சுவையான இந்த ‘மில்க் பேடாவை’ உங்க வீட்டிலேயே சுலபமாக செஞ்சு அசத்துங்க! இதன் ருசியயே தனி தான்!

- Advertisement -

மில்க் சேர்த்து செய்ய கூடிய இந்த வகையான இனிப்புகள் அப்படிங்கிற போது ரொம்பவே எல்லாருக்கும் பிடிக்கும். ரொம்ப தெகட்டாம எப்படி சூப்பரான மில்க் பேடா செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கறோம். குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும். நல்ல ஒயிட் கலர்ல இந்த பேடாவை பார்த்தாலே எடுத்து சாப்பிடணும் போல ஒரு பீல் கண்டிப்பா எல்லாருக்குமே வரும்.

-விளம்பரம்-

இந்த பேடா கடைகளில் மட்டுமே வாங்கி சாப்பிட்ட நமக்கு வீடுகள்ல செய்து சாப்பிட்டா எப்படி இருக்கும். அதிகமா பணம் கொடுத்து கொஞ்சமான ஸ்வீட்டை வாங்கி சாப்பிடுவதற்கு கொஞ்சமான பணத்துல பொருட்களை வாங்கி அதிகமான இனிப்புகளை வீட்ல செய்து சாப்பிடறதோட சுவையே சுவை தான் வேணுங்கற அளவுக்கு சேர்த்து சாப்பிட்டுக்கலாம். இந்த சுவையான மில்க் பேடாவை எப்படி சூப்பரா செய்வது என்று பார்க்க இருக்கோம். இந்த சுவையான நீங்க பெஸ்டிவல் டைம்ல மட்டும் பண்ணி கொடுக்கணும்னு அவசியம் கிடையாது. எல்லா டைம்லையும் உங்ககிட்ட பால் இருக்கா பால் பவுடர் இருக்கா உடனே டக்குனு செய்து கொடுத்தீங்கன்னா சூப்பரா என்ஜாய் பண்ணுவாங்க.

- Advertisement -

ஏதோ போர் அடிக்குது இனிப்பு எதாவது சாப்பிடணும் போல இருக்கு அப்படின்னா இந்த சாப்பிட கொடுத்தீங்கன்னா போதும் நாக்குல வச்ச உடனே கரையிற மாதிரி ரொம்பவே டேஸ்டா இருக்கும். இந்த மில்க் பேடா உங்களுக்கு மில்க் சேர்த்து செய்கிற இனிப்புகள் பிடிக்கும் அப்படினா ரொம்பவே சுலபமா நீங்க இந்த இனிப்பு வகையை செய்து சாப்பிடலாம். இந்த ஸ்வீட் ரொம்பவே நல்லா இருக்கும் செய்றதும் ரொம்பவே சுலபம். வெறும் மூனே மூணு பொருளை வைத்து ரொம்பவே டேஸ்டான செய்யப் போறோம். சரி வாங்க இந்த மில்க் பேடவை எப்படி செய்யலாம்.

Print
1 from 1 vote

மில்க் பேடா | Milk Peda Recipe In Tamil

பேடா கடைகளில் மட்டுமே வாங்கி சாப்பிட்ட நமக்கு வீடுகள்ல செய்து சாப்பிட்டா எப்படி இருக்கும். அதிகமா பணம் கொடுத்து கொஞ்சமான ஸ்வீட்டை வாங்கி சாப்பிடுவதற்கு கொஞ்சமான பணத்துல பொருட்களை வாங்கி அதிகமான இனிப்புகளை வீட்ல செய்து சாப்பிடறதோட சுவையே சுவை தான் வேணுங்கற அளவுக்கு சேர்த்து சாப்பிட்டுக்கலாம். இந்த சுவையான மில்க் பேடாவை எப்படி சூப்பரா செய்வது என்று பார்க்க இருக்கோம். இந்த சுவையான நீங்க பெஸ்டிவல் டைம்ல மட்டும் பண்ணி கொடுக்கணும்னு அவசியம் கிடையாது. எல்லா டைம்லையும் உங்ககிட்ட பால் இருக்கா பால் பவுடர் இருக்கா உடனே டக்குனு செய்து கொடுத்தீங்கன்னா சூப்பரா என்ஜாய் பண்ணுவாங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: sweets
Cuisine: tamil nadu
Keyword: Milk Peda
Yield: 4
Calories: 371kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பால்
  • 1 கப் பால் பவுடர்
  • 2 ஸ்பூன் நெய்
  • 1 கப் சர்க்கரை

செய்முறை

  • முதலில் பாலை காய்ச்சி எடுத்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் நெய், பால் பவுடர் சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக கலந்து விட்டுக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து கலந்து வைத்துள்ள பாலை சேர்த்து கைவிடாமல் நன்றாக கிளற வேண்டும். பால் நன்றாக கொதித்து வரும் பொழுது அதில் சர்க்கரையை சேர்த்து நன்றாக கைவிடாமல் கிளற வேண்டும்.
  • பால் நன்றாக கட்டியாகி  திரண்டு வரும் வரை நன்றாக கலந்து கொண்டே இருக்க வேண்டும்.
     
  • பால் நன்றாக கட்டியாக திரண்டு வந்த பிறகு அடுப்பை அணைத்துவிட்டு கை பொறுக்கும் சூடு வந்த பிறகு அவைகளை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வட்ட வடிவமாக தட்டி வைக்க வேண்டும்.
  • இப்பொழுது இந்த வட்ட வடிவ பேடாக்கள் மீது செர்ரி பழம் வைத்து கொடுத்தால் சுவையான மில்க் பேடா தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 371kcal | Carbohydrates: 94g | Protein: 2.2g | Fat: 1g | Sugar: 2g