- Advertisement -
குழந்தைகளுக்கு பிடித்த பால் ரவா உருண்டை இனி இப்படி செய்து கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. வீட்டில் விசேஷ நாளன்று இது போன்று செய்து கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க.
-விளம்பரம்-
இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீக்கலும் ட்ரை பண்ணி பாருங்க.
- Advertisement -
பால் ரவா உருண்டை | Milk Rava Urundai Recipe In Tamil
குழந்தைகளுக்கு பிடித்த பால் ரவா உருண்டை இனி இப்படி செய்து கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. வீட்டில் விசேஷ நாளன்று இது போன்று செய்து கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க.இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீக்கலும் ட்ரை பண்ணி பாருங்க.
Yield: 4 people
Equipment
- கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் ரவை
- 2 கப் பால்
- 2 ஏலக்காய்
- ½ கப் சர்க்கரை
- 2 டீஸ்பூன் நெய்
செய்முறை
- முதலில் ரவையை வாணலில் 1 தேக்கரண்டி நெய் ஊற்றி வறுத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தில் பாலை நன்றாக காய்ச்சவும்.பிறகு ஏலக்காயை பொடித்து வைக்கவும்.
- பால் கொதித்த பின் அதில் சர்க்கரை சேர்த்து கரைய விடவும். பின் அதில் ரவையை சேர்த்து மீதம் உள்ள நெய்யும் சேர்த்து வேகவிடவும்.
- ரவை நன்றாக வெந்த பிறகு கடைசியில் ஏலக்காய் தூவி கிளறி விடவும்.இந்த பால் ரவையை கொஞ்சம் நேரம் ஆறவிடவும்.
- பின் இதனை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.