நம் பாவங்களை நீக்கும் மாசி முதல் வெள்ளியின் சிறப்புகளும் மற்றும் அன்று செய்ய வேண்டிய வழிபாடுகள்!

- Advertisement -

தை அமாவாசை முடிந்து வரக்கூடிய ஏழாவது திதி தான் சப்தமி திதி என்று அழைக்கப்படுகிறது. இது ரதசப்தமி என்றும் அழைக்கப்படுகிறது. மாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமையில் பிப்ரவரி 16ஆம் தேதி வரக்கூடிய இந்த ரதசப்தமியின் சிறப்புகளையும் அன்று நம் பாவங்கள் விலகி நம் வாழ்க்கையில் முன்னேற செய்ய வேண்டிய சில பரிகாரங்களையும் வழிபாடுகளையும் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

ரதசப்தமியின் சிறப்புகள்

சூரிய பகவான் அவதரித்த நாளாக ரதசப்தமி கருதப்படுகிறது. எனவே இது சூரிய ஜெயந்தி எனவும் அழைக்கப்படுகிறது. சூரிய பகவான் அவருடைய ஏழு குதிரைகள் கொண்ட ரதத்தை வடகிழக்கு நோக்கி செலுத்துறதா சொல்லப்படுகிறது. இந்த ரதசப்தமி அன்றுதான் சூரிய பகவான் அவருடைய உத்திரயான பயணத்தை தொடங்குவார். சூரிய பகவானின் ஏழு குதிரைகள் கொண்ட ரதமானது ஏழு வண்ணங்களைக் கொண்ட வானவில்லையும் வாரத்தில் ஏழு நாட்களையும் குறிக்கும். சூரிய பகவானுக்கு உகந்த நாளான ஞாயிற்றுக்கிழமையிலிருந்து அந்த வாரத்தில் ஏழு நாட்களையும் குறிக்கக் கூடியது.

- Advertisement -

அந்த ரதத்தில் 12 சக்கரங்கள் உள்ளது. அந்த 12 சக்கரங்களும் 12 ராசிகளை குறிக்கும். குறிப்பாக ரதசப்தமி தினத்தன்று சூரிய பகவானின் ஆற்றலையும் ஒளியையும் பெறக்கூடிய நாளாக கருதப்படுகிறது. இந்த ரதசப்தமி ஆனது பிப்ரவரி 16 மாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமை வருவதால் இன்னும் சிறப்பானதாக கருதப்படுகிறது. அன்று நாம் மகாலட்சுமி தேவியையும் சுக்கிர பகவானையும் மனதார வழிபட்டால் நம் வீட்டில் உள்ள கடன் அனைத்தும் தீர்ந்து நம் வீட்டில் பணம் பெருகும்.

ரத சப்தமி அன்று நம் பாவங்கள் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்

ரத சப்தமி அன்று ஏழு எருக்கன் இலைகளை பறித்து வந்து ஆண்கள் அந்த ஏழு இலைகளிலும் விபூதியை வைத்து அந்த ஏழை இலைகளில் ஒன்றை தலையிலும் இரண்டை கண்களிலும் இரண்டை கைகளிலும் இரண்டை கால்களிலும் வைத்து ஒரு செம்பு தண்ணீரை தலையில் ஊற்ற வேண்டும். ஆண்கள் விபூதியை வைக்க வேண்டும் என்றால் பெண்கள் மஞ்சளை வைத்து குளிக்க வேண்டும். அந்த இருக்க நிலைகளில் வைக்கக்கூடிய மஞ்சளும் விபூதியும் நம் தலையிலும் கை கால்களிலும் கண்களிலும் படும்படியாக இருக்க வேண்டும். அப்படி குளித்தால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து போகும்.

இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று பார்த்தால் மகாபாரதப் பொருள் பீஷ்மர் அம்பு படுக்கையில் உயிர் பிரியாமல் படுத்திருந்தபோது அதற்கான காரணத்தை வேதவியாசர் இடம் கேட்ட பொழுது அவர் துரியோதனின் அவையில் பாஞ்சாலிக்கு அநீதி இழைக்கப்படும் பொழுது பீஷ்மர் அதனை தட்டிக் கேட்காமல் இருந்திருப்பார் அதனால் தான் அந்த பாவத்திற்காக தான் அம்பு படுக்கையில் இருந்த பொழுதும் பீஷ்மரின் உயிர் பிரியாமல் இருக்கும் என்று வேதவியாசர் கூறுவார். அந்த பாவம் தீர என்ன வழி என்று பீஷ்மர் வேத வியாசர் இடம் கேட்ட பொழுது வேதவியாசர் 7 எருக்கன் இலைகளை பறித்து வந்து பீஷ்மரின் தலையில் ஒன்று கைகளில் இரண்டு கண்களில் இரண்டு கால்களில் இரண்டு வைப்பார். அந்த எருக்கன் இலைகளில் இருந்து வரும் வெப்பம் அவரின் உயிரை எடுத்து அவர் செய்த அனைத்து பாவங்களையும் போக்கிவிடும். அதன்படி நாமும் எருக்கன் இலைகளை வைத்து குளித்தால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்று சொல்வார்கள்.

-விளம்பரம்-

ரத சப்தமி அன்று செய்ய வேண்டிய வழிபாடு

ரதசப்தமி அன்று சூரியன் உதிக்கும் முன்பு எருக்கன் இலைகளை வைத்து குளித்த பிறகு ஒரு பித்தளை தட்டில் அகல் விளக்கு ஒன்றை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி வைத்திருக்க வேண்டும் வாசனை உள்ள பூக்கள் ஒரு செம்பு தண்ணீர் அனைத்தையும் தயாராக வைத்திருக்க வேண்டும். சூரியன் உதித்த பிறகு நம்மில் சூரிய ஒளி படும்பொழுது அகல் விளக்கு ஏற்றி சூரிய பகவானுக்கு அகல் விளக்கை காண்பித்து பூவை தூவ வேண்டும். சூரிய பகவானை நோக்கி அந்த பூக்களை தூவ வேண்டும். பிறகு எடுத்து வைத்துள்ள அந்த செம்பு தண்ணீரின் மேல் வலது கையை வைத்து நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் போக வேண்டும் என்று சூரிய பகவானே மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு சூரிய பகவானை பார்த்து அந்த தண்ணீரை துளசி செடிக்கும் துளசி செடி இல்லை என்றால் தரிலோ ஊற்ற வேண்டும் பிறகு காயத்ரி மந்திரத்தை 108 முறை சொல்லி சூரிய பகவானை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். ரதசப்தமி அன்று சூரிய கதிர்கள் நம்மில் படும்பொழுது நம் கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து நம் பாவங்கள் அனைத்தும் தீர்ந்து நம் வாழ்க்கையில் முன்னேறலாம். அதுமட்டுமில்லாமல் அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று அங்குள்ள நவகிரகத்தில் உள்ள சூரிய பகவானுக்கு செந்தாமரை மலர்கள் மற்றும் சிவப்பு நிற வஸ்திரம் வாங்கி கொடுக்கலாம். மேலும் அங்கு வரும் பக்தர்களுக்கு கோதுமையிலான இனிப்பு பிரசாதத்தை வழங்கலாம். இது அனைத்தையும் மனதார செய்து வழிபட்டால் உங்களுக்கு விரைவில் நல்ல நேரம் வரும்.