காளான் பட்டாணி குழம்பு, இப்படி மசாலா சேர்த்து  ஒரு முறை செய்து பாருங்க! இதன் சுவைக்கு உங்கள் நாக்கு அடிமை!

- Advertisement -

பொதுவாக எல்லோர் வீட்டிலும் குருமா வைப்போம். ஆனால் மஷ்ரூம் பட்டாணி குழம்பு கொஞ்சம் வித்தியாசமான முறையில், மசாலாவை வித்தியாசமாக அரைத்து ஊற்றி இப்படி வைத்து பாருங்கள். சூப்பரா இருக்கும். சூடான சாதம், பரோட்டா சப்பாத்தி இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பரான சைட் டிஷ் இது. கொஞ்சம் வித்தியாசமாக இந்த காளான் குழம்பில்  கொஞ்சம் பச்சை பட்டாணியை சேர்க்கப் போகின்றோம்.

-விளம்பரம்-

இந்த மசாலா சேர்த்து ஒரு முறை காளான் பட்டாணி குழம்பு வைத்து தான் பாருங்களேன். இதன் சுவைக்கு உங்கள் நாக்கு அடிமை. அசைவம் என்றாலே அனைவருக்கும் அலாதி பிரியம் தான். ஏனென்றால் இவற்றில் சேர்க்கப்படும் மசாலாக்களின் சுவை ஒரு வித நறுமணத்தை ஏற்படுத்துகிறது. இந்த வாசனை வந்து விட்டாலே வீட்டில் உள்ள குழந்தைகள் அம்மா இன்று என்ன சிக்கன் குழம்பா? மட்டன் குழம்பா? என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள். அந்த அளவிற்கு இவற்றில் சேர்க்கப்படும் மசாலாக்கள் மிகவும் அருமையான நறுமணத்தை கொடுக்கின்றன.

- Advertisement -

மசாலா சுவையில் இப்படி காளான் சேர்த்து ஒருமுறை குழம்பு செய்து பாருங்கள், வாசனை மட்டுமல்ல சாப்பிடவும் அசைவம் சாப்பிடுவது போல் தான் இருக்கும். எனவே குழந்தைகள் இதனை விருப்பமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த காளான் பட்டாணி குழம்பை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Print
No ratings yet

காளான் பட்டாணி குழம்பு | Mushroom Peas Gravy In Tamil

பொதுவாக எல்லோர் வீட்டிலும் குருமா வைப்போம்.ஆனால் மஷ்ரூம் பட்டாணி குழம்பு கொஞ்சம் வித்தியாசமான முறையில், மசாலாவை வித்தியாசமாகஅரைத்து ஊற்றி இப்படி வைத்து பாருங்கள். சூப்பரா இருக்கும். சூடான சாதம், பரோட்டா சப்பாத்தி,இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பரான சைட் டிஷ் இது. கொஞ்சம் வித்தியாசமாக இந்த காளான்குழம்பில்  கொஞ்சம் பச்சை பட்டாணியை சேர்க்கப்போகின்றோம். வாருங்கள் இந்த காளான் பட்டாணிகுழம்பை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Gravy
Cuisine: tamil nadu
Keyword: Mushroom Peas Gravy
Yield: 4
Calories: 198kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 100 கிராம் பச்சை பட்டாணி
  • 1/4 கிலோ காளான்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 8 முந்திரி
  • 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் மல்லித் தூள்
  • 1/4 டீஸ்பூன் கரம் மசாலா
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • 1/4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • எண்ணெய் தேவைக்கேற்ப
  • உப்பு தேவைக்கேற்ப

செய்முறை

  • முதலில் பட்டாணியை வேக வைத்துக் கொள்ள வேண்டும். காளானை நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய காளானை சேர்த்து 5 நிமிடம் வதக்கி, இறக்க வேண்டும்.
     
  • பின்பு மிக்ஸியில் முந்திரி மற்றும் தேங்காய் சேர்த்து, வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு நைஸாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
  • அடுத்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும். பின் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
  • மசாலாக் களானது நன்கு ஒன்று சேர்ந்ததும், அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, கலவையும் எண்ணெயும் தனியாக பிரியும் வரை வதக்க வேண்டும்.
  • பின்பு அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து 3 நிமிடம் கிளறி, 3 கப் தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும். இறுதியில் காளான் மற்றும்
  • பட்டாணியை சேர்ந்து தேவையான அளவு உப்பு போட்டு, 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இப்போது சுவையான காளான் பச்சை பட்டாணி குழம்பு ரெடி.

செய்முறை குறிப்புகள்

காளானுக்கு பதிலாக காலிஃப்ளவர் சேர்த்தும் செய்யலாம்.

Nutrition

Serving: 100g | Calories: 198kcal | Carbohydrates: 76g | Cholesterol: 69mg | Potassium: 208mg | Iron: 1.29mg

இதையும் படியுங்கள் : கிராமத்து ஸ்டைலில் ருசியான காளான் குழம்பு இப்படி ட்ரை பண்ணி பாருங்க! சுட சுட சாதத்துடன் சாப்பிட பக்காவாக இருக்கும்!