ஒரே மாதிரி வெஜிடேபிள் பிரியாணி சாப்பிட்டு போர் அடிக்குதா! ஒரு முறை இந்த காளான் பிரியாணி இப்படி ட்ரை பண்ணி பாருங்க செம்ம டேஸ்ட்டா இருக்கும்!

- Advertisement -

பிரியாணி எல்லாருக்கும் ரொம்பவே புடிச்ச ஒரு உணவு. என்னதான் இருக்கட்டும் எந்த ஒரு கல்யாண வீடுகளில் எந்த ஒரு நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் அங்க பிரியாணி இருக்கா இல்லையா அப்படிங்கறது மட்டும் தான் எல்லாரோட மைண்டுக்கு வரும். அப்புறம்தான் அந்த நிகழ்ச்சியில் எப்படி கலந்து கொள்வது அப்படிங்கறது பத்தி யோசிப்பாங்க.

-விளம்பரம்-

ஏன்னா அந்த அளவுக்கு பிரியாணி நம்ம எல்லாரும் மூளைக்குகளையும் வந்து உக்காந்துருச்சு. இவ்ளோ சுவையா விதவிதமான பொருட்களை வச்சி பிரியாணி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.  பிரியாணி அப்படின்னாலே எல்லாருக்குமே பிடிக்கும் பொதுவாக  அதற்கு தனி மவுசு தான்.

- Advertisement -

அனைவருக்கும் தெரிந்தது போலவே சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி தான் பிரியாணிகளில் பெரும்பாலானோரால் விரும்பி உண்ணபடுகிறது. தமிழ்நாட்டிலும் பலவிதமான பிரியாணிகள் கிடைக்கும் உதாரணமாக செட்டிநாடு பிரியாணி, ஆம்பூர் பிரியாணி மற்றும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி ஆகியவை மிக மிக புகழ்பெற்றது. ஒவ்வொரு பிரியாணியும் ஒவ்வொரு வகையில்  வேறுபட்ட சுவையுடன் இருக்கும்.

இப்படி விதவிதமான பொருட்கள் அசைவ பிரியாணி சைவ பிரியாணி பல வகைகள் இருந்தாலும் சைவ பிரியாணியை அசைவ சுவைல கொடுக்குறதுக்கு இப்போ நிறைய மாற்றங்கள் பயன்படுத்தி செய்து கொண்டு இருக்கிறார்கள். அந்த மாதிரி இன்னைக்கு எல்லாருக்கும் பிடிச்ச ரொம்ப ஸ்பெஷலான ஒரு சைவ பிரியாணி தான் பண்ண போறோம். அந்த பிரியாணி என்ன அப்படின்னு பார்த்தீங்கன்னா அதுதான் காளான் பிரியாணி.

காளான் அப்படிங்கறதுக்கு கொஞ்ச காலமாகவே வழக்கத்துல இருந்து வந்துட்டு இருக்கு. காளான் மேல நிறைய பேருக்கு க்ரேஸ் இருக்கும். அந்த மாதிரி காளானை வச்சு ரொம்பவே சுவையா ஒரு பிரியாணி பண்ணா எப்படி இருக்கும்? எல்லாரும் எப்படி விரும்பி சாப்பிடுவாங்க. வாங்க சுவையான காளான் பிரியாணி எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

-விளம்பரம்-
Print
4.34 from 3 votes

காளான் பிரியாணி | Mushroom Biryani Recipe In Tamil

விதவிதமான பொருட்கள் அசைவ பிரியாணி சைவ பிரியாணி பல வகைகள் இருந்தாலும் சைவ பிரியாணியை அசைவ சுவைலகொடுக்குறதுக்கு இப்போ நிறைய மாற்றங்கள் பயன்படுத்தி செய்து கொண்டு இருக்கிறார்கள்.அந்த மாதிரி இன்னைக்கு எல்லாருக்கும் பிடிச்ச ரொம்ப ஸ்பெஷலான ஒரு சைவ பிரியாணி தான்பண்ண போறோம். அந்த பிரியாணி என்ன அப்படின்னு பார்த்தீங்கன்னா அதுதான் காளான் பிரியாணி.. அந்த மாதிரி காளானை வச்சு ரொம்பவே சுவையா ஒரு பிரியாணிபண்ணா எப்படி இருக்கும்? எல்லாரும் எப்படி விரும்பி சாப்பிடுவாங்க. வாங்க சுவையான காளான்பிரியாணி எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Mushroom Biryani
Yield: 4
Calories: 198kcal

Equipment

  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 1 கப் காளான்
  • 2 கப் பாஸ்மதி அரிசி
  • 2 வெங்காயம்
  • 3 தக்காளி
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1 ஸ்பூன் நெய்
  • 1 துண்டு பட்டை
  • 2 கிராம்பு
  • 1 ஏலக்காய்
  • 1 பிரியாணி இலை
  • 1 கப் புதினா, மல்லி
  • 10 முந்திரிபருப்பு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் காளானை சுத்தம் செய்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பின் வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிசாகவெட்டி பொன்னிறமாக எண்ணெயில் பொரித்து தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் முந்திரிபருப்பை நெய்யில் பொரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • குக்கரை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் சேர்த்து இதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாகவதக்கவும்.வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் தயிர் சேர்த்து அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், உப்புசேர்த்து நன்றாக கலந்து குக்கரில் வதக்கிய வெங்காயத்துடன் சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும்.
  • பிறகு அதில் நறுக்கிய கொத்தமல்லி, புதினா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும். ஊற வைத்த அரிசியை வடிகட்டி இந்தக் கலவையோடு சேர்த்து கிளறி விட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துசுத்தம் செய்து வைத்துள்ள காளானை இந்த அரிசியோடு சேர்த்து  குக்கரை மூடி விடவும்.
  • மிதமான தீயில் வைத்து 3 விசில் வரை வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.பின்னர் குக்கர் மூடியைத் திறந்த பொரித்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் முந்திரி பருப்பினை மேலாகத்தூவி கிளறிவிட்டு சூடாக பரிமாறினால் சுவையான காளான் பிரியாணி தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 198kcal | Carbohydrates: 76g | Cholesterol: 69mg | Potassium: 208mg | Iron: 1.29mg

இதையும் படியுங்கள் : ருசியான காளான் போண்டா ஒரு முறை இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ருசியாக இருக்கும்!