Home சைவம் மீல்மேக்கர் ப்ரை சாப்பிட்டு இருக்கீங்களா? ஒரு முறை இப்படி செய்து பாருங்க ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

மீல்மேக்கர் ப்ரை சாப்பிட்டு இருக்கீங்களா? ஒரு முறை இப்படி செய்து பாருங்க ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

ஏதாவது சூடாக சாப்பிட வேண்டும். அது காரசாரமாகவும் இருக்க வேண்டும். விலை மலிவாகவும் இருக்க வேண்டும் என்றால், இந்த சோயா ஃப்ரை ஒரு முறை  வீட்ல ட்ரை பண்ணி பார்க்கலாம். குழந்தைகளுக்கு நல்ல சுவையான அதே நேரத்தில் அவர்கள் விரும்பும் படியான ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. பெரும்பாலும் இந்த மீல்மேக்கர் உணவு வகைகள் குழந்தைகள் அதிகம் உண்பதில்லை , ஆனாலும் சத்துக்கள் அதிகம் உள்ளது. இதை குழந்தைகளுக்கு பிடித்த உணவான ப்ரை செய்து கொடுத்தால் நல்லது தானே.

-விளம்பரம்-

கொஞ்சம் மழை வர மாதிரி இருக்கு. குளிர் அடிக்கிற மாதிரி இருக்கு. டீ குடிக்கும் போது சுட சுட இந்த சோயா ஃப்ரை ரெடி பண்ணுங்க. டீ டைம் ஸ்னாக்ஸ் ஆகவும் இதை சாப்பிடலாம். சாதத்துடன் சப்பாத்தியுடன் தொட்டும் இதை சாப்பிடலாம். அது நம்முடைய விருப்பம் தான். சோயாவை சிலர் மீல்மேக்கர் என்றும் சொல்லுவார்கள்.அப்படி ஒரு சுவையான மீல் மேக்கர், கொண்டைக்கடலை கட்லெட்டை தான் இப்போது இந்த பதிவில் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள போகிறோம்.

Print
5 from 2 votes

மீல்மேக்கர் ப்ரை | Meal maker Fry Recipe In Tamil

ஏதாவது சூடாகசாப்பிட வேண்டும். அது காரசாரமாகவும் இருக்க வேண்டும். விலை மலிவாகவும் இருக்க வேண்டும்என்றால், இந்த சோயா ஃப்ரை ஒரு முறை  வீட்ல ட்ரை பண்ணி பார்க்கலாம். குழந்தைகளுக்குநல்ல சுவையான அதே நேரத்தில் அவர்கள் விரும்பும் படியான ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பதுஎன்பது சாதாரண விஷயம் அல்ல. பெரும்பாலும் இந்த மீல்மேக்கர் உணவு வகைகள் குழந்தைகள்அதிகம் உண்பதில்லை , ஆனாலும் சத்துக்கள் அதிகம் உள்ளது. இதை குழந்தைகளுக்கு பிடித்தஉணவான ப்ரை செய்து கொடுத்தால் நல்லது தானே. கொஞ்சம் மழை வர மாதிரிஇருக்கு. குளிர் அடிக்கிற மாதிரி இருக்கு. டீ குடிக்கும் போது சுட சுட இந்த சோயா ஃப்ரைரெடி பண்ணுங்க. டீ டைம் ஸ்னாக்ஸ் ஆகவும் இதை சாப்பிடலாம்.
Prep Time10 minutes
Active Time5 minutes
Course: snacks
Cuisine: tamilnadu
Keyword: Meal Maker Fry
Yield: 4
Calories: 158kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 100 கிராம் மீல்மேக்கர்
  • 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 1/4 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
  • உப்பு தேவையானஅளவு
  • 2 தேக்கரண்டி சோளமாவு
  • எண்ணெய் பொரிக்க

செய்முறை

  • மீல் மேக்கரை அரை மணி நேரம் நன்றாக தண்ணீரில் ஊற வைத்து பிறகுபிழிந்து தண்ணீர் இல்லாமல் தனியே எடுத்து வைக்கவும்.
  • பின்னர் அதனுடன் மேலே கொடுத்து இருக்கும் பொருட்களில் எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் சேர்க்கவும் (தண்ணீர் தேவையில்லை)
  • மீல் மேக்கரில் நன்றாக படும்படி சேர்த்து பத்து நிமிடம் ஊற வைக்கவும். (விருப்பப்பட்டால்முட்டை வெள்ளை கரு சேர்க்கலாம்)
  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரட்டி வைத்திருக்கும் மீல்மேக்கரை போட்டு பொரித்து எடுக்கவம்.
  • சூடான மீல்மேக்கர் ப்ரை ரெடி.

Nutrition

Serving: 450g | Calories: 158kcal | Carbohydrates: 2g | Protein: 21g | Fat: 0.1g | Saturated Fat: 0.5g | Potassium: 152mg | Fiber: 2g | Sugar: 0.5g