அடுத்தமுறை மஷ்ரூம் வாங்கினால் இப்படி ஒரு தரம் சாப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க! கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!

- Advertisement -

சப்பாத்தி, சாதத்திற்கு 10 நிமிடத்தில் நாவூரும் சுவையான மஷ்ரூம் சாப்ஸ்  இப்படி செய்து பாருங்கள் வீடே மணக்கும்! அசைவ சாப்பாட்டில் வாசமும் வீட்டில் வீசக்கூடாது. இருந்தாலும் என்ன செய்வது. நம் வீட்டில் இருக்கும் குழந்தைகள் ஆண்கள் இவர்களுக்கு அசைவம்தானே அதிகமாக பிடிக்கின்றது.

-விளம்பரம்-

நாவை கட்டுப் படுத்திக் கொள்ள முடியவில்லை. அதனால் உங்க வீட்ல அசைவ சாப்பாட்டுக்கு பதிலாக, இந்த மஷ்ரூம் சாப்ஸ் ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா அருமையாக இருக்கும். சுவையான மஷ்ரூம் சாப்ஸ் எப்படி செய்வது.

- Advertisement -

ஒரு சட்னி அரைக்கின்ற நேரத்தில் சூப்பரான சாப்ஸ் வைக்க முடியுமா என்று கேட்டால் நிச்சயம் முடியும். அதுவும் வித்தியாசமான முறையில் மசாலா பொருட்களின் வாசத்தோடு ஒருமுறை இப்படி மஷ்ரூம் சாப்ஸ் வச்சு பாருங்க.  தோசை, சப்பாத்தி, நான் ரொட்டி இவைகளுக்கு இந்த சைட் டிஷ் அசத்தலாக இருக்கும். பக்கத்து வீட்டு வரைக்கும் வாசம் வீசக்கூடிய இந்த மஷ்ரூம் சாப்ஸ் இப்போது நாமும் தெரிந்து கொள்வோமா.

Print
5 from 1 vote

மஷ்ரூம் சாப்ஸ் | Mushroom Chops Recipe In Tamil

நாவை கட்டுப் படுத்திக் கொள்ள முடியவில்லை. அதனால் உங்கவீட்ல அசைவ சாப்பாட்டுக்கு பதிலாக, இந்த மஷ்ரூம் சாப்ஸ் ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க.நிச்சயமா அருமையாக இருக்கும். சுவையான மஷ்ரூம் சாப்ஸ் எப்படி செய்வது. ஒரு சட்னி அரைக்கின்ற நேரத்தில் சூப்பரான சாப்ஸ் வைக்கமுடியுமா என்று கேட்டால் நிச்சயம் முடியும். அதுவும் வித்தியாசமான முறையில் மசாலா பொருட்களின்வாசத்தோடு ஒருமுறை இப்படி மஷ்ரூம் சாப்ஸ் வச்சு பாருங்க.  தோசை, சப்பாத்தி, நான் ரொட்டி இவைகளுக்கு இந்த சைட்டிஷ் அசத்தலாக இருக்கும். பக்கத்து வீட்டு வரைக்கும் வாசம் வீசக்கூடிய இந்த மஷ்ரூம்சாப்ஸ் இப்போது நாமும் தெரிந்து கொள்வோமா.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Side Dish, starters
Cuisine: tamil nadu
Keyword: Mushroom Chops
Yield: 4
Calories: 104kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் காளான்
  • 10 சின்ன வெங்காயம்
  • 1 தக்காளி
  • 5 கறிவேப்பிலை
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு ருசிக்கேற்ப
  • 1 ஸ்பூன் மிளகு
  • 1/2 ஸ்பூன் சோம்பு
  • 1 பட்டை
  • 5 பூண்டு
  • 1 ஸ்பூன் இஞ்சி
  • 1 ஸ்பூன் தேங்காய் துருவல்      

செய்முறை

  • காளானை நான்கு துண்டுகளாக (சிறியதாக இருந்தால் இரண்டாக) நறுக்குங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள்.
  • அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைஸாக அரைத்தெடுங்கள். 5 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை போட்டு, வெங்காயம், தக்காளி போட்டு வதக்குங்கள்.
  • அரைத்த மசாலா, மஞ்சள்தூள், உப்பு எல்லாவற்றையும் போட்டு நன்கு எண்ணெய் சுக்கி வரும் வரை கிளறுங்கள்.
  • பச்சை வாசனை போனபிறகு, காளானைப் போட்டு நன்கு கிளறி, காளான் வெந்து, எண்ணெய் கசிந்தவுடன் இறக்குங்கள்,

Nutrition

Serving: 100g | Calories: 104kcal | Carbohydrates: 18g | Protein: 6g | Fat: 0.6g | Fiber: 6g