வீடே மணக்கமணக்க காலை டிபனுக்கு ருசியான மசாலா ஆப்பம் இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

தினமும் காலையில் இட்லி தோசை மற்றும் பூரி போன்றவற்றை மட்டுமே அதிகமாக நாம் சாப்பிடுவது வழக்கம். ஆனால் அதைவிட சுவையான மற்றும் ஆரோக்கியமான டிபன் வகைதான் ஆப்பம். தற்போதுள்ள குழந்தைகளுக்கு இந்த மாதிரியான மசாலா ஆப்பம் ஊற்றி காலையில் குடுத்து பாருங்கள் தினமும் அவர்கள் அதை விரும்பி கேட்பார்கள்.

-விளம்பரம்-

ஆப்ப மாவில் பஞ்சு போல மசாலா ஆப்பத்தை ஒரு முறை இப்படி சுட்டுப் பாருங்க. இதில் ஈஸ்ட் போட வேண்டாம். சோடா உப்பு கூட போட வேண்டாம். ஆப்பம் பஞ்சு போல ஓட்டை ஓட்டையாக அழகாக சாஃப்டாக கிடைக்கும். வழக்கம்போல இந்த ஆபத்துக்கு தேங்காய்ப்பால் சைடிஷ் ஆக பரிமாற வேண்டாம். உங்கள் விருப்பம் போல சைவ குருமா, அசைவ கிரேவி எதை வேண்டும் என்றாலும் சைடிஸ் ஆக வைக்கலாம். நல்ல நிறைவான காலை உணவாகவும், இரவு உணவாகவும் இதை நாம் எடுத்துக் கொள்ளலாம். வாங்க அழகான ருசி தரக்கூடிய அந்த மசாலா ஆப்பம் எப்படி செய்வது நாமும் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -
Print
No ratings yet

மசாலா ஆப்பம் | Masala Appam Recipe In Tamil

ஆப்ப மாவில் பஞ்சு போல மசாலா ஆப்பத்தை ஒருமுறை இப்படி சுட்டுப் பாருங்க. இதில் ஈஸ்ட் போட வேண்டாம். சோடா உப்பு கூட போட வேண்டாம்.ஆப்பம் பஞ்சு போல ஓட்டை ஓட்டையாக அழகாக சாஃப்டாக கிடைக்கும். வழக்கம்போல இந்த ஆபத்துக்குதேங்காய்ப்பால் சைடிஷ் ஆக பரிமாற வேண்டாம். உங்கள் விருப்பம் போல சைவ குருமா, அசைவகிரேவி எதை வேண்டும் என்றாலும் சைடிஸ் ஆக வைக்கலாம். நல்ல நிறைவான காலை உணவாகவும்,இரவு உணவாகவும் இதை நாம் எடுத்துக் கொள்ளலாம். வாங்க அழகான ருசி தரக்கூடிய அந்த மசாலாஆப்பம் எப்படி செய்வது நாமும் தெரிந்து கொள்வோம்.
Prep Time5 minutes
Active Time5 minutes
Course: Breakfast
Cuisine: tamil nadu
Keyword: Masala Appam
Yield: 4
Calories: 55kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 கப் ஆப்ப மாவு
  • எண்ணெய் தேய்க்க
  • 2 மேசைக்கரண்டி அரைக்க வேண்டியவை துருவிய தேங்காய்
  • 1/4 தேக்கரண்டி சோம்பு/பெருஞ்சீரகம்
  • 1 பச்சை மிளகாய்
  • 1 வெங்காயம்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்

செய்முறை

  • முதலில் மேலே கொடுப்பட்டுள்ள பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும். அதை ஆப்ப மாவுடன் சேர்க்கவும். ஒரு தவாவை சூடாக்கவும்.
  • அதன் பின்பு ஒரு பெரிய கரண்டியில் மாவை எடுத்து தவாவில் ஊற்றவும்.
  • சுற்றிலும் எண்ணெய் ஊற்றி மூடி வைத்து வேக வைக்கவும். சில நிமிடங்கள் கழித்து திருப்பவும்.
  • பிறகு மீண்டும் 1-2 நிமிடங்கள் வேக வைக்கவும். தவாவில் இருந்து எடுக்கவும்.
  • சுவையான மசாலா ஆப்பம் தயார்.

Nutrition

Serving: 2nos | Calories: 55kcal | Carbohydrates: 21g | Protein: 2.9g | Fat: 0.33g | Fiber: 3g

இதையும் படியுங்கள் : ருசியான மதுரை ஸ்டைல் மசாலா இடியாப்பம் இப்படி செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி தான்!