ருசியான முருங்கைப்பூ சாதம் இப்படி ஒரு தரம் வீட்டில் செஞ்சி பாருங்க! அருமையான டிபன் பாக்ஸ் ரெசிபி!

- Advertisement -

முருங்கை மரத்தில் இலையும், காயும் மட்டும் தான் பலன் கொடுக்கும் என்றில்லை. முருங்கைப்பூவும் அதிகப்படியான பலன்களை கொண்டிருக்கிறது. சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் என்று அழைத்தார்கள். முருங்கையின் பயன்களை ஒரு புத்தமாகவே வெளியிடலாம். முருங்கை இலை, வேர், பூ, பிஞ்சு, காய், பட்டை என்று அனைத்துமே மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. முருங்கை மரங்களில் இலைகளை மறைத்தபடி பூக்கள் பூத்துக் குலுங்கும் பருவம் இது.

-விளம்பரம்-

அந்தந்தப் பருவங்களில் விளைகிறவற்றை உணவாகக் கொள்வதுதான் நம் முன்னோர் வகுத்துவைத்திருக்கும் உணவு முறை. “மருத்துவக் குணமும் இரும்புச்சத்தும் நிறைந்த முருங்கைப்பூவைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், சளித்தொல்லை நீங்கும். வீட்டில் முருங்கை மரம் இல்லாதவர்கள் உழவர் சந்தைகளிலும் காய்கறிச் சந்தைகளிலும் வாங்கிப் பயன்படுத்தலாம். முருங்கைப்பூ பால், முருங்கைப்பூ சூப், முருங்கைப்பூ சாதம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? முருங்கை என்றதும் அதன் காய்களும் கீரைகளும் மட்டுமே நமக்குத் தெரியும்.

- Advertisement -

அதில் மருத்துவக் குணங்கள் இருப்பதாகச் சொல்லக்கேட்டு விதம்விதமாய் சமைத்து உண்டு ருசித்து ரசித்திருப்போம். ஆனால், முருங்கைப்பூவில் இருக்கும் சத்துகள் மட்டுமல்ல, அதில் இருக்கும் ரகசியங்கள் நம்மில் பலரும் அறிந்திராத ஒன்று! முருங்கை பூ சாதம் சாப்பிடுவதால் வாதம் பிரச்சனையை எளிதில் குணமாகும்.முருங்கைப் பூவுடன் சமளவு துவரம்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து பகலில் சாப்பிட்டு வர, உடலில் வலு ஏற்படும். ரத்தம் அதிகரிக்கும். பெருப்பாடு குணமாகும்.

Print
No ratings yet

முருங்கைப்பூ சாதம் | Murungaipoo Sadam Recipe In Tamil

முருங்கை மரத்தில் இலையும், காயும் மட்டும் தான் பலன் கொடுக்கும் என்றில்லை. முருங்கைப்பூவும் அதிகப்படியான பலன்களை கொண்டிருக்கிறது. சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் என்று அழைத்தார்கள். முருங்கையின் பயன்களை ஒரு புத்தமாகவே வெளியிடலாம். முருங்கை இலை, வேர், பூ, பிஞ்சு, காய், பட்டை என்று அனைத்துமே மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. முருங்கை மரங்களில் இலைகளை மறைத்தபடி பூக்கள் பூத்துக் குலுங்கும் பருவம் இது. அந்தந்தப் பருவங்களில் விளைகிறவற்றை உணவாகக் கொள்வதுதான் நம் முன்னோர் வகுத்துவைத்திருக்கும் உணவு முறை. முருங்கை பூ சாதம் சாப்பிடுவதால் வாதம் பிரச்சனையை எளிதில் குணமாகும். முருங்கைப் பூவுடன் சமளவு துவரம்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து பகலில் சாப்பிட்டு வர, உடலில் வலு ஏற்படும். ரத்தம் அதிகரிக்கும்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Murungaipoo Sadam
Yield: 4 People
Calories: 306kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 1 டம்ளர் அரிசி
  • 1/4 கப் கடலை பருப்பு
  • 1/4 கப் பாசிப்பருப்பு
  • 1/4 கப் துவரம் பருப்பு
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 கப் முருங்கை பூ
  • 1/4 கப் பச்சை பட்டாணி
  • 1/2 கப் சின்ன வெங்காயம்
  • 4 பச்சை மிளகாய்
  • 3 தக்காளி
  • 2 டீஸ்பூன் பிரியாணி மசாலா
  • 1 டீஸ்பூன் சிக்கன் மசாலா
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
  • உப்பு தேவையான அளவு
  • கொத்தமல்லி, புதினா சிறிதளவு
  • கடலை எண்ணெய் தேவையான அளவு
  • 2 டீஸ்பூன் நெய்
  • 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 1 பிரியாணி இலை
  • 1/4 டீஸ்பூன் கடுகு

செய்முறை

  • முதலில் முருங்கைப்பூவை சுத்தம் செய்து அலசி வைத்துக் கொள்ளவும்.
  • அரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு பாசிப்பருப்பு இவற்றை ஒன்றாக சேர்த்து கழுவி சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஊறவிடவும்.
  • பின் குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாச்சி பூ, பிரியாணி இலை, சேர்த்து தாளிக்கவும்.
  • பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, புதினா இலை சேர்த்து வதக்கவும்.
  • பின் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தக்காளி மசியும் வரை நன்றாக வதக்கவும்.
  • பின் பிரியாணி தூள், சிக்கன் மசாலா சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்கவும்.
  • பின் முருங்கைப்பூவை சேர்த்து பட்டாணி சேர்த்து நன்கு கிளறி, ஊறவைத்த அரிசி பருப்பை தண்ணீரை வடிகட்டி சேர்த்து நன்கு கிளறவும்.
  • பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 3 விசில் வரை விடவும்.
  • விசில் அடங்கியதும் குக்கரை திறந்து நெய் விட்டு, கொத்தமல்லி தழை தூவி நன்கு கிளறி பரிமாறவும்.
  • அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியமான முருங்கைப்பூ சாதம் தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 306kcal | Carbohydrates: 2.6g | Protein: 17.5g | Fat: 3.6g | Sodium: 1.17mg | Potassium: 145mg | Fiber: 24g | Vitamin A: 151IU | Vitamin C: 2.6mg | Calcium: 19mg | Iron: 4.8mg

இதனையும் படியுங்கள் : சுட சுட சாதத்துடன் ஊற்றி சாப்பிட ருசியான முடக்கத்தான் கீரை ரசம் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! ஒரு தட்டு சோறும் காலியாகும்!