Home சைவம் ஆந்திரா ஸ்டைல் கதம்ப காய்கறிகள் பால் கூட்டு சுலபமாக இப்படி செய்து பாருங்கள்!!!

ஆந்திரா ஸ்டைல் கதம்ப காய்கறிகள் பால் கூட்டு சுலபமாக இப்படி செய்து பாருங்கள்!!!

பொரியல்களில்  போடப்பட்டும் இந்த காய்களை வெச்சு இன்னைக்கு நாம ஆந்திரா ஸ்டைல ஒரு சமையல் செய்ய போறோம்.காய்கறிகளில் குழம்புகள்ல பலவிதங்கள் இருக்கு  வறுவலும் பொரியலுமா செய்து சாப்பிட்டு இருக்கும். சிலர் கூட்டு வைத்து சாப்பிட்டு இருப்பாங்க. ஆனால் ஆந்திரா ஸ்டைலில் யாராவது எல்லா காய்கறிகளையும் சேர்த்துன பால் கூட்டு செய்து சாப்பிட்டு இருக்கீங்களா?

-விளம்பரம்-

அதோட சுவை தனியா தான் இருக்கும் சுவையா சுலபமாக பால் கூட்டு செய்ய போறோம். அது எப்படி செய்வது தெரிஞ்சுக்க இருக்கோம்.  இந்த காய்கறிகள் எல்லாமே உடலுக்கு ரொம்பவே நல்லது .எந்த வகை காயாக இருந்தாலும் கொடி வகை காயோ , செடி வகை காயோ   அதுல இருக்குற சத்துக்கள் ரொம்பவே அதிகமாக இருக்கும். காய்கறிகளில் வறுவல் , பஜ்ஜி, பாயாசம் கூட நிறைய பேர் பண்ணி இருப்பாங்க. இந்த காய்கறிகளௌ நார்மலா பச்சையாக கூட சாப்பிடலாம்.

அது அவ்ளோ ருசியா இருக்கும். சில காய்களை முக்கால்வாசி பழமா இருக்கிற சமயங்களில் பாயாசம் கூட செய்வாங்க அது ரொம்பவே சுவையா இருக்கும். நம்ம இப்போ சில காய்கறிகளை ஆந்திரா ஸ்டைல பால் கூட்டு பண்ண போறோம் அது எப்படி பண்ணலாம் தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Print
No ratings yet

கதம்ப காய் பால் கூட்டு | mixed veggies pal kuttu recipe in tamil

பொரியல்களில்  போடப்பட்டும் இந்த காய்களை வெச்சு இன்னைக்கு நாம ஆந்திரா ஸ்டைல ஒரு சமையல் செய்ய போறோம்.காய்கறிகளில் குழம்புகள்ல பலவிதங்கள் இருக்கு  வறுவலும் பொரியலுமா செய்து சாப்பிட்டு இருக்கும். சிலர் கூட்டு வைத்து சாப்பிட்டு இருப்பாங்க. ஆனால் ஆந்திரா ஸ்டைலில் யாராவது எல்லா காய்கறிகளையும் சேர்த்துன பால் கூட்டு செய்து சாப்பிட்டு இருக்கீங்களா?
Prep Time15 minutes
Active Time20 minutes
Total Time35 minutes
Course: Gravy
Cuisine: andhra
Keyword: andhra amla rasam, Andhra Bitter Gourd Stir Fry, Andhra Coconut Rice, Andhra Cucumber Chutney
Yield: 8 People
Calories: 269kcal
Cost: 75

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 1/4 கப் கேரட்
  • 1/4 கப் பீன்ஸ்
  • 1/4 கப் உருளைக்கிழங்கு   
  • 1/4 கப் முருங்கைக்காய்
  • 1/4 கப் பரங்கிக்காய்
  • 1  வெங்காயம்
  • 1 தக்காளி                      
  • 3 பச்சை மிளகாய்
  • 1 கப் தேங்காய் பால்
  • 1/2 கப் காய்ச்சிய பால்
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்  
  • 1 ஸ்பூன் கடுகு                            
  • 1 ஸ்பூன் சீரகம் 
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • தேங்காயில் பால் எடுக்கும் பொழுது முதலில் கிடைக்கும் தேங்காய் பாலை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு நீர் சேர்த்து அரைத்து எடுக்கும் தேங்காய் பாலை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் கலக்கக்கூடாது.
  • பின் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக தாளித்துக் கொள்ளவும்.
  • கடுகு பொரிந்த பிறகு அதில் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் .
  • பிறகு அதில் நடுத்தரமான துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  • இப்போது இதில் இரண்டாம் முறையாக எடுத்து வைத்துள்ள தேங்காய் பால் மற்றும் காய்ச்சிய பால்   உப்பு சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.
  • பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • இந்த கூட்டிற்கு காரத்திற்கு பச்சை மிளகாய் மட்டுமே சேர்த்துக் கொள்வதால் காரத்திற்கு ஏற்ப நீங்கள் வேண்டுமென்றால் இரண்டு மூன்று மிளகாய்கள் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்.
  • பிறகு வெந்து கொண்டிருக்கும் காய்கறிகளில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து நன்றாக கலந்து விடவும் .
  • பிறகு அதில் நன்றாக கொதி வந்த பிறகு முதலாவதாக எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலை சேர்த்து நன்றாக கலந்து விட்டு சூடாக பரிமாறினால் சுவையான ஆந்திரா ஸ்டைல் கதம்ப காய்கறிகள் தேங்காய் பால் கூட்டு தயார்.

Nutrition

Calories: 269kcal | Carbohydrates: 15g | Protein: 42g | Fat: 25g