பாசிப்பருப்பு  பணியாரம் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க! அடிக்கடி செய்து தர சொல்லுவாங்க!

- Advertisement -

பாசிப்பருப்பு  ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மைகளை செய்யக்கூடிய ஒரு பருப்பு வகையாகும். பாசிப்பருப்பு  ஊற வைத்து அரைத்து செய்யக் கூடிய இந்த பணியாரம் புரத சத்துக்களையும், நார் சத்துகளையும் அள்ளிக் கொடுக்கக் கூடியது. இதில் வெல்லம் சேர்த்து செய்வதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள். ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கக் கூடிய இந்த பச்சை பயறு பணியாரம் ரொம்ப ரொம்ப சுலபமாக சில நிமிடத்தில் செய்து விடலாம்.

-விளம்பரம்-

பாசிப்பருப்பு இருந்தா இந்த பணியாரம் செஞ்சி பாருங்க. இதுவரைக்கும் இப்படி ஒரு டேஸ்டான பணியாரத்தை சாப்பிட்டதே இல்லைன்னு சொல்வீங்க அந்த அளவுக்கு சுவையுடன் கூடிய ஆரோக்கியமான ரெசிபி.உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களும், கொழுப்பை கட்டுக்குள் வைத்திருக்க நினைப்பவர்களும் பச்சை பயரினை தினசரி எடுத்துக் கொள்வது சாலச்சிறந்தது.

- Advertisement -

உண்ணும் உணவிற்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுத்து எது போன்ற உணவுகளை எடுத்துக் கொண்டால் நல்லது என்பவற்றை தெரிந்து கொண்டு எடுத்தாலே உடலில் பெரும்பாலான பிரச்சனைகள் நேராது. இந்த சமையல் குறிப்பு பதிவில் அப்படி ஒரு ஆரோக்கியமான அதே நேரத்தில் சுவையான ஒரு ரெசிபி பாசிப்பருப்பு பணியாரம் எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

Print
5 from 2 votes

பாசிப்பருப்பு பணியாரம் | Moong dal Paniyaram In Tamil

பாசிப்பருப்பு ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மைகளை செய்யக்கூடியஒரு பருப்பு வகையாகும். பாசிப்பருப்பு  ஊற வைத்துஅரைத்து செய்யக் கூடிய இந்த பணியாரம் புரத சத்துக்களையும், நார் சத்துகளையும் அள்ளிக்கொடுக்கக் கூடியது. இதில் வெல்லம் சேர்த்து செய்வதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கக் கூடிய இந்த பச்சை பயறு பணியாரம் ரொம்ப ரொம்ப சுலபமாகசில நிமிடத்தில் செய்து விடலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Moong Dal Paniyaaram
Yield: 4
Calories: 200kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 100 கிராம் பாசிப் பருப்பு
  • 50 கிராம் வெல்லம்
  • 1/2 மூடி தேங்காய் துருவல்
  • 2 கப் எண்ணெய்

செய்முறை

  • முதலில் பாசிப்பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவேண்டும்.
  • பின் வெல்லத்தை பொடி செய்துக் கொள்ளவும். மற்ற பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும். பாசிபருப்பு ஊறியதும் அதிலுள்ள தண்ணீரை நன்கு வடித்து எடுத்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவேண்டும் பிறகு அதனுடன் தேங்காய் துருவலையும் சேர்த்து அரைக்கவும். இந்த கலவையுடன் பொடி செய்து வைத்திருக்கும் வெல்லத்தையும் போட்டு நன்கு அரைக்கவும்.
  • விருப்பட்டால் அரைக்கும் மாவில் இரண்டு ஏலக்காயை சேர்த்துக் கொள்ளலாம் அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
  • பின் அரைத்த மாவு இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் அரைத்த மாவை ஒரு குழிக்கரண்டி எடுத்து ஊற்றவும்
  • இதைப்போல் 3 அல்லது 4 ஊற்றி நான்கு நிமிடம் கழித்து திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும். சுவையான பாசிப்பருப்பு பணியாரம் தயார்.
     

Nutrition

Serving: 100g | Calories: 200kcal | Carbohydrates: 67g | Protein: 13g | Fat: 0.1g | Sodium: 13mg | Potassium: 274mg | Fiber: 6g