சூப்பரான டிபன் பாக்ஸ் ரெசிபி சுட சுட ருசியான முருங்கைக்கீரை சாதம் இப்படி செஞ்சி பாருங்க!

- Advertisement -

சுவையான முருங்கைக்கீரை சாதத்தை இவ்வாறு ஒரு முறை சமைத்துக் கொடுத்து பாருங்கள். வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தட்டாமல் சாப்பிட்டு விடுவார்கள்.இப்பொழுதுள்ள குழந்தைகளாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி வாய்க்கு ருசியாக உணவு வேண்டும் என்கிறார்களே தவிர, அது ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும் என்று எவரும் விரும்புவதில்லை. காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளும் விதவிதமாக சமைத்து சாப்பிட்டாலும் அதில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைத்திருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தோமென்றால் அது கேள்விக்குறியாக தான் இருக்கிறது.

-விளம்பரம்-

இவ்வாறு விதவிதமாக சாப்பிடுவதில் குறை ஒன்றும் கிடையாது. ஆனால் உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்க கூடிய உணவு வகைகளையும் சேர்த்து சாப்பிட வேண்டும். அவ்வாறு அதிக புரதச் சத்தும், இரும்புச் சத்தும் இருக்கும் கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது உடலிற்கு மிகவும் நன்மையளிக்கிறது. இவ்வாறு உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை அள்ளித் தரும் முருங்கைக் கீரையை வைத்து செய்யும் ஒரு சாதத்தை சுலபமாக செய்து விடலாம்.

- Advertisement -

உடலுக்கு ஆரோக்கியம் தருகின்ற உணவுகளை பலரும் ஒதிக்கி மட்டுமே வைக்கின்றனர். ஆனால் வாரத்தில் இரண்டு முறையாவது கீரை வகைகளை சேர்த்துக் கொள்வது என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். அப்படி சேர்த்துக்கொள்ளும் இந்த சத்து நிறைந்த உணவுகளை வீட்டில் உள்ள அனைவரும் ஒதுக்கி வைக்காமல் விருப்பத்துடன் சாப்பிட வேண்டும். அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் இந்த உணவுகளை மிகவும் சுவையான விதத்தில் சமைத்து கொடுத்தால் அனைவரும் தட்டாமல் சாப்பிட்டு முடிப்பார்கள். அப்படி அனைவரும் விரும்பக்கூடிய சுவையில் இருக்கும் இந்த முருங்கைக்கீரை சாதத்தை எப்படி சமைக்க வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

Print
5 from 2 votes

முருங்கைக்கீரை சாதம் | Moringa Leaves Rice In Tamil

உடலுக்கு ஆரோக்கியம் தருகின்ற உணவுகளை பலரும்ஒதிக்கி மட்டுமே வைக்கின்றனர். ஆனால் வாரத்தில் இரண்டு முறையாவது கீரை வகைகளை சேர்த்துக்கொள்வது என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். அப்படி சேர்த்துக்கொள்ளும் இந்தசத்து நிறைந்த உணவுகளை வீட்டில் உள்ள அனைவரும் ஒதுக்கி வைக்காமல் விருப்பத்துடன் சாப்பிடவேண்டும்.அப்படி அனைவரும் விரும்பக்கூடியசுவையில் இருக்கும் இந்த முருங்கைக்கீரை சாதத்தை எப்படி சமைக்க வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Drumstick Leaves Rice
Yield: 4
Calories: 493kcal

Equipment

 • 1 கடாய்

தேவையான பொருட்கள்

 • 1 கப் அரிசி
 • 1/4 கப் பாசிப்பருப்பு
 • 4 கப் தண்ணீர்
 • 15 சின்ன வெங்காயம்
 • 1 கப் முருங்கை கீரை
 • உப்பு தேவையான அளவு
 • 5 பல் பூண்டு
 • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
 • 1 டேபிள் ஸ்பூன் கடுகு
 • 1 டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பு
 • 3 டேபிள் ஸ்பூன் நெய்

செய்முறை

 • முதலில் அரிசி மற்றும் பருப்பு இரண்டையும் சேர்த்து ஒன்றாக சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.முருங்கை கீரையையும் சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும்
 • சுத்தம் செய்து வைத்துள்ள அரிசி மற்றும் பருப்புடன் உப்பும் தண்ணீரும் சேர்த்து குக்கரில் வைத்து இரண்டு விசில் வரும்வரை காத்திருந்து இறக்கிவிடவும். பல்லாரியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
 • பூண்டை இடித்து வைத்துக் கொள்ளவும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு மற்றும் உளுந்தம் பருப்பு போட்டு இடித்து வைத்துள்ள பூண்டு சேர்த்து வதக்கவும்.
 • அதனுடன் பொடிதாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து மேலும் நன்றாக வதக்கவும்.
 • பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கை கீரையை சேர்த்து மேலும் வதக்கவும். நன்றாக வதங்கிய பின்னர் சாதத்தை சேர்த்து நன்றாக கிளறவும். பரிமாறும் முன் நெய் சேர்த்துக் கொண்டு பரிமாறவும்.

Nutrition

Serving: 250g | Calories: 493kcal | Carbohydrates: 69g | Protein: 4.9g | Fat: 25g | Sodium: 16mg | Potassium: 432mg | Calcium: 32mg | Iron: 4.1mg