இந்த வெயிலுக்கு ஏற்ற பால் சர்பத் இப்படி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

இந்த வெயிலுக்கு நம்ம ஜில்லுனு ஏதாவது குடிக்கணும்னு நினைச்சுக்கிட்டே இருப்போம். அந்த வகையில் எப்பவும் ஒரே மாதிரியா பழ ஜூஸ், ரோஸ் மில்க் லெமன் ஜூஸ் அப்படின்னு ஒரே மாதிரியே குடிக்காம கொஞ்சம் டிஃபரண்டா இந்த பால் சர்பத் ட்ரை பண்ணி குடிச்சு பாருங்க டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும். இந்த வெயிலுக்கு குடிக்கிறதுக்கு இதமா அதே வகையில ரொம்பவே ஆரோக்கியமாகவும் இந்த பால் சர்பத் இருக்கும்.

-விளம்பரம்-

இதுல நட்ஸ் எல்லாம் சேர்த்து செய்றதால இந்த பால் சர்பத் குடிக்கிறதுக்கு ரிச்சான டேஸ்ட்ல இருக்கும். அதே மாதிரி இதுல ஃப்ரூட்ஸும் சேர்த்து செய்றதால சாப்பிடுவதற்கு ரொம்பவே க்ரன்சியாவும் குடிக்கிறதுக்கு இதமாகவும் இருக்கும். நிறைய பேரு கடைகளில் பால் சர்பத் வாங்கி குடிச்சிருப்பீங்க ஆனா அதே மாதிரியான டேஸ்ல வீட்லயும் நீங்க செஞ்சு பாருங்க அப்புறம் கடைக்கு போய் குடிக்க மாட்டீங்க வீட்லதான் செஞ்சு குடிப்பீங்க அந்த அளவுக்கு டேஸ்ட் கடைகள்ல கிடைக்கிற மாதிரியே இருக்கும்.

- Advertisement -

சின்ன குழந்தைகளுக்கு இந்த வெயில் நேரத்துல பால் சர்பத் போட்டு கொடுத்தீங்கன்னா அவங்க கடைகளில் போயி அது இதுன்னு வாங்கி சாப்பிட மாட்டாங்க லீவுல குழந்தைங்க வீட்ல இருக்குறதால அவங்களும் நீங்க செஞ்சு கொடுக்கிறத ஆசையா குடிப்பாங்க. இப்ப வாங்க இந்த டேஸ்டான சிம்பிளான பால் சர்பத் வீட்லையே டக்குனு எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்

Print
4 from 1 vote

பால் சர்பத் | Milk Sarbat Recipe In Tamil

வெயிலுக்கு நம்ம ஜில்லுனு ஏதாவது குடிக்கணும்னு நினைச்சுக்கிட்டே இருப்போம். அந்த வகையில் எப்பவும்ஒரே மாதிரியா பழ ஜூஸ், ரோஸ் மில்க் லெமன் ஜூஸ் அப்படின்னு ஒரே மாதிரியே குடிக்காம கொஞ்சம்டிஃபரண்டா இந்த பால் சர்பத் ட்ரை பண்ணி குடிச்சு பாருங்க டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமாஇருக்கும். இந்த வெயிலுக்கு குடிக்கிறதுக்கு இதமா அதே வகையில ரொம்பவே ஆரோக்கியமாகவும்இந்த பால் சர்பத் இருக்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Drinks
Cuisine: tamil nadu
Keyword: Paal Sarbath
Yield: 4
Calories: 28kcal

Equipment

  • 1 பால் பாத்திரம்

தேவையான பொருட்கள்

  • 1 டேபிள் ஸ்பூன் சியா விதைகள்
  • 1 டீஸ்பூன் கார்ன் ஃபிளவர் மாவு
  • 1/2 லிட்டர் பால்
  • 10 பாதாம் பருப்பு
  • 10 பிஸ்தா பருப்பு
  • 4 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  • 2 ஏலக்காய்
  • 1/2 ஆப்பிள்
  • 2 டேபிள் ஸ்பூன் மாதுளை

செய்முறை

  • ஒரு மிக்ஸி ஜாரில் சர்க்கரை ஏலக்காய் பாதாம் முந்திரி கார்ன்பிளவர் மாவு அனைத்தையும் சேர்த்துநன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • சியா விதைகளை தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்
  • ஒரு அடி கனமான பாத்திரத்தில் பால் ஊற்றி நன்று கொதித்ததும் அரைத்து வைத்துள்ள பவுடரை சேர்த்துக் கொள்ளவும்
  • நன்றாக கலந்து பத்து நிமிடங்கள் கொதித்த பிறகு அதனை மற்றொரு பாத்திரத்துக்கு மாற்றி வைக்கவும்
  • பிறகு அதில் துருவிய ஆப்பிள் மாதுளை பழம் சியா விதைகள் சேர்த்து அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்துஎடுத்து குடித்தால் சுவையான பால் சர்பத் தயார்

Nutrition

Serving: 100g | Calories: 28kcal | Carbohydrates: 3.3g | Protein: 3.1g | Sodium: 35mg | Potassium: 213mg | Fiber: 1g

இதையும் படியுங்கள் : வாயில் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ஷாகி துக்டா வீட்டிலேயே இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!