Home ஸ்நாக்ஸ் வீட்டில் பன்னீர் இருந்தால் போதும் பக்காவான மாலை நேர ஸ்நாக்ஸாக பன்னீர் கட்லெட் இப்படி செய்து...

வீட்டில் பன்னீர் இருந்தால் போதும் பக்காவான மாலை நேர ஸ்நாக்ஸாக பன்னீர் கட்லெட் இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்!

அனைவருக்குமே கட்லெட் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் மாலை வேளையில், பருவமழையின் போது டீ, காபி குடிக்கும் போது சாப்பிடுவது என்றால் சூப்பராக உடலுக்கு இதமாக இருக்கும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகைகளில் பன்னீரும் ஒன்று. பன்னீர் மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும். இதை நீரிழிவு உள்ளவர்களும் கூட தைரியமாக சாப்பிடலாம்.

-விளம்பரம்-

புரதம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் பன்னீரில் அதிகம். பன்னீர் வைத்து பன்னீர் கிரேவி, பன்னீர் மசாலா, பன்னீர் டிக்கா, பன்னீர் பிட்சா என்று இன்னும் பல விதமான ரெசிபிக்களை செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் பன்னீர் வைத்து க்ரன்ச்சியான கட்லெட் ரெசிபியை காண உள்ளோம். இதனை பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் அனைத்தையும் சத்தமில்லாமல் சாப்பிட்டு முடித்து மறுமுறை கேட்டு சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை அட்டகாசமாக இருக்கும்.

மாலை வேலையில் டீ,காபி உடன் சூடாக ஸ்நாக்ஸ் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். மனத்திற்கு இதமாக இருக்கும். இதற்கு எப்போதும் பஜ்ஜி, போண்டா, வடை செய்து சாப்பிடுவோம். ஆனால் புதுமையாக இந்த ரெசிபி செய்து பாருங்க. வீட்டில் உள்ள பொருட்கள் கொண்டே செய்யலாம். கட்லெட் என்றாலே குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் பன்னீர் வைத்து கட்லெட் என்றால் என்ன சும்மா விடுவார்கள் என்ன! எளிதாக பன்னீர் கட்லெட் எப்படி செய்வது என பார்க்கலாம்.

Print
5 from 1 vote

பன்னீர் கட்லெட் | Paneer Cutlet Recipe In Tamil

அனைவருக்குமே கட்லெட் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் மாலை வேளையில், பருவமழையின் போது டீ, காபி குடிக்கும் போது சாப்பிடுவது என்றால் சூப்பராக உடலுக்கு இதமாக இருக்கும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகைகளில் பன்னீரும் ஒன்று. பன்னீர் மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும். இதை நீரிழிவு உள்ளவர்களும் கூட தைரியமாக சாப்பிடலாம். புரதம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் பன்னீரில் அதிகம். பன்னீர் வைத்து பன்னீர் கிரேவி, பன்னீர் மசாலா, பன்னீர் டிக்கா, பன்னீர் பிட்சா என்று இன்னும் பல விதமான ரெசிபிக்களை செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் பன்னீர் வைத்து க்ரன்ச்சியான கட்லெட் ரெசிபியை காண உள்ளோம். இதனை பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் அனைத்தையும் சத்தமில்லாமல் சாப்பிட்டு முடித்து மறுமுறை கேட்டு சாப்பிடுவார்கள்.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: evening, snacks
Cuisine: Indian
Keyword: paneer Cutlet
Yield: 4 People
Calories: 321kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 250 கி பன்னீர்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 4 வெங்காயம்
  • 5 பச்சை மிளகாய்
  • 2 கொத்து கறிவேப்பிலை
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
  • 2 உருளைக்கிழங்கு
  • 4 டேபிள் ஸ்பூன் சோள மாவு
  • 2 டேபிள் ஸ்பூன் பிரெட் தூள்
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் உருளை கிழங்கை குக்கரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு 2 விசில் விட்டு வேகவைத்து கொள்ளவும்.
  • கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • வெங்காயம் பொன்னிறமாக வந்ததும் இஞ்சி பூண்டு விழுது, சோம்பு, கரம் மசாலா, மிளகு தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின்னர் பன்னீரை சிறு துண்டுகளாக வெட்டி வெங்காயக் கலவையுடன் சேர்த்து 5 நிமிடங்கள் வேக வைத்து அடுப்பை அணைத்து விடவும்.
  • அதன்பிறகு உருளைகிழங்கை நன்கு மசித்து அதனுடன் பன்னீர் கலவையை சேர்த்து நன்கு பிசையவும்.
  • பின்பு அதனை சிறிய உருண்டைகளாக உருட்டி வடை போல் தட்டி, சோள மாவை தண்ணீர் ஊற்றி கரைத்து கட்லெட்களை முக்கி பின்பு பிரட் தூளில் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கட்லெட்டுகளை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான பன்னீர் கட்லெட் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 321kcal | Carbohydrates: 3.9g | Protein: 25g | Fat: 2.5g | Saturated Fat: 1.8g | Sodium: 18mg | Potassium: 71mg | Fiber: 1.4g | Vitamin A: 505IU | Vitamin C: 25mg | Calcium: 40mg | Iron: 4.1mg

இதனையும்‌ படியுங்கள் : நாவில் எச்சில் ஊரும் சுவையில் முட்டை கட்லெட் குழம்பு ஒரு முறை ருசித்து விட்டால் மீண்டும் அடிக்கடி செய்வீர்கள்!