நவதானிய தோசை ஒரு தரம் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! ருசியாகவும் இருக்கும் உடலுக்கு சத்துக்களும் கிடைக்கும்!

- Advertisement -

எப்போதும் போல இட்லி தோசை என்று அரிசியல் செய்த பலகாரங்களை சாப்பிடாமல், சிறுதானிய வகைகள், தானிய வகைகளை சேர்த்து கொஞ்சம் வித்யாசமாக ஆரோக்கியம் தரும் பலகாரங்களை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வது மிக மிக நல்லது. அந்த வரிசையில் நவதானிய அடை தோசை எப்படி செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வாரத்தில் ஒரு நாளோ அல்லது மாதத்தில் இரண்டு நாட்கள் இந்த நவதானிய தோசையை செய்து கொடுப்பது குடும்பத்தில் இருப்பவர்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

-விளம்பரம்-

அரிசியே சேர்க்காமல் ஆரோக்கியமான நவதானிய அடை தோசை ஒரு முறை இப்படி செய்து பாருங்களேன். வீட்டில் இருப்பவர்கள் வேணாம்னு சொல்லாம சாப்பிடுவாங்க.உடல் எடையை குறைக்க வேண்டும். அரிசியை உணவோடு அதிகம் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று நினைப்பவர்கள், ஆரோக்கியம் மிக முக்கியம் என்று நினைப்பவர்கள், வாரத்தில் 2 நாட்கள் இந்த நவதானிய அடை தோசை செய்து சாப்பிடலாம்.

- Advertisement -

அரிசி சேர்க்காமல் நவதானிய சேர்த்து அருமையாக ருசியான அடை சுடுவது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த அடை தோசைக்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி, அவியல், சாம்பார் எது வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான். நேரத்தைக் கடத்தாமல் அந்த செய்முறையை பார்க்கலாம்.

Print
3.50 from 2 votes

நவதானிய தோசை | Multigrain Dosa Recipe In Tamil

அரிசியே சேர்க்காமல் ஆரோக்கியமான நவதானிய அடைதோசை ஒரு முறை இப்படி செய்து பாருங்களேன். வீட்டில் இருப்பவர்கள் வேணாம்னு சொல்லாமசாப்பிடுவாங்க.உடல் எடையை குறைக்க வேண்டும். அரிசியை உணவோடு அதிகம் சேர்த்துக் கொள்ளக்கூடாதுஎன்று நினைப்பவர்கள், ஆரோக்கியம் மிக முக்கியம் என்று நினைப்பவர்கள், வாரத்தில் 2 நாட்கள்இந்த நவதானிய அடை தோசை செய்து சாப்பிடலாம். இந்த அடை தோசைக்கு தொட்டுக்கொள்ள தேங்காய்சட்னி, அவியல், சாம்பார் எது வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம்தான். நேரத்தைக் கடத்தாமல் அந்த செய்முறையை பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Multigrain Dosai
Yield: 4
Calories: 212kcal

Equipment

  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 1/4 கப் பாசிப்பயறு
  • 1/4 கப் கருப்பு உளுத்தம்பருப்பு
  • கப் கொண்டைக்கடலை
  • கப் பச்சரிசி
  • கப் துவரம் பருப்பு
  • கப் சோயா
  • கப் வெள்ளை சோளம்
  • 1 டேபிள் ஸ்பூன் எள்ளு
  • 3 பச்சை மிளகாய்
  • 6  காய்ந்த மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • கறிவேப்பிலை சிறிது
  • 1//2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • கொத்துமல்லி சிறிதளவு

செய்முறை

  • எல்லா தானியங்களையும் ஒன்றாக போட்டு நன்றாகக் களைந்து சுமார் 5 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • ஊறிய பிறகு தானியங்கள், தேங்காய் துருவல், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு இவற்றைச் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
  • பொடியாக அரிந்த கொத்துமல்லியை சேர்த்து மெல்லிய தோசைகளாக வார்த்து எடுக்கவும்..
  • இஞ்சி சேர்ப்பதால் எளிதில் ஜீரணமாகும்.

Nutrition

Serving: 100g | Calories: 212kcal | Carbohydrates: 65g | Protein: 7g | Fiber: 9g | Calcium: 20mg | Iron: 5mg