மணி பிளாண்டை செடியே வீட்டின் இந்த திசையில் மட்டும் வைக்காதீர்கள்! வீட்டில் வறுமை அதிகரிக்கும்!

- Advertisement -

பெரும்பாலானோரின் வீடுகளில் பொதுவாக காணப்படும் ஒரு செடி தான் மணி பிளான்ட். நிறைய பேர் இந்த செடியை அழகுக்காகவும், அதிர்ஷ்டத்திற்காகவும் வளர்க்கிறார்கள். மணி பிளான்ட் செடியை வீட்டில் மட்டுமின்றி, அலுவலகத்திலும் வளர்க்கலாம். முக்கியமாக மணி பிளான்ட் செடிக்கு அதிக பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை பூத்தொட்டியில் அல்லது கண்ணாடி பாட்டிலில் என எதில் வேண்டுமானாலும் வளர்க்கலாம்.

-விளம்பரம்-

வாஸ்துப்படி, வீட்டில் செடிளை வளர்ப்பது வீட்டின் செழிப்பை பராமரிக்க உதவுகிறது. பலர் தங்களின் வீடுகளில் பண பிரச்சனைகள் வரக்கூடாது என்பதற்காகவே செடிகளை வளர்த்து வருகிறார்கள். அதுவும் மணி பிளான்ட்டை வீட்டில் வளர்த்தால், அது செல்வ செழிப்பிற்கு உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

செய்ய கூடாத தவறுகள்

ஆனால் வீட்டில் மணி பிளான்ட்டை வளர்ப்பதாக இருந்தால், ஒருசில விஷயங்களை தவறாமல் பின்பற்ற வேண்டும். கீழே மணி பிளான்ட்டை வீட்டில் வளர்க்கும் போது செய்யக்கூடாத தவறுகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன. மணி பிளான்ட் தரையைத் தொடக்கூடாது மணி பிளான்ட் வேகமாக வளரக்கூடிய ஒரு கொடி. இந்த கொடிகளை தரையில் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மணி பிளான்ட் செடியின் கொடிகள் மேல் நோக்கி படர கயிற்றினை கட்ட வேண்டும். வாஸ்துப்படி, கொடிகள் வளர்ச்சி மற்றும் செழிப்பின் அடையாளமாகும். மணி பிளான்ட் லட்சுமி தேவியின் வடிவமாக நம்பப்படுகிறது. எனவே தான் இதன் கொடி தரையில் படக்கூடாது என்று கூறுப்படுகிறது.

மணி பிளான்ட் செடியை காய விடக்கூடாது

வாஸ்துப்படி, வீட்டில் வளர்க்கும் மணி பிளான்ட் செடி காய்கிறது என்றால், அது துரதிர்ஷ்டத்தின் அடையாளமாகும். இது அந்த வீட்டில் நிதி நிலைமையை பாதிக்கும். மணி பிளான்ட் காயக்கூடாதெனில் தினமும் அதற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். ஒருவேளை மணி பிளான்ட் செடியின் இலைகள் காய ஆரம்பித்தால், காய்ந்த இலைகளை நீக்கிவிட வேண்டும். வெளியே வைத்து வளர்க்கக்கூடாது மணி பிளான்ட் செடியை எப்போதும் வீட்டிற்குள் தான் வளர்க்க வேண்டும். இந்த செடிக்கு அதிக சூரிய ஒளி தேவைப்படாது. எனவே இதை வீட்டிற்குள் வளர்க்க வேண்டும். வாஸ்துப்படி, மணி பிளான்ட் செடியை வீட்டிற்கு வெளியே வளர்ப்பது நல்லதல்ல. இல்லாவிட்டால், வெளிப்புற காலநிலையால் எளிதில் செடியானது காய்ந்துவிடும் மற்றும் வளராமலும் இருக்கும். மேலும் வீட்டில் உள்ள மணி பிளான்ட் வளராமல் அப்படியே இருப்பது நல்லதல்ல. இதனால் வீட்டில் பண பிரச்சனைகள் வரத் தொடங்கும்.

மணி பிளான்ட்டை மற்றவர்களுக்கு கொடுக்காதீர்கள்

வாஸ்துப்படி, மணி பிளான்ட்டை எப்போதும் மற்றவர்களுக்கு கொடுக்கக்கூடாது. அப்படி கொடுத்தால், அது சுக்கிர பகவானை கோபப்படுத்தும். சுக்கிரன் செழிப்பு மற்றும் நல்வாழ்வின் அடையாளம். ஆகவே மணி பிளான்ட்டை மற்றவர்களுக்கு பரிசாக கொடுத்துவிடாதீர்கள்.

-விளம்பரம்-

எந்த திசையில் வைக்கக்கூடாது?

மணி பிளான்ட்டை வீட்டில் வளர்ப்பதாக இருந்தால், அதை சரியான திசையில் வைத்து வளர்க்க வேண்டும். எக்காரணம் கொண்டும் மணி பிளான்ட் செடியை வடகிழக்கு திசையில் வைத்து வளர்க்காதீர்கள். இந்த திசையில் மணி பிளான்ட்டை வளர்த்தால், அது நிதி இழப்பிற்கு வழிவகுக்கும். இது தவிர வீட்டில் எதிர்மறை ஆற்றலும் அதிகரிக்கும்.

மணி பிளான்ட்டை வீட்டில் வைக்க சிறந்த திசை என்றால் அது தென்கிழக்கு திசை தான். இந்த திசையில் விநாயகர் குடியிருக்கிறார். மேலும் இந்த திசை நல்வாழ்வு மற்றும் செழிப்பை குறிக்கிறது. ஆகவே தென்கிழக்கு திசையில் மணி பிளான்ட்டை வளர்த்தால், வீடு செல்வ செழிப்போடு இருக்கும்.