Home சைவம் சூப்பரான மட்டர் பன்னீர் கிரேவி இப்படி ஒரு முறை செஞ்சி பாருங்கள்! சாதம், சப்பாத்தி, பூரியுடன்...

சூப்பரான மட்டர் பன்னீர் கிரேவி இப்படி ஒரு முறை செஞ்சி பாருங்கள்! சாதம், சப்பாத்தி, பூரியுடன் சாப்பிட ருசியாக இருக்கும்!

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியெனில் உங்கள் வீட்டில் பன்னீர் மற்றும் பட்டாணி இருந்தால், அதைக் கொண்டு சுவையான மட்டர் பன்னீர் கிரேவி செய்யுங்கள். இந்த பன்னீர் கிரேவி சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரிக்கும் அட்டகாசமாக இருக்கும். இந்த கிரேவி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இதனை சுலபமாகவும் விரைவாகவும் செய்யலாம். பன்னீர் கிரேவி வட இந்தியாவில் இருந்து பெறப்பட்ட உணவு வகை. இது பன்னீர் பட்டர் மசாலாவில் இருந்து வேறுபட்டது. பன்னீர் டேஸ்ட்டான உணவு என்பது மட்டுமே நமக்கு தெரியும். ஆனால் பன்னீர் ஹெல்த்தியான உணவும் கூட.

-விளம்பரம்-

இந்த பன்னீரை நம் அன்றாட உணவில் சேர்த்து கொள்வதால் நமக்கு பல பயன்கள் கிடைக்கின்றன. பன்னீரில் கால்சியமும், புரதச்சத்துக்களும் உள்ளன. மேலும் ஏராளமான ஊட்டச்சத்துக்களும் உள்ளன. வலுவான பற்கள் மற்றும் எலும்பு பெறவும், உடல் மெட்டாபாலிசத்தை மேம்படுத்தவும், உடல் மற்றும் மூட்டு வலியை குறைக்கவும் உதவுகிறது. இது தவிர பன்னீரில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை கீல்வாதத்தை எதிர்த்து போராட உதவுகிறது. இன்னும் பல விதமான நன்மைகளை பன்னீரில் உள்ளன. இவ்வளவு நன்மைகளை கொண்டுள்ள பன்னீரில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சுலபமாக மட்டர் பன்னீர் கிரேவி செய்யலாம். சப்பாத்தி, பரோட்டா, தவிர்த்து சீரக சாதம் வெஜிடபிள் பிரியாணி தக்காளி சாதம் ஆகியவற்றுடன் இது சுவையாக இருக்கும். பன்னீர் கிரேவி என்பது அருமையான தொட்டுக்கறி ஆகும். சுவையான எளிய முறையில் மட்டர் பன்னீர் கிரேவி செய்யும் முறை பற்றிப் பார்க்கலாம்.

Print
5 from 1 vote

மட்டர் பன்னீர் கிரேவி | Matar Paneer Gravy Recipe In Tamil

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியெனில் உங்கள் வீட்டில் பன்னீர் மற்றும் பட்டாணி இருந்தால், அதைக் கொண்டு சுவையான மட்டர் பன்னீர் கிரேவி செய்யுங்கள். இந்த பன்னீர் கிரேவி சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரிக்கும் அட்டகாசமாக இருக்கும். இந்த கிரேவி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இதனை சுலபமாகவும் விரைவாகவும் செய்யலாம். சப்பாத்தி, பரோட்டா, தவிர்த்து சீரக சாதம் வெஜிடபிள் பிரியாணி தக்காளி சாதம் ஆகியவற்றுடன் இது சுவையாக இருக்கும். பன்னீர் கிரேவி என்பது அருமையான தொட்டுக்கறி ஆகும்.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: dinner
Cuisine: Indian
Keyword: Matar Paneer Gravy
Yield: 4 People
Calories: 321kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1 கப் வேகவைத்த பச்சை பட்டாணி
  • 1 பாக்கெட் பன்னீர்
  • 2 பெரிய வெங்காயம்
  • 3 தக்காளி
  • 6 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1 பிரியாணி இலை
  • 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 1 டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 7 முந்திரி
  • 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி தழை

செய்முறை

  • முதலில் பன்னீர் துண்டுகளை சதுரமாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  • பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் நன்கு வதங்கியதும் அத்துடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின் முந்திரி, மிளகாய்த்தூள், மல்லி தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி ஆற விடவும்.
  • இவை ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, சோம்பு, சீரகம் சேர்த்து வறுத்து பின் நாய் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • பின் வேகவைத்த பச்சை பட்டாணி, கரம் மசாலா சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து கொதிக்க விடவும்.
  • கிரேவி கொதித்ததும் பன்னீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் மல்லி இலை, கஸ்தூரி மேத்தி தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான பன்னீர் மட்டர் கிரேவி தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 321kcal | Carbohydrates: 3.6g | Protein: 25g | Fat: 2.5g | Saturated Fat: 1.8g | Sodium: 18mg | Potassium: 71mg | Fiber: 4.5g | Vitamin A: 50IU | Vitamin C: 22mg | Calcium: 40mg | Iron: 7mg

இதனையும் படியுங்கள் : வீட்டில் பன்னீர் இருந்தால் போதும் பக்காவான மாலை நேர ஸ்நாக்ஸாக பன்னீர் கட்லெட் இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்!