். மாங்காய் உடைய மேல் தோலை சீவி உள்ளே தண்ணீர் இல்லாமல், ஈரப்பதம்இல்லாமல் உலர்வாக வைத்துக் கொள்ளுங்கள்.
  • அதன் பின்பு தேங்காய் துருவும் துருவலில் பெரியகண் உள்ள பகுதியில் தேய்த்து நன்கு துருவி எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அடுப்பை பற்றவைத்து அதில் ஒரு அடி கனமான வாணலி ஒன்றை வைத்து கொள்ளுங்கள்.
  • அதில் 50ml அளவிற்கு நல்லெண்ணெயை ஊற்றி காயவிடுங்கள். மீதம் இருக்கும் எண்ணெயை இறுதியாக சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள்.
     
  • கடுகு பொரிந்ததும் நீங்கள் துருவி வைத்துள்ளமாங்காய் துருவலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்னர் மஞ்சள் தூள் சேர்த்து நன்குவதக்கி விடுங்கள்.
  • ஐந்து நிமிடத்தில் நன்கு மாங்காய் வெந்துவிடும்.அதன் பிறகு தேவையான அளவிற்கு உப்பு சேர்க்க வேண்டும். தூள் உப்பு இரண்டு டேபிள் ஸ்பூன்அளவிற்கு சேர்த்தால் சரியாக கிடைக்கும்.

Nutrition

Serving: 250g | Calories: 493kcal | Carbohydrates: 69g | Protein: 4.9g | Fat: 25g | Sodium: 16mg | Potassium: 432mg | Calcium: 32mg | Iron: 4.1mg

இதையும் படியுங்கள் : சூப்பரான மாங்காய் கொத்தமல்லி சாதம் அடுத்தமுறை இப்படி செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி தான்!