சூப்பரான மாங்காய் கொத்தமல்லி சாதம் அடுத்தமுறை இப்படி செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி தான்!

- Advertisement -

மாங்காய் சீசன் முடிவுற்றாலும் சரி, மாங்காய் மீது இருக்கும் கிரேஸூக்கு குறைச்சலே இல்லை. மாங்காயை எந்த வகையில் கொடுத்தாலும் ருசித்து சாப்பிடும் மக்களுக்கான சூப்பர் டிஷ் இது. மாங்காய் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். காரணம் அதிலிருக்கும் புளிப்பு சுவை தான்.புளிப்பு, காரம் எல்லாம் சேர்த்து சமைத்தால் எப்படி இருக்கும். கண்டிப்பாக அன்றைக்கு உங்க நாவிற்கு விருந்து தான்.

-விளம்பரம்-

மாங்காயில் அனைவரும் ஊறுகாய் செய்துதான் பார்த்திருப்போம். இந்த மாங்காய் சாதம் உங்களுக்கு காலை உணவாகவும் நீங்கள் செய்து உண்ணலாம். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவாகவும் கொடுத்து விடலாம். இந்த மாங்காய் சாதம் செய்ய அதிகமாக பொருள்களெல்லாம் தேவையில்லை. வீட்டில் இருக்கக்கூடிய எளிமையான பொருள்களே போதுமானது..!

- Advertisement -

இந்த மாங்காய் சாதத்தின் சுவையானது ஒரு முறை நீங்கள் சாப்பிட பிறகு அடிக்கடி சாப்பிட தூண்டும் அளவிற்கு சுவைமிக்கதாக இருக்கும். மிகவும் குறைவான நேரத்தில் சீக்கிரமாக செய்து முடிக்கக் கூடிய ஒரு உணவு இது. கொத்தமல்லி என்றாலே அதற்கு ஒரு தனி ருசி இருக்கத்தான் செய்கிறது. எந்த உணவு பொருட்கள் செய்தாலும், அதில் கொத்தமல்லி சேர்த்து சாப்பிட்டால், ருசியாகத்தான் இருக்கும். அப்படி, சுவை மிகுந்த உணவு பொருளான கொத்தமல்லியில் இன்று கொத்தமல்லி மாங்காய் இரண்டும் சேர்ந்து சாதம் செய்வது எப்படி என்பதை காணலாம்.

Print
4 from 1 vote

மாங்காய் கொத்தமல்லி சாதம் | Raw Mango coriander rice recipe in tamil

மாங்காய் சீசன் முடிவுற்றாலும் சரி, மாங்காய் மீது இருக்கும் கிரேஸூக்கு குறைச்சலே இல்லை. மாங்காயை எந்த வகையில் கொடுத்தாலும் ருசித்து சாப்பிடும் மக்களுக்கான சூப்பர் டிஷ் இது. மாங்காய் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். காரணம் அதிலிருக்கும் புளிப்பு சுவை தான்.புளிப்பு, காரம் எல்லாம் சேர்த்து சமைத்தால் எப்படி இருக்கும். கண்டிப்பாக அன்றைக்கு உங்க நாவிற்கு விருந்து தான். மாங்காயில் அனைவரும் ஊறுகாய் செய்துதான் பார்த்திருப்போம். எந்த உணவு பொருட்கள் செய்தாலும், அதில் கொத்தமல்லி சேர்த்து சாப்பிட்டால், ருசியாகத்தான் இருக்கும். அப்படி, சுவை மிகுந்த உணவு பொருளான கொத்தமல்லியில் இன்று கொத்தமல்லி மாங்காய் இரண்டும் சேர்ந்து சாதம் செய்வது எப்படி என்பதை காணலாம்.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: Indian
Keyword: mango coriander rice
Yield: 4 People
Calories: 260kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 கப் வேகவைத்த சாதம்
  • 3/4 கப் துருவிய மாங்காய்
  • 1/2 டீஸ்பூன் உளுந்து
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 டேபிள் ஸ்பூன் நெய்
  • 1 வரமிளகாய்
  • உப்பு                              தேவையான அளவு
  • நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு

அரைக்க

  • 1 கப் கொத்தமல்லி இலை
  • 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு 
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 4 பச்சை மிளகாய்

செய்முறை

  • முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலைப் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
  • பிறகு இதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய் சேர்த்து சுருண்டு வரும் வரை வதக்கி ஆற விடவும்.
  • பிறகு இவை நன்றாக ஆறிய பிறகு மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின்னர் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, வரமிளகாய் சேர்த்து தாளித்து, பிறகு துருவிய மாங்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பிறகு அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி விழுதை இதனுடன் சேர்த்து மிதமான தீயில் நன்றாக வதக்கவும். அதன்பிறகு நெய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • வேக வைத்த சாதத்தை இதனுடன் சேர்த்து நன்றாக கலந்து இறுதியாக சிறிது துருவிய மாங்காய் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும்.
  • அவ்வளவுதான் சுவையான மாங்காய்‌ கொத்தமல்லி சாதம் தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 260kcal | Carbohydrates: 0.8g | Protein: 15g | Fat: 0.4g | Sodium: 22mg | Fiber: 1.6g | Vitamin A: 365IU | Vitamin C: 27.3mg | Calcium: 10mg | Iron: 0.12mg