- Advertisement -
நாம் அனைவரும் தினமும் ஒரே மாதிரியான உணவை சாப்பிட்டு சலித்து விடுகிறோம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் வீட்டிலேயே மசாலா பாத் சாதம் செய்யலாம். இது சாதாரண சாம்பார் சாதம் விட சுவையாக இருக்கும். ஊறுகாய் மற்றும் சாலட் உடன் பரிமாறலாம். இதற்கு முன்பு எப்போதாவது வீட்டில் மசாலா பாத் செய்திருக்கிறீர்களா? இல்லை என்றால் கவலை வேண்டாம், இன்று மசாலா பாத் செய்யும் செய்முறையை பற்றி கூறுவோம்.
-விளம்பரம்-
மசாலா பாத் சாதம் | Masala Bath Sadam Recipe In Tamil
நாம் அனைவரும் தினமும் ஒரே மாதிரியான உணவை சாப்பிட்டு சலித்து விடுகிறோம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் வீட்டிலேயே மசாலா பாத் சாதம் செய்யலாம். இது சாதாரண சாம்பார் சாதம் விட சுவையாக இருக்கும். ஊறுகாய் மற்றும் சாலட் உடன் பரிமாறலாம்.
Yield: 4
Calories: 318kcal
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1/2 கப் பச்சரிசி
- 1/4 கப் பச்சைப் பட்டாணி
- 1 உருளைக்கிழங்கு
- 1 கத்திரிக்காய்
- 1 பெரிய வெங்காயம்
- 2 டேபிள்ஸ்பூன் நறுக்கிய மல்லித்தழை
- 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
- உப்பு ருசிக்கேற்ப
- 2 டீஸ்பூன் தனியா தூள்
- 2 டீஸ்பூன் சீரகத்தூள்
- 2 டீஸ்பூன் மிளகாய்தூள்
- 3/4 டீஸ்பூன் கரம் மசாலாதூள்
- 1 1/2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
அரைப்பதற்கு:
- 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்
- 2 பச்சை மிளகாய்
- 1 துண்டு இஞ்சி
- 6 பல் பூண்டு
செய்முறை
- அரிசியைக் கழுவிவைக்கவும். பொருட்களை விழுதாக அரைக்கக் கொடுத்துள்ள அரைத்துக்கொள்ளவும். கத்திரிக்காயையும் உருளைக்கிழங்கையும் சற்று பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
- குக்கரில் நெய்யை ஊற்றி,அதில் வெங்காயத்தைப் போட்டு லேசாக வதக்கவும். பிறகு, கத்திரிக்காய், உருளைக்கிழங்கு துண்டுகளையும் சேர்த்து வதக்கி, அரைத்த விழுது, கரம் மசாலா, மஞ்சள்தூள், தனியா தூள், சீரகத்தூள், அரிசி ஆகியவற்றையும் சேர்க்கவும்.
- அதில் ஒன்றரை கப் நீர் விட்டு, உப்பு போட்டு மூடி, 'குக்கரில் மூன்று விசில் வைக்கவும். வெளியேஎடுத்து. கலவையைக் கிளறிவிடவும்.
- நன்கு பொலபொலவென வந்ததும், மல்லித்தழை தூவி, சுடச் சுடப் பரிமாறவும். சுவை அள்ளிக்கொண்டு போகும்
Nutrition
Serving: 100g | Calories: 318kcal | Carbohydrates: 57.17g | Protein: 7.75g | Fat: 6.19g | Cholesterol: 3mg | Sodium: 866mg | Potassium: 354mg | Fiber: 2.5g
- Advertisement -